ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

8 மாதத்தில் 32 கிலோ எடையை குறைத்த உஜ்ஜைன் எம்பி : அவர் பின்பற்றிய டயட் முறைகள் இதுதான்..!

8 மாதத்தில் 32 கிலோ எடையை குறைத்த உஜ்ஜைன் எம்பி : அவர் பின்பற்றிய டயட் முறைகள் இதுதான்..!

32 கிலோ எடையை குறைத்த உஜ்ஜைன் எம்பி

32 கிலோ எடையை குறைத்த உஜ்ஜைன் எம்பி

எம்பி ஃபிரோஜியா தன் உடல் எடையை குறைக்கும் பயணத்தை பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளார். அவர் ஆரம்பிக்கும்போது அவரின் உடல் எடை 127 கிலோ இருந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உஜ்ஜைன் எம்பி அனில் ஃபிரோஜியா குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 1000 கோடி தருவதாக கூறிருந்தார். அதற்காக 8 மாதத்தில் 32 கிலோ குறைந்து விட்டு நலப்பணி நிதியை பெற்றுள்ளார்.

  எம்பி ஃபிரோஜியா தன் உடல் எடையை குறைக்கும் பயணத்தை பிப்ரவரி மாதம் தொடங்கியுள்ளார். அவர் ஆரம்பிக்கும்போது அவரின் உடல் எடை 127 கிலோ இருந்துள்ளது.

  4 மாதத்தில் 15 கிலோ குறைப்பு....

  "நான் இழக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும், உஜ்ஜயினியில் வளர்ச்சிப் பணிகளுக்காக 1000 கோடி தருகிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மேடையில் என்னிடம் கூறினார்," எனவே அந்த சபதத்தை ஏற்று எப்படியாது உடல் எடையை குறைத்துவிடுவேன் என ஃபிரோஜியா ஜூன் மாதம் ANI இடம் கூறியிருந்தார். அப்படி அவரின் கடுமையான பயிற்சிகளால் 4 மாதத்தில் அவர் 15 கிலோ எடை குறைந்திருந்தார்.

  அவர் பின்பற்றி பயிற்சிகள் என்ன..?

  அவர் காலை பழக்கங்களை எந்தவித காரணங்களுக்காகவும் நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அப்படி தினமும் காலை 5.30 மணிக்கு எழுந்து சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றையும் கடைப்பிடித்துள்ளார்.

  Also Read : உடல் எடையைக் குறைக்கணுமா..? இந்த 5 சூப் வகைகளை ட்ரை பண்ணுங்க...

  டயட் முறைகள்...

  டயட்டை பொறுத்தவரை அவர் ஆயுர்வேத டயட் சார்ட் முறையைதான் பின்பற்றியுள்ளார். அதன்படி காலையில் மிதமான உணவும், மதியம் மற்றும் இரவுக்கு சாலட் வகைகளை சாப்பிட்டுள்ளார்.

  பின் ஒரு பவுல் பச்சை காய்கறிகள் , ஒரு ரொட்டி மற்றும் நட்ஸ் நிறைந்த செரல் சாப்பிட்டுள்ளார். அவ்வப்போது கேரட் சூப், இடை இடையே டிரை ஃபுரூட்ஸ் மற்றும் நட்ஸ் உட்கொண்டதாக ANI க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  32 கிலோ எடையை குறைத்த பிறகு, ஃபிரோஜியா நிதின் கட்கரியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் தனது வாக்குறுதியைக் காப்பாற்றி, உஜ்ஜைனிற்கு ரூ.2300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

  "நான் மத்திய அமைச்சரை சந்தித்து அவரிடம் என் உடல் எடையை குறைத்தது பற்றி சொன்னேன், அவர் அதை அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வாக்குறுதி அளித்தபடி, அவர் ரூ 2300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்," என்று ஃபிரோஜியா ANI இடம் கூறினார்.

  Also Read :  நார்ச்சத்து நிறைந்த முளைக்கட்டிய பயறு... தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா..?

  பிப்ரவரியில், இந்த சவால் குறித்து பேசிய கட்காரி, "ஃபிரோஜியாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நான் நிபந்தனை விதித்தேன். காரணம் ஒரு காலத்தில் எனது எடையும் ஃபிரோஜியாவை விட 135 கிலோ அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது எனது எடை 93 கிலோவாக உள்ளது. எனது பழைய புகைப்படத்தை அவரிடம் காட்டினேன். அப்போது அவரால் அந்த புகைப்படத்தில் என்னை அடையாளமே காண முடியவில்லை." என கட்காரி கூறியுள்ளார்.

  அரசாங்கத்தின் ஃபிட் இந்தியா இயக்கம் : பிரதம மந்திரி நரேந்திர மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை ஆகஸ்ட் 2018 இல் தொடங்கினார். ஒவ்வொரு இந்திய குடிமகனும் உடல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த ஆண்டு பிப்ரவரியில், உஜ்ஜயினியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில்தான் இந்த சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Fitness, Weight loss