ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரோல்-ஆன் டியோடரன்ட்டை பயன்படுத்தினால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? உண்மை என்ன!

ரோல்-ஆன் டியோடரன்ட்டை பயன்படுத்தினால் மார்பக புற்றுநோய் ஏற்படுமா? உண்மை என்ன!

ரோல்-ஆன் டியோடரன்ட்

ரோல்-ஆன் டியோடரன்ட்

அன்டர்ஆர்ம் டியோடரன்ட் தொடர்பாக மக்களிடையே இருக்கும் பயம் மற்றும் கவலை என்ன தெரியுமா? இந்த டியோடரன்ட்களில் உள்ள அலுமினியம் உள்ளடக்கம் குறிப்பாக (aluminium content), உடலால் உறிஞ்சப்பட்டு மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது தான். இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று தெரிந்து கொள்ள நினைக்காமல் பலர் அன்டர்ஆர்ம் டியோடரன்ட் தயாரிப்புகளை பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைனில் உடல்நலம் தொடர்பான பல தவறான தகவல்களும், வதந்திகளும் பல ஆண்டுகளாக பரவலாக உள்ளன. அதிலும் கேன்சர் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் மக்களிடையே பிரபலமாக உள்ளன. அந்த வகையில் மார்பக புற்றுநோயை சுற்றி ஒரு பிரபலமான கட்டுக்கதை உள்ளது.

அன்டர்ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தினால் பிரஸ்ட் கேன்சர் ஏற்படலாம் என்பதுதான் அது. இதன் விளைவாக அன்டர்ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தும் விருப்பம் இருந்தாலும் பலரும் இத்தகைய தயாரிப்புகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். அன்டர்ஆர்ம் டியோடரன்ட் தொடர்பாக மக்களிடையே இருக்கும் பயம் மற்றும் கவலை என்ன தெரியுமா?

இந்த டியோடரன்ட்களில் உள்ள அலுமினியம் உள்ளடக்கம் குறிப்பாக (aluminium content) உடலால் உறிஞ்சப்பட்டு மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதுதான். இந்த தகவல் உண்மையா அல்லது பொய்யா என்று தெரிந்து கொள்ள நினைக்காமல் பலர் அன்டர்ஆர்ம் டியோடரன்ட் தயாரிப்புகளை பல ஆண்டுகளாக புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல, வெறும் கட்டுகதையே என்று கூறி இருக்கிறார் பிரபல மருத்துவர் தனயா நரேந்திரா (Tanaya Narendra).

இது தொடர்பான தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், தனது ஃபாலோயர்ஸ்களுக்காக வெளியிட்டுள்ள வீடியோவிற்கு "டியோடரன்ட் உங்களுக்கு கெட்டதா..? மார்பக புற்றுநோயை உண்டாக்குமா..?' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் பேசி இருக்கும் அவர் இந்த தகவல் உண்மையில் ஆன்லைன் மூலம் பரவி வரும் வதந்தி, முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறி இருக்கிறார். அந்த வீடியோவில் பேசி இருக்கும் தனயா நரேந்திரா, டியோடரன்ட்டில் அலுமினியம் இருப்பதால் அது வியர்வை சுரப்பிகளை தடுப்பதோடு உடலில் உறிஞ்சப்பட்டு இறுதியில் டியோ பயன்பாடு மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று லட்சக்கணக்கான மக்கள் நம்பி வருகின்றனர். உண்மை என்னவென்றால் அன்டர்ஆர்ம் ரோல்-ஆன் டியோடரன்ட்கள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டு உள்ளார்.


நீங்கள் இந்த தகவல் பற்றி கேள்விப்பட்டதால் அன்டர்ஆர்ம் டியோ பயன்படுத்தாமல் இருந்தால், நிச்சயம் உங்களுக்கு இருப்பது தேவையற்ற பயம் தான். ஏனென்றால் ஆய்வுகளின்படி இந்த வகை டியோடரன்ட்களில் 0.012%-க்கும் குறைவான மிக சிறிய அளவு அலுமினியம் கன்டென்ட்தான் சேர்க்கப்பட்டு வருகிறது. இவ்வளவு சிறிய அளவு அலுமினியம் கன்டென்ட்டால் நிச்சயமாக நம் உடலில் கேன்சரை ஏற்படுத்த முடியாது.

எனவே அன்டர்ஆர்ம் டியோ பயன்படுத்தினால் கேன்சர் வந்து விடுமோ என்ற அச்சம் கொண்டுள்ளவர்கள் இனி கவலைப்படாதீர்கள். உங்களுக்கு தேவையான அளவு அதை பயன்படுத்துங்கள் என்று தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். மக்களிடையே நிலவி வரும் இந்த தேவையற்ற பீதியால் ,நேச்சுரல் அல்லது அலுமினியமற்ற டியோக்களை சில பிராண்ட்கள் அதிக விலைக்கு விற்று வருகின்றன. இயற்கையாக பெறப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் டியோக்களை வாங்கி பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. நானும் கூட பயன்படுத்துகிறேன். ஆனால் ஒரு வதந்தியை வைத்து கொண்டு அதை நிஜமென்று நம்பி விலையுயர்ந்த தயாரிப்புகளை நாம் ஏன் வாங்க வேண்டும்.!

Also Read : டியோடரன்ட் கிரீம் என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்த வேண்டும்..? தெரிந்து கொள்ளுங்கள்

எனவே அறிவியல் ஆதாரமற்ற முட்டாள்தனமான தகவல்களை உண்மையென நம்பி ஏமாறாதீர்கள். எனவே அன்டர்ஆர்ம் ரோல்-ஆன்ஸ் அல்லது ஸ்ப்ரேகளை பயன்படுத்துவதில் தயக்கம் வேண்டாம் என்றும் தனயா நரேந்திரா கூறி இருக்கிறார். இவரின் இந்த கருத்தை ஆமோதித்துள்ள மூத்த மருத்துவர் டாக்டர் தேஜி தவானே, அன்டர்ஆர்ம் டியோ மற்றும் வாசனை திரவியங்களில் உள்ள அலுமினிய கலவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Cancer, Deodorant, Skin allergy