நம் ஒவ்வொரு பல்லிலும் வெளியில் தெரிகிற பகுதிக்கு ‘எனாமல்’என்று பெயர். இதற்கு அடுத்த பகுதியாக இருப்பது ‘டென்டின்’ (Dentin). ஒருவருக்கு டென்டின் எந்த நிறத்தில் அமைகிறதோ அந்த நிறம் தான் அவருடைய பற்களின் நிறம். பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இது புன்னகையை அழகாக்க மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் குறிக்கிறது. நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வெண்மையான பற்கள் பொதுவாக ஆரோக்கியமானவை.
சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதனால் வாய்விட்டு சிரிக்க கூட முடியாமல் அவதிப்படுவார்கள். இவர்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் பற்களில் பழுப்பு, கருப்பு அல்லது சாம்பல் நிறமாற்றம் காணப்பட்டால் இது பல் சிதைவின் அறிகுறிகள் என்பதால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியமாகும். இல்லையென்றால் நாளடைவில் பற்களின் உட்புற மஞ்சள் அடுக்குக்கு வழிவகுக்கிறது மற்றும் சிறிது சாம்பல் நிறத்திலும் மாற வாய்ப்புள்ளது.
பற்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது நமது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கிறது. பற்களின் நிறத்தை மேம்படுத்த தற்போது எண்ணற்ற சிகிச்சை முறைகள் உள்ளது. இதற்கு பல் வரிசை, பற்களின் அளவு மற்றும் தடிமன் ஆகியவற்றை முதலில் ஆய்வு செய்வது அவசியம். பின்னர் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாற்ற பல சிகிச்சைகள் உள்ளன. குறிப்பாக ‘டூத் ஒயிட்டனிங்’(Tooth Whitening) எனும் சிகிச்சை முறை தற்போது செய்யப்படுகிறது. இதை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பற்களின் நிறம் வெள்ளை நிறத்தில் நிலைத்து நிற்கும்.
பற்கள் நிறம் மாற காரணங்கள் :
நீங்கள் உண்ணும் உணவிற்கும் பற்கள் நிறமாற்றத்திற்கும் தொடர்புகள் உள்ளது. எனவே வாய்வழி சுகாதாரப் பழக்கத்தை சீராக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
மேலும் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், தினமும் அடிக்கடி காபி குடிப்பது போன்றவையும் பற்களில் கரை ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே பல் மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நாம் செய்யவேண்டியது குறித்து இங்கு காண்போம்.,
* பச்சை இலை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருட்கள், நட்ஸ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது உங்கள் பற்களை இயற்கையாக சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்திருக்க உதவுகிறது.இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் : சரி செய்யும் வழிகள் இதுதான்
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் : சரி செய்யும் வழிகள் இதுதான்
* தினமும் காபிக்கு பதிலாக பழ ஜூஸ் அருந்தலாம்.
* பேக்கிங் சோடா கொண்டு பற்களை சுத்தம் செய்தால் கறைகள் நீங்கும். ஆனால் பல் மருத்துவரிடம் ஆலோசனையின் பேரில் மட்டுமே இதனை பயன்படுத்தலாம்.
* காலையில் எழுந்ததும் வாயில் நல்லெண்ணெயை ஊற்றி 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் அந்த எண்ணெயை துப்ப வேண்டும். இப்படி தினமும் காலையில் வெறும் வயிற்றில் செல்லும் போது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் குறைந்து, பற்கள் வெண்மையாக காட்சியளிக்கும்.
* ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, வாயில் ஊற்றி 2 நிமிடம் வைத்து கொப்பளித்து துப்ப வேண்டும். அதன் பின் ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்த பிரஷ்ஷால் சிறிது நேரம் பற்களைத் துலக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி விரைவில் வெள்ளையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Teeth, Tooth care, Wisdom tooth