ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டைபாய்டு காய்ச்சல் அறிகுறி எப்படி இருக்கும்..? எப்படி பரவுகிறது..? முழுமையான தகவல்..!

டைபாய்டு காய்ச்சல் அறிகுறி எப்படி இருக்கும்..? எப்படி பரவுகிறது..? முழுமையான தகவல்..!

டைபாய்டு

டைபாய்டு

பாக்டீரியா தொற்று ஏற்பட்ட உடனேயே அறிகுறிகள் காண்பிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக பாக்டீரியா உடலை தாக்கத் துவங்க, அறிகுறிகள் அதிகரிக்கும். தொற்று ஏற்பட்ட 1 வாரம் முதல் 3 வாரத்திற்குள் அறிகுறிகள் காணப்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மழைக்காலம், குளிர்காலம் என்றாலே டைபாய்டு காய்ச்சல் வேகமாக பரவும் காலமாகவும் இருக்கின்றது. டைபாய்டு காய்ச்சல் என்பது அனைவருக்கும் வரக்கூடிய பொதுவான ஒரு காய்ச்சல்தான். சரியாகி விடும் என்றாலும் ஒரு சில நேரத்தில் இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்கின்றது. காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே கண்டறிந்து சரியான சிகிச்சை மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், முழுவதுமாக மீண்டு விடலாம். இல்லையென்றால், இது வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

உலக சுகாதார மையத்தின் கணக்குப்படி ஒவ்வொரு ஆண்டும் 1 முதல் 2 கோடி நபர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது என்றும், அதில் 1.2 முதல் 1.6 லட்சம் நபர்கள் வரை இறந்து போகிறார்கள் என்ற அச்சுறுத்தக்கூடிய தரவை வெளியிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, டைபாய்டால் பாதிக்கக்கூடிய நபர்கள் பற்றிய தரவில், லட்சத்தில் 360 நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நோய் பற்றி, இது எவ்வாறு பரவுகிறது அறிகுறிகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.

டைபாய்டு என்பது ஒரு பாக்டீரியா தொற்று நோய் :

டைபாய்டு என்பது பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தொற்று நோயாகும். யூகேவின் தேசிய சுகாதார சேவை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா என்ற ஒரு பாக்டீரியாவால் இது உண்டாகிறது. இந்த பாக்டீரியா உணவில் கலந்து உணவை கெட்டுப் போக வைக்கிறது. கெட்டுப்போன உணவை சாப்பிடுவதன் மூலம் உடலின் பல்வேறு பாகங்கள், உறுப்புகள் பாதிக்கப்பட்டு சில நேரங்களில் இது உயிர்க்கொல்லி நோயாகவும் மாறுகிறது.

டைபாய்டு நோய் எப்படி பரவுகிறது :

டைபாய்டு என்பது ஒரு நபருக்கு பாக்டீரியா தொற்றால், உணவு கெட்டுப்போய் அதன் மூலம் ஏற்படும் என்றாலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பல விதத்தில் மற்ற நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட டைபாய்டு காய்ச்சலால் சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர் மலத்தின் மூலம், மற்றவர்களுக்கு அல்லது அவர் பயன்படுத்திய கழிவறையில் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பாதிக்கும் அபாயம் இருக்கிறது.

அதே போலவே பாதிக்கப்பட்ட நபரின் சிறுநீர் மூலமாகவும் மற்றவர்களுக்கு பரவும். உதாரணமாக, கைகளை சரியாக கழுவாமல், சுத்தமாக சுகாதாரமாக இல்லாமல் இருக்கும் பொழுது இது அதிவேகமாக பரவும். அசுத்தமான தண்ணீர் மற்றும் கெட்டுப்போன உணவு வழியாக டைஃபாய்டு பரவும்.

Also Read :  நீரழிவு நோய் முதல் எடை குறைப்பு வரை... பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு உதவும் ஆப்பிள்..!

டைபாய்டு அறிகுறிகள் என்ன?

பாக்டீரியா தொற்று ஏற்பட்ட உடனேயே அறிகுறிகள் காண்பிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக பாக்டீரியா உடலை தாக்கத் துவங்க, அறிகுறிகள் அதிகரிக்கும். தொற்று ஏற்பட்ட 1 வாரம் முதல் 3 வாரத்திற்குள் அறிகுறிகள் காணப்படும்.

லேசான காய்ச்சலுடன் தொடங்கும் டைஃபாய்டு மூன்று நாளில் 106 டிகிரி வரை கூட செல்லும். உடல் வலி, தசை வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் பிடிப்பு. குமட்டல் உணர்வு, பசியின்மை, அரிப்பு, மலச்சிக்கல் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாது. அறிகுறிகள் அதிகரிக்க துவங்கும் போதே மருத்துவரை அணுக வேண்டும். இல்லை நினைவுகள் மட்டும் இருந்து உடல் இயக்கம் இல்லாமல் போய்விடும்.

டெங்கு மற்றும் டைபாய்டு இடையேயான வித்தியாசம் :

நுண் கிருமிகள் தொற்றால் ஏற்படும் காய்ச்சல்கள் பெரும்பாலானவற்றுக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் இருக்கும். அதே போல டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சலும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தான் தோன்றும். சரியான முறையில் மருத்துவரிடம் டயக்னோஸ் செய்வதன் மூலம் தான் எந்த தொற்று பாதித்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். உங்கள் ரத்தம், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவையும் பரிசோதித்து பார்த்து உங்களுக்கு சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றா என்பதை உறுதி செய்யலாம்.

Also Read : சர்க்கரை நோயாளிகள் டெங்குவின் தீவிர பாதிப்புகளை எதிர்கொள்வது எப்படி..?

டைபாய்டு காய்ச்சலுக்கான சிகிச்சை :

பாக்டிரீயாவால் ஏற்படும் அனைத்து தொற்றுகளுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்து தான் நிவாரணமாக இருக்கிறது. வீட்டிலேயே வைத்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுக்கலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுக்கத் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களுக்குள் அறிகுறிகள் குறைய துவங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். காய்ச்சல் முழுவதுமாக குறையும் வரை ஓய்வில் இருக்க வேண்டும், அதிக திரவம் தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து வற்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வருமுன் காப்பது நல்லது என்பது இந்த விஷயத்தில் நீங்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து ஆற வைத்த சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும். கெட்டு போன உணவை தொடவே கூடாது. கைகளை நன்றாக கழுவ வேண்டும். கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Typhoid