Home /News /lifestyle /

அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்... உயிரை பறிக்கும் இதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் மருத்துவர்கள்

அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்... உயிரை பறிக்கும் இதய நோயை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் மருத்துவர்கள்

மாரடைப்பு

மாரடைப்பு

நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் அவசியமான ஒன்று. ஆனால் அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் நம்முடைய உயிரைக்கூட பறிக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் நம்மை அறியாமல் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலினால், உயிரைக்கூட பறிக்கும் இதய நோய் ஏற்பட அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே சமயம் உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ரால் தேவை எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் அவசியமான ஒன்று. ஆனால் அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ரால் நம்முடைய உயிரைக்கூட பறிக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சரி அளவுக்கு அதிகமான கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை நாம் கடைப்பிடித்தாலும் சரியான அளவு கொலஸ்ட்ரால் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கையில் இதனை எப்படி கட்டுக்குள் கொண்டுவருவது? எப்படி நல்ல கொலஸ்ட்ரால் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் என்பதைக் கண்டறிவது குறித்து மருத்துவர்கள் கூறிய கருத்துக்கள் குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்வோம்.



நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால்:

உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் போதுமான அளவு இல்லாவிடில், ஆரோக்கியமான செல்களை உருவாக்க முடியாது. பொதுவாக நாம் கொலஸ்ட்ரால் குறைவான அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதம் (LDL- low density lipoprotein) அதிக அடர்த்திக்கொண்ட புரதம் (HDL -high density lipoprotein),மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (VLDL) மற்றும் ட்ரைகிளிசரைடுகள் என அளவிடப்படுகிறது. இவை கொலஸ்ட்ரால் பின்னங்களில், HDL என்பது நல்ல அல்லது பாதுகாப்பு கொலஸ்ட்ராலாகவும், LDL, VLDL மற்றும் ட்ரைகிளிசரைடுகள் கெட்ட கொழுப்பாகவும் கருதப்படுகிறது.

பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் மோசமான உணவுப் பழக்கங்கள்... அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

சாதாரணமாக கருதப்படும் கொழுப்பின் முழுமையான மதிப்பு, வயது மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை பயன்பாடு அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற பிற ஆபத்துக் காரணிகளின் இருப்பைப் பொறுத்து மாறுபடக்கூடும். எனவே எல்டிஎல் மற்றும் எச்டிஎல் விகிதத்தில் இருந்து கார்டியோவாஸ்குலர் ஆபத்து மதிப்பிடப்படுகிறது. பொதுவாக 3.5 க்கும் குறைவாகவும் 2.5 க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகக் காரணம் என்ன?

நம்முடைய உடலில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களை கிளைகோஜனாகவோ அல்லது கொழுப்பாகவோ சேமிக்கிறது. எனவே இவை அதிகரிக்கும்போது கல்லீரலில் கொலஸ்ட்ராலாக மாற்றம் அடைகிறது. மேலும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து சில ஆண்டுகளில் அடைப்பாகவும் (atherosclerosis) மாறுகிறது. குறிப்பாக அதிகப்படியான கொலஸ்ட்ரால் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் நமக்கு வராது. எனவே அவ்வப்போது உங்களது உடலை வழக்கமான பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை... அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பதால் இந்த 5 ஆபத்துகள் ஏற்படுமாம்..!

இதோடு மட்டுமின்றி சிலருக்கு குடும்ப ரீதியாகவும் உடல் பருமன் ஏற்படுவதோடு அதிக கொலஸ்ட்ரால் நமக்கு ஏற்படுகிறது. எனவே இது போன்று உங்களது குடும்பத்தில் யார் இருந்தாலும் வழக்கமான உடல் பரிசோதனைகள் செய்வதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.



கெட்ட கொலஸ்ட்ராலை தவிர்க்கும் முறை:

உடலில் உருவாகும் தேவையற்ற கொலஸ்ட்ராலை தடுப்பதற்கு உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். இதோடு அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகள் மற்றும் பேக்கரியில் விற்பனையாகும் பொருள்கள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் கீரைகள், பழங்கள், முந்திரி, அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் போன்றவை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது தேவையற்ற கொலஸ்ட்ரால் உருவாவதை கட்டுப்படுத்துகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cholesterol, Heart disease

அடுத்த செய்தி