நீரிழிவு நோயை குணப்படுத்த முடியுமா..? எளிமையாக்கிய இங்கிலாந்து மருத்துவர்..!

நீரிழிவு நோய்

இன்சுலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் குறைந்த கார்ப் உணவுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.

  • Share this:
நமது நாட்டில் சுமார் 70 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் 2030ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 101 மில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய காலங்களில் வயதானவர்கள் மட்டுமே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

டைப் 1 நீரிழிவு நோயை விட டைப் 2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது. டைப் 2 நீரிழிவு நோயில் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந்த நோயானது எடை அதிகரிப்பு, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் உடற்பயிற்சி செய்யாத காரணத்தால் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தாக முடியும்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவர் நீரழிவு நோயை குணப்படுத்தும் முறை குறித்து விளக்குகிறார். சவுத்போர்ட்டில் உள்ள நோர்வூட் சர்ஜரியில் உள்ள டாக்டர் டேவிட் உர்வின், "2012 வரை டைப் 2 நீரழிவு மருந்து நிவாரணம் அளிப்பதை நான் பார்த்ததில்லை. நான் வழக்கமான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொடுக்கும் சிகிச்சை எனது நோயாளிகளுக்கு பலனளிக்கவில்லை என நான் தெரிந்து கொண்டேன்.



இது நம்பமுடியாததாக இருந்தது. இந்த நீண்டகால நோய்கான உண்மையான காரணத்தைப் பற்றி சிந்திக்காமல் நாம் குணமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்ற முயற்சி செய்து நான் பல ஆண்டுகளாக எனது நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் இருப்பதை உணர்ந்தேன் டாக்டர் அன்வின் கூறுகிறார்.

மேலும் குறைந்த அளவிலான கார்ப் உணவை உட்கொள்வதால் டைப் 2 நீரிழிவு நோய் குறைவது வாய்ப்புகள் அதிகம். மாவுச்சத்து உணவுகள், தானியங்கள், சர்க்கரை மற்றும் கார்ப் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, உங்கள் தினசரி கலோரி தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் அதிக புரதச்சத்து நிரைந்த உணவுகளை சாப்பிடலாம்.

சுகர் 200-ஐ தாண்டி விட்டதா..? உடனே குறைக்கும் இந்த 5 ஆயுர்வேத மூலிகைகளை எப்போதும் கையில் வைத்திருங்கள்

இதுகுறித்து நடைபெற்ற ஆய்வில் 1,357 பங்கேற்பாளர்களின் நீரிழிவு நோய் குணமடைந்தது. இந்த ஆய்வு 23 சோதனைகள் முறையில் நடைபெற்றது மற்றும், ஆறு மற்றும் 12 மாதங்களில் பதிவான தகவல் மூலம் ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டது. அதில் உணவு கட்டுப்பாட்டுடன் உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆய்வில் ஈடுபட்டு குறைந்த கார்ப் உணவுகளை சாப்பிட்டு வந்த நோயாளிகள் ஆறு மாதங்களில் நீரழிவு நோயில் இருந்து குணமடைந்ததாக தெரியவந்தது.



இன்சுலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் குறைந்த கார்ப் உணவுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.

டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த மூன்று எளிய வழிமுறைகள்:

- ஆரோக்கியமான உணவை உண்ணுதல்

- உடற்பயிற்சி

- அதிக எடையை குறைத்தல்



தவிர்க்க வேண்டிய கார்ப் நிறைந்த உணவுகள் :

ரொட்டி மற்றும் தானியங்கள், மாவுச்சத்துள்ள உணவுகள், பாஸ்தா, பீன்ஸ், தேன், இனிப்பு உணவுகள், சீவல்கள், பால், அரிசி, சர்க்கரை மிட்டாய்கள், மைதா, குக்கீகள், எண்ணெய்யில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

 
Published by:Sivaranjani E
First published: