முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எச்சரிக்கை... காலை எழுந்தவுடன் இப்படி உணர்ந்தால் தைராய்டு சுரப்பி குறைபாடாக இருக்கலாம்..!

எச்சரிக்கை... காலை எழுந்தவுடன் இப்படி உணர்ந்தால் தைராய்டு சுரப்பி குறைபாடாக இருக்கலாம்..!

தைராய்டு

தைராய்டு

முதல்நாள் இரவு எந்த அளவுக்கு நன்றாக தூங்குகிறோம் என்பதை பொறுத்துதான் அடுத்த நாள் காலையில் தூங்கி எழும்போது சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறோம் என்பது தெரியவரும். ஆனால் உங்கள் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்னும் பொழுது காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக உணர்வீர்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கண்களுக்கு தெரியாத உயிர்க்கொல்லி நோய் என்று பலவிதமான நோய்கள் இருக்கின்றன. அதே போல, உடல் நலத்தை தீவிரமாக பாதிக்கும் குறைபாடுகளில் ஒன்றுதான் தைராய்டு சுரப்பி குறைபாடு. உடலின் மொத்த செயல்பாடுகளும் சீராக இருப்பதற்கு தைராய்டு உடலுக்கு தேவையான அளவு சுரக்க வேண்டும்.

தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரந்தாலும் ஆபத்து, அதிகமாக சுரந்தாலும் ஆபத்து. எனவே, தைராய்டு கிளாண்டு சரியாக செயல்படவில்லை என்றால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவரின் பரிந்துரையில் உரிய மருந்துகள் சாப்பிட்டால், குறைபாடு தீவிரமாகும் முன்பு தடுக்கலாம்.

அண்டர்-ஆக்டிவ் தைராய்டு என்றால் என்ன?

இதில் அண்டர் ஆக்டிவ் தைராய்டு என்று கூறப்படும் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உடலுக்கு தேவையான அளவுக்கான ஹார்மோன் சுரக்காமல் இருப்பது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கத் தொடங்கி, தீவிரமான நாட்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஹைப்போ தைராய்டு என்ற குறைபாட்டை உண்டாக்கும் இந்த நிலையை, பல விதமான அறிகுறிகள் மூலம் நாம் கண்டறிய முடியும் இருப்பினும். காலையில் நீங்கள் எழுந்து கொள்ளும் போது தைராய்டு போதுமான அளவு செயல்படவில்லை அல்லது போதுமான ஹார்மோன் சுரக்கவில்லை என்பதை இந்த எச்சரிக்கை அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் எழும் போது களைப்பும் சோர்வும்

முதல்நாள் இரவு எந்த அளவுக்கு நன்றாக தூங்குகிறோம் என்பதை பொறுத்துதான் அடுத்த நாள் காலையில் தூங்கி எழும்போது சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறோம் என்பது தெரியவரும். ஆனால் உங்கள் தைராய்டு ஹார்மோன் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்னும் பொழுது காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக உணர்வீர்கள்.

அதிகமாக உடற்பயிற்சி செய்தால் கர்ப்பம் தள்ளிப்போகுமா..? மருத்துவர் விளக்கம்

அதாவது இந்த களைப்பு என்பது திடீரென்று ஒரே நாளில் தோன்றாது. கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் காலை நேரம் பாதிக்கப்படுவதை நீங்கள் உணரலாம். நீங்கள் எவ்வளவு நன்றாக தூங்கினாலும் காலையில் எழுந்து கொள்ளும் போது சோர்வாக உணர்ந்தால் அது உங்கள் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாகும்.

ஹைப்போதைராய்டிசம் பாதிப்பின் மற்ற அறிகுறிகள்

தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறையும் போது, உடல் சோர்வு, மனச்சோர்வு, ஆர்வமின்மை, ஆற்றல் இல்லாதது போல உணர்வது, வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு, எடை அதிகரிப்பு, பசியின்மை, தீவிரமான முடி உதிர்வு, குளிர் ஆகியவை ஏற்படும்.

நீண்ட காலம் தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்கள், குரலின் தன்மை மாறிவிடும், முகம் வீக்கமாகக் காணப்படும். சிகிச்சை அளிக்காமல் விட்டாள், இதய நோய்கள் பாதிப்பால் உயிருக்கே கூட ஆபத்தாக மாறும்.

மாரடைப்பு அபாயத்தை குறைக்க வாரத்திற்கு ஒரு மணி நேரம் இதை மட்டும் செய்தாலே போதும்..! ஆய்வில் கண்டுபிடிப்பு

ஹைப்போதைராய்டிசம் தடுக்க அல்லது தீவிரத்தை பாதிக்க என்ன செய்ய வேண்டும்

தைராய்டு பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், உங்கள் உடலில் தைராய்டு ஹார்மோன் எவ்வளவு சுரக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எனவே அதன் அடிப்படையில் தைராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டுமா மற்றும் உணவுப் பழக்கத்தில் நீங்கள் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டுமா என்பதை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்வார். பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் சப்ளிமென்ட்ஸ், உணவு பழக்கம் மற்றும் உடற் பயிற்சி செய்வது ஆகியவை தைராய்டு பாதிப்பை தடுக்கவும், தீவிரமாகாமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவும்.

First published:

Tags: Thyroid Symptoms