லாக்டவுன் விளைவுகள் : திட்டமிடாத கருத்தரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..?
லாக்டவுன் விளைவுகள் : திட்டமிடாத கருத்தரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..?
திருமணமான பெண்களை பொறுத்தவரை கருத்தரிப்பது என்பது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். மருத்துவ வளர்ச்சி பெருகிவிட்ட இந்த காலகாட்டத்தில் ஒரு பெண் கருவுற்றிருப்பதை வீட்டில் இருந்தபடியே ப்ரெக்னன்சி கிட் (Pregnency Kit) மூலம் தானாகவே சோதித்து அறிந்து கொள்ள முடியும். இது போன்ற தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் எளிதில் சோதனைகளை செய்துகொள்ளலாம்.
லாக்டவுன் 6 மாதங்கள் நீடித்தால் 7 மில்லியன் பெண்கள் திட்டமிடாத கருத்தரித்தலால் பாதிக்கப்படுவார்கள்
கொரோனா பாதிப்பால் பலரும் வீட்டில் உள்ள நிலையில் திட்டமிடப்படாத , தேவையற்ற கருத்தரித்தல் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்த கொரோனா ஊரடங்கு பெண்களை மனதளவிலும் , உடலளவிலும் அதிகமாக பாதித்துள்ள நிலையில் தற்போது திட்டமிடாத கருத்தரித்தல் மேலும் அவர்களை பலவீனமாக்கியுள்ளது என்று கூறியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் கருத்தடை பொருட்களின் தட்டுப்பாடு நிலவியுள்ளது. இதனால் பலரும் ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தாமலேயே உடலுறவில் ஈடுபடுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக்டவுன் 6 மாதங்கள் நீடித்தால் 114 குறைந்த மற்றும் நடுத்தர நாடுகளில் 47 மில்லியன் பெண்கள் கருத்தடை பொருட்களை வாங்க முடியாத நிலை உண்டாகும். இதனால் 7 மில்லியன் பெண்கள் திட்டமிடாத கருத்தரித்தலால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது.
இதனால் கருக்கலைப்பு, கரு பாதிப்பு போன்றவை அதிக அளவில் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. அதேபோல் பாலியல் தொழில் விடுதிகளும் மூடப்பட்டுள்ளதால் பாலியல் வன்முறைகளும் 15 மில்லியனாக அதிகரிக்கும் என கூறியுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.