Home /News /lifestyle /

வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது..?

வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது..?

வெப்ப ம் தொடர்பான நோய்கள்

வெப்ப ம் தொடர்பான நோய்கள்

கடுமையான வெப்பப்பத்திற்கிடையே சுயநினைவு இழப்பு அல்லது மயக்கம், அதி தீவிர காய்ச்சல், தீவிர நீர்ப்போக்கு மற்றும் குறைவான சிறுநீர் வெளியேறுவது போன்ற சிக்கல்கள் காரணமாக பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். 

அக்னி நட்சத்திரம் முடிந்து பல வாரங்கள் ஆகியும் இன்னும் நம்மை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தென்னிந்தியாவை விட வடமேற்கு இந்திய பகுதிகளில் வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. எனவே வெப்பம் தொடர்பான நோய்களால் மக்கள் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

வெப்பம் தொடர்பான நோய்கள் பல வடிவங்களில் ஏற்படுகிறது. எளிமையானது முதல் அதிக காய்ச்சலில் இருந்து வெப்ப சோர்வு, மயக்கம் தாக்குதல் மற்றும் பிற தீவிர நிலைகள் வரை. கடுமையான வெப்பப்பத்திற்கிடையே சுயநினைவு இழப்பு அல்லது மயக்கம், அதி தீவிர காய்ச்சல், தீவிர நீர்ப்போக்கு மற்றும் குறைவான சிறுநீர் வெளியேறுவது போன்ற சிக்கல்கள் காரணமாக பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சமீப நாட்களாக வெப்பம் தொடர்பான நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக டெல்லி ஹோலி ஃபேமிலி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை மருத்துவத் துறை தலைவர் சுமித் ரே குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சுமித் ரே-யின் கூற்றுப்படி பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் வயிற்றுப்போக்கு, நீரிழப்பு அல்லது காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். எவ்வாறாயினும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுடன் யாரும் தங்களது மருத்துவமனையில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

இதனிடையே ஜெய்ப்பூரில் உள்ள நாராயணா மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் டாக்டர் அஜய் நாயர் கூறுகையில், வெப்பம் தொடர்பான நோய்களால் சமீப நாட்களாக வெளிநோயாளர் பிரிவில் (OP) நோயாளிகளின் எண்ணிக்கை 20-25% அதிகரித்துள்ளது. இயல்பை விட அதிக வெயிலில் ஒருவர் செல்லும் போது சில நேரங்களில் உடலில் எதிர்விளைவுகள் ஏற்படும். இதன் காரணமாக ஒரு நபர் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) , வெப்ப பிடிப்புகள் அல்லது வெப்ப சோர்வை அனுபவிக்கலாம் என்றார். நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 10-15 நோயாளிகள் வெப்ப சோர்வு (heat exhaustion) அறிகுறிகளுடன் ( தலைவலி, காய்ச்சல், தலைச்சுற்றல், அதிக வியர்வை) சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கூற்றுப்படி, மக்களிடம் வெப்பம் சார்ந்த நோய்கள் குறித்து அதிக விழிப்புணர்வு உள்ளது. இதனால் அதிக வெப்பம் இருந்தாலும் இதுவரை மிக கடுமையான பாதிப்புகள் இல்லை என்கிறார்கள். குமட்டல், வாந்தி, மற்றும் மீண்டும் மீண்டும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் அறிகுறிகள் மேலும் நீரிழப்புக்கு காரணமாகின்றன. அதே போல ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்து கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நீரிழப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் அல்லது ஹார்ட் ஸ்ட்ரோக் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை மோசமாக்கும் 5 தவறுங்கள்... இன்றே கைவிடுங்கள்...

வெப்ப அழுத்தத்தை குறைக்க..

கடும் வெப்பத்தை சமாளிக்க உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதே சிறந்த வழி. ஹைட்ரேஷன் என்பது தண்ணீரை மட்டுமே அதிகம் குடிக்க வேண்டும் என்பதல்ல. லெமன் ஜூஸ், இளநீர் போன்ற எளிய திரவங்களையும் டயட்டில் சேர்க்க வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது 3 - 4 லிட்டர் தண்ணீர் மற்றும் திரவங்களை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

வெளியே செல்லும் முன் சன்ஸ்கிரீன், தொப்பி அல்லது ஹெட் ஸ்கார்ஃபை பயன்படுத்த வேண்டும், தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். நீரிழப்பை ஏற்படுத்துவதால் மதுவை தவிர்க்க வேண்டும். ஒருநாளைக்கு இருமுறை குளிக்கலாம். வெயிலில் சென்று வீடு திரும்பியவுடன் உடனே குளிக்காமல் வியர்வை அடங்கிய பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.



குழந்தைகளிடையே ஹீட் ரேஷ் மற்றும் ஹீட் கிராம்ப்ஸ் பொதுவாக காணப்படுகிறது. குழந்தைகளுக்கு பிடிப்புகள் ஏற்பட்டால் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் மற்றும் சோடியம் மற்றும் எலக்ட்ரோலைட்கள் கொண்ட திரவங்களை நிறைய குடிக்க வைக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை விளையாட வெயிலில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். வெப்பம் தொடர்பான நோய்களால் ஏழை மக்களே குறிப்பாகத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக பல மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தீவிர வெப்ப அலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை நீரிழப்பு, வெப்ப பக்கவாதம், சோர்வு, பிடிப்புகள் மற்றும் செரிப்ரோவாஸ்குலர் விபத்துக்களை கூட ஏற்படுத்தும். யாருமே தற்போதைய கடும் வெயிலில் அதிக நேரம் இருக்க வேண்டாம் என்பதே நிபுணர்களின் கருத்து.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Body Heat, Heat Wave

அடுத்த செய்தி