Home /News /lifestyle /

கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் என்னென்ன..? உயிருக்கே ஆபத்தாகலாம்.!

கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் என்னென்ன..? உயிருக்கே ஆபத்தாகலாம்.!

நீரிழிவு

நீரிழிவு

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது.

இந்தியாவில் 40 வயதுக்கு மேற்பட்ட பலருக்கும், 40 வயதுக்கு கீழே உள்ளவர்களில் சிலருக்கும் பொதுவான நோயாக நீரிழிவு பிரச்சினை இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால், நாட்டில் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி வெகுஜன மக்களை பாதித்துள்ள நோய் இதுவென்று கூறலாம்.

ரத்த சர்க்கரை குறித்து அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வதும், அதை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அவசியமானது. அதே சமயம், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத வகையில் செல்லும்போது உடல் உள் உறுப்புகளை அது கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். இந்த பாதிப்புகளை நீங்கள் மீண்டும் சரி செய்ய இயலாது.

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு என்பது சிறுநீரகங்கள், இதயம், ரத்த நாளங்கள், கண்கள், பாதம், நரம்புகள், கல்லீரல் மற்றும் நுரையீரலுக்கும் கூட பாதிப்புகளை ஏற்படுத்தும்.

நான் என்ன வேணாலும் சாப்பிடுவேன், ஆனா ஒன்னும் செய்யாது..  என சர்க்கரை நோய் இருப்பவர்கள் பலர் இதுபோல பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எந்தவித கட்டுப்பாடுகளையும் தாங்கள் கடைப்பிடிப்பதில்லை என்றும், விரும்பிய எதையும் கவலையின்றி சாப்பிடுவதாகவும் அவர் கூறுவார்கள். அதிலும், இஷ்டப்படி இருந்தாலும் தங்கள் உடலுக்கு ஒன்றும் ஆவதில்லை என்றும் சொல்வார்கள். ஆனால், நிச்சயமாக இதை நம்பி விடாதீர்கள்.



ஏனென்றால், கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு என்பது தொடக்க காலங்களில் எந்தவித பாதிப்புகளையும் பெரிதாக காட்டி விடாது. அது ஒரு சைலண்ட் கில்லர் நோய். அதன் மூலமாக என்னென்ன பாதிப்புகள் உடலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீண்ட காலம் தேவைப்படும். உங்கள் உடலில் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே பல்வேறு முக்கிய உறுப்புகளை அது பாதித்திருக்கும்.

உடல் உறுப்புகளை எந்தெந்த வகையில் நீரிழிவு நோய் பாதிக்கிறது

கண்கள்

ரத்த நாளங்களில் இருந்து செல்களுக்கு சர்க்கரையை கொண்டு சேர்க்கும் வேலையை இன்சுலின் செய்கிறது. ஆனால், இன்சுலின் குறைபாடு காரணமாக இந்த டெலிவரி நடப்பதில்லை. இதனால், ரத்த நாளங்களில் சர்க்கரை தங்கி விடுகிறது. அதுவே கண்களுக்கான ரத்த நாளங்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதால், அது கண்களை பாதிக்கிறது. நாளடைவில் பார்வை குறைபாடு அல்லது பார்வை இழப்பு ஏற்படும்.



இதயம்

ரத்த நாளங்களை விட்டு சர்க்கரை வெளியேறாத சூழலில், இதயத்துக்கான ரத்த நாளச் சுவர்களில் சர்க்கரை படியத் தொடங்குகிறது. இதனால், இதயத்திற்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் ரத்த நாளில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இதன் எதிரொலியாக ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக் ஏற்படும்.

நரம்புகள்

உங்கள் மூளை தான் உடலுக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்குகிறது. அதற்கேற்ப உடல் உறுப்புகள் செயல்படும். ஆனால், நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்போது, இந்த உத்தரவுகள் மூளையில் இருந்து உடல் உறுப்புகளுக்கு சென்று சேராது. இதனால் உடலில் வலி ஏற்படுவது கூட தெரியாது.

எலும்புகளை உறுதியாக்க வேண்டுமா ? இதையெல்லாம் செய்தாலே போதும்.

பாதங்கள்

நீரிழிவு நோய் இருப்பவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எந்தவித புண் வந்தாலும் அலட்சியம் செய்யக் கூடாது. நீரிழிவு காரணமாக இங்கு ரத்த ஓட்டம் தடைபடும். இதன் எதிரொலியாக பாதங்களில் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes

அடுத்த செய்தி