#Social Distancing: தனிமைப்பட்டு இருத்தலுக்கு சில யோசனைகளும், யுனிசெஃப்பின் அறிவுரையும்..!

யூனிசெஃப் போன்ற  பல உலகளாவிய பொது நிறுவனங்கள் கோரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

#Social Distancing: தனிமைப்பட்டு இருத்தலுக்கு சில யோசனைகளும், யுனிசெஃப்பின் அறிவுரையும்..!
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா விழிப்புணர்வு விஷயங்களாக தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுவது, கைகளை கழுவுதலும், இருமல் தும்மல் போன்ற நீர்த்திவலை தொற்றில் இருந்து தப்பும் வகையில் தள்ளி இருப்பதும், தனித்திருப்பதும்தான்.

வீட்டிலேயே உங்களை இருக்குமாறு அரசும், மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அது தண்டனை அல்ல, வீட்டுச் சிறையும் அல்ல. நீங்கள் உங்கள் காத்துக்கொள்வதற்கான மிகச்சிறந்த வழியும் அதுதான்.

கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், அத்தியாவசியத் தேவைகளாலும் நான் இந்த சோஷியல் டிஸ்டன்சிங் என்னும் தனிமைப்படுத்தலை மதிக்கவில்லையெனில், பாதிப்பு நமக்கும் நம்மைச் சேர்ந்தவர்களுக்கும்தான்.


1. திடீரென்று ஏற்பட்டிருக்கும் இந்த சூழலால் பதற்றம் ஏற்படுவது மிக இயல்பான விஷயம்தான். ஆனால், இந்தத் தனிமை நம் உயிர்காப்பதற்காக என்பதை நினைவில் கொள்ளவும்.

2. வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், உங்களின் முழு வேலை நேரத்தையும் வேலைக்காக கொடுத்துவிட்டு மற்ற நேரங்களில் குடும்பத்தினரில் நேரம் செலவிடவும்.

3.மேலும், அசாதாரண சூழலால் ஏற்படும் ஒருவித கவலையையும், பதற்றத்தையும் தனிப்பதற்காக உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தலாம்.4. இது லைஃப்ஸ்டைல் விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான நேரம். இந்த நீண்ட எதிர்பாராத இடைவேளையை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்களே சமைப்பது, யோகா, ஓவியம் என உங்களின் தனித்தன்மையை கொஞ்சம் மிளிரச் செய்யும் வாய்ப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

சோஷியல் டிஸ்டன்ஸிங் என்னும் தனிமைப்பட்டிருத்தலை வலியுறுத்தும் நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதற்காக, பிரபலங்கள் வைத்து யூனிசெஃப் போன்ற  பல உலகளாவிய பொது நிறுவனங்கள் கோரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

https://tamil.news18.com/news/tamil-nadu/coronavirus-outbreak-heres-what-you-can-and-cannot-do-1-in-locked-down-1-districts-chennai-kanchipuram-erode-mg-270749.html
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்