ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக அளவு வேறுபாடும். வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மரபு ரீதியாக என்று பலவிதமான காரணங்கள் ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும். மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும் காரணத்தால், மார்பக ஆரோக்கியம் பற்றி தற்போது அதிக விழிப்புணர்வு காணப்படுகிறது. இளம் பெண்ணுக்கு மார்பகம் வளரத்தொடங்கும் காலம் முதல், பூப்படைதல், கர்ப்பகாலம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மார்பகத்தின் அளவு வேறுபாடும்.
மார்பகத்தில் சின்ன மாற்றம் தென்பட்டாலும் கூட, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதே நேரத்தில், பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சந்தேகம், மார்பங்கள் ஒரே அளவில் இல்லையே, இது இப்படித்தான் இருக்குமா, இல்லை ஏதும் பிரச்சனையா? எல்லா பெண்களுக்கும் மார்பகங்கள் ஒரே அளவில் ஒரே வடிவில் இருக்காது!
நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பெண் மகப்பேறு மருத்துவரத் துறையின் மூத்த ஆலோசகரான மருத்துவர் நேகா குப்தா, ‘ஒரு பெண்ணின் மார்பகத்தின் அளவு மற்றும் தோற்றம் உடலில் இருக்கும் ஹார்மோன்கள், அந்த பெண் பூப்படைதல், உணவு பழக்கம் மற்றும் ட்ராமா என்று கூறப்படும் அதிர்ச்சியான சம்பவத்தை எதிர்கொள்வது ஆகியவற்றால் வேறுபடும்’ என்று தெரிவித்துள்ளார்.
இயற்கையாகவே மார்பக அளவுகள் வேறுபாடும்
ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களுமே ஒரே அளவில், ஒரே வடிவத்தில் இருக்காது. ஒரு மார்பகம் சிறிய அளவிலும் ஒரு மார்பகம் பெரிய அளவிலும் காணப்படுவது மிக மிக இயல்பானது. அதாவது மார்பகங்கள் என்பது ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்கள் கிடையாது, அவற்றை சகோதரிகள் என கூறலாம். இயற்கையாகவே பெண்களுக்கு மார்பகத்தின் அளவுகள் இப்படித்தான் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்..? கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்...
மார்பக அளவு சமமாக இல்லாதது பற்றி மருத்துவர் கூற்று
மார்பகங்களின் அளவுகள் சமமாக இல்லை என்பது பற்றி இன்ஸ்டாகிராமில், பெண்கள் ஆரோக்கியம் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் டாக்டர் தனாயா பகிர்ந்து கொண்ட ‘பிரஸ்ட், பூப்ஸ் என்று கூறப்படும் மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும் ஒன்று பெரியதாகும் இருப்பது பற்றி கவலையே பட தேவை இல்லை. பெரும்பாலானவர்களுக்கு வலது பக்க மார்பகம் பெரிதாகவும், இடது பக்க மார்பகமும் சிறிதாகவும் இருக்கும். இதுவும் இயல்பானதுதான்’ என்று அவர் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
இரண்டு மார்பகங்களுக்கு இடையேயான வேறுபாடு என்பது மிகச் சிறிய அளவில் காணப்படலாம் அல்லது உள்ளாடை அணியும் பொழுது அளவிடக்கூடிய கப் சைஸ் என்று கூறப்படும் அளவில், ஒரு கப் சைஸ் அளவுக்கு கூட பெரியதாக இருக்கலாம். உதாரணமாக வலது பக்க மார்பகம் 32B என்ற அளவிலும், இடது பக்க மார்பகம் 32C என்ற அளவிலும் வேறுபடுவது இயல்பானதுதான். ஆனால் இந்த மாற்றம் திடீரென்று காணப்பட்டால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும், என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
மார்பக புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கும் உணவுகள்...30 வயதுக்கு பின் அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது..!
மார்பக அளவு வேறுபாடு எவ்வளவு ஆபத்தானது
திடீரென்று ஒரு மார்பகத்தின் அளவு சட்டென்று பெரிதாக அல்லது வேறுபட்டு காணப்படுவது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மார்பகத்தின் அடர்த்தி குறைவது அல்லது இரண்டு மார்பகங்களும் உள்ள அடர்த்தி மிகவும் வேறுபட்டு காணப்படுவது, மார்பக காம்பிலிருந்து திரவம் வடிவது, உட்புறமாக வளைந்திருப்பது உள்ளிட்ட மாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.