முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எச்சரிக்கை... அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் இந்த 5 ஆபத்துகள் ஏற்படுமாம்..!

எச்சரிக்கை... அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் இந்த 5 ஆபத்துகள் ஏற்படுமாம்..!

சிறுநீரை அடக்குதல்

சிறுநீரை அடக்குதல்

நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் மேலும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் பருகியுள்ளீர்கள் மற்றும் உங்கள் சிறுநீர்ப்பை கட்டுப்பாடு எவ்வளவு வலிமையானது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

பெரும்பாலானோருக்கு பயணத்தின் போதும் அல்லது புதிதாக ஒரு இடத்திற்கு சென்றுள்ள போதும் அங்குள்ள பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்துவது என்பது பிடிக்காது. எனவே இயற்கை உபாதையை கட்டுப்படுத்திக் கொண்டு நாம் தங்கியுள்ள ஓட்டலுக்கு வந்த பிறகே சிறுநீர் கழிப்பார்கள். இப்படி அவசர காலத்தில் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதால், வயிறே வெடித்து விடுவது போல் வலியை அனுபவித்திருப்போம்.

நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் மேலும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் பருகியுள்ளீர்கள் மற்றும் உங்கள் சிறுநீர்ப்பை கட்டுப்பாடு எவ்வளவு வலிமையானது என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. சிறுநீர் கழிப்பதற்கான உங்கள் தூண்டுதலைக் கட்டுப்படுத்துவது நன்மை பயக்கும் என்றாலும், தேவைப்படும்போது சிறுநீர் கழிப்பதும் அவசியம். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய சில உண்மைகளை இங்கே பகிர்ந்துள்ளோம்.

சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் 5 பாதிப்புகள்:

சிறுநீரகக் கற்கள்:

தினமும் மனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்சிதை மாற்றத்திற்குப் பிறகு எஞ்சுகின்ற யூரிக் அமிலம், பாஸ்பேட், ஆக்ஸலேடர், போன்ற கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது. இவை வெளியேற்றப்படாத போது சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. இது மிகவும் வலி தரக்கூடியது, மேலும் சிறுநீரக கற்கள் பெரிதாகிவிட்டால் அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலையும் ஏற்படலாம். இது சிறுநீரில் தொற்று மற்றும் ரத்த கசிவுவை ஏற்படுத்தக்கூடும். இந்த பிரச்சனைக்கான பொதுவான காரணங்கள் மிக குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் சிறுநீரை அடக்கி வைத்திருப்பது ஆகும்.

சிறுநீர் தொற்று:

சிறுநீர் கழிப்பதை அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்புகளை அதிகரிக்கிறது. சிறுநீரக பாதையில் உள்ள பாக்டீரியாக்கள், வழக்கமாக சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகின்றன. சிறுநீர்ப்பையில் சிறுநீரை தேக்கி வைக்கும் போது, ​​பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீரின் எந்தப் பகுதியிலும் தொற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. UTI எனப்படும் சிறுநீரகப் பாதை நோய் தொற்று மிகவும் வலி தரக்கூடியது, இது ஒருமுறை ஏற்பட்டால் மீண்டும், மீண்டும் ஏற்படும் அபாயம் உண்டு.

யராவது திடீரென இரத்த அழுத்தம் குறைவாகி மயக்கம் போட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்..?

சிறுநீர்ப்பை வெடிப்பு:

சிறுநீர்ப்பை வெடிப்பு என்பது மிகவும் அரிதானது தான் என்றாலும், சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைத்திருந்தால், சிறுநீர்ப்பை வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை வெடிப்பு ஏற்படும் பட்சத்தில், வயிற்றுக்குள் சிறுநீர் நிரம்புகிறது. சிறுநீரை நீண்ட நேரம் வைத்திருப்பது சிறுநீர்ப்பையை நீட்டித்து பலவீனமடைய செய்கிறது.

வலி:

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் போது, இடம் அல்லது சுகாதார வசதி கருதி அதனை அடக்கி வைக்க நேரலாம். அப்படி சிறுநீர் கழிக்காமல் அதிக நேரம் அடக்கி வைத்திருப்பது கடுமையான வலியை கொடுக்கக்கூடியது. ஏனெனில் தசைகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் மற்றும் அதிக அளவு சிறுநீரை உள்ளிழுக்க வேண்டும். சிறுநீர் சிறுநீர்ப்பையை நிரப்பும்போது, ​​​​அது நீட்சி அடைகிறது. சிறுநீரைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து சிறுநீர்ப்பையை நீட்சி அடைந்து கொண்டே செல்கிறது, இதனால் வலி ஏற்படுகிறது.

சிறுநீரை அடக்கமுடியாமல் போவது:

சிறுநீரை நீண்ட நேரம் வைத்திருப்பது இடுப்புத் தள தசைகளை பலவீனப்படுத்தும். இது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சிறுநீரை கட்டுப்படுத்தி வைக்காமல், உங்களையும் மீறி வெளியேற வழிவகுக்கும். இது ஒரு தர்ம சங்கமடமான நிலைக்கு உங்களை தள்ளலாம்.

First published:

Tags: Kidney, Urine