Home /News /lifestyle /

இதய நோய் வகைகள் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

இதய நோய் வகைகள் மற்றும் அதன் அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதய நோய் இதயத்தின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. பெரும்பாலான மக்கள் இதய நோய் ஒரு தனிப்பட்ட நோயாகக் கருதுகின்றனர். ஆனால், இதய நோய் என்பது பல்வேறு காரணங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாகும்.

    இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் தீவிரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர்பாராத நேரத்தில், சில சமயங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதமும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. எனவே, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர் முயற்சிகள் தேவை.

    தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு முறை, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை, பரம்பரை காரணங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவற்றால் இதய நோய்கள் வரலாம். எனவே, மாரடைப்பு வராமல் இருக்க சரியான உணவுமுறை, உடல் எடையைக் கட்டுப்படுத்த போதுமான உடற்பயிற்சி, வழக்கமான மருத்துவ ஆலோசனை, மன அழுத்தத்தைத் தடுக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

    இதய நோய் இதயத்தின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. பெரும்பாலான மக்கள் இதய நோய் ஒரு தனிப்பட்ட நோயாகக் கருதுகின்றனர். ஆனால், இதய நோய் என்பது பல்வேறு காரணங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாகும். ஒரு நபருக்கு ஏற்படும் மாரடைப்பின் வகை உங்கள் இதயம் என்ன, எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

    அமெரிக்காவில் கரோனரி ஆர்ட்டரி என்னும் இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது மற்றும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தக் கோளாறு இதயத்திற்கு இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்குகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.



    கரோனரி ஆர்ட்டரி நோய் தவிர மற்ற வகையான இதய நோய்களும் உள்ளன. இந்த வகைகளைப் பற்றிய விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

    ·  கரோனரி தமனி நோய் (CAD)
    ·  இதயத் துடிப்பு நோய்.
    ·  இதய செயலிழப்பு.
    ·  இதய வால்வு நோய்.
    ·  இதய நோய்த்தொற்று - பெரிகார்டியல் நோய்.
    ·  கார்டியோமயோபதி (இதய தசை நோய்)
    · பிறவி இதய நோய்

    இதய நோய் வகைகளில் கரோனரி ஆர்ட்டரி நோய் (வாஸ்குலர் நோய்), இதய துடிப்பு சம்மந்தப்பட்ட நோய், பிறவி இதய குறைபாடு, இதய வால்வு நோய், இதய தசை நோய் மற்றும் இதயத்தில் ஏற்படும் தொற்று (இதய தொற்று) ஆகியவை அடங்கும்.

    Heart Attack : மாரடைப்பின் வகைகளும்... அதன் அறிகுறிகளும்...

    கரோனரி ஆர்ட்டரி நோய் (வாஸ்குலர் நோய்) : இந்த வகை கரோனரி இதய நோய், ஆர்ட்டரி ஸ்டெனோசிஸ் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. ஒரு நோயாளியின் இதய தமனிகள் குறுகலாகவோ அல்லது முழு அடைப்புகள் ஏற்பட்டாலோ, அது கரோனரி ஆர்ட்டரி நோய் என்று அழைக்கப்படுகிறது. இது பரவலாக எல்லாருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான பொதுவான வகையாகக் கருதப்படுகிறது.

    இரத்த ஓட்டம் சீர்குலைந்தால், இரத்த ஓட்டம் தடைபடுவது இதய செயல்பாட்டை பாதிக்கிறது. மார்பு வலி, மார்பில் கனம், தோள்கள், கைகள் மற்றும் தாடைகளில் வலி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.

    அதிக எல்.டி.எல் கொழுப்பு, குறைந்த எச்.டி.எல் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பரம்பரை, மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல், உடல் பருமன் போன்றவை இந்நோய்க்குக் காரணங்களாகக் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



    இதயத் துடிப்பில் கோளாறு : இந்த நிலைகளில், இதயம் மிக மெதுவாக அல்லது மிக வேகமாக துடிக்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. பல்வேறு வகையான இதயத் துடிப்பு அல்லது இதயத் தாளக் கோளாறுகள் உள்ளன. இருப்பினும், இந்தக் கோளாறு நீடித்தால், மாரடைப்புக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. மார்பு வலி, தலைச்சுற்றல், மங்கலான பார்வை மற்றும் அமைதியின்மை ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    இதய வால்வு நோய் : இதயத்தில் 4 வால்வுகள் உள்ளன. இரத்தத்தை பம்ப் செய்து, இதயத்தை ஒழுங்காக இயங்க வைக்க இந்த வால்வுகள் ஒன்றிணைந்து இயங்குகிறது. இந்த வால்வுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டால் இதய வால்வு நோய் ஏற்படுகிறது. இந்த வால்வுகளின் குறுகல் ஸ்டெனோசிஸ், கசிவு, வாழ்வு சரியாக மூடாமல் இருப்பது ஆகியவை அவற்றின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், சீரற்ற இதயத் துடிப்பு, கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம், மார்பு வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

    Heart Disease : இதய நோய் ஏன் வருகிறது..? தடுப்பதற்கான வழிகள் என்ன..?

    இதயத் தசை நோய் : இதயத் தசை நோய் கார்டியோமயோபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை இதயத் தசையில் ஏற்படும் காயம் அல்லது தசைக்கான இரத்த விநியோகத்தில் அடைப்பு அல்லது தடை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்தக் கோளாறின் பொதுவான அறிகுறிகள் வேலை செய்யும் போது அல்லது ஓய்வெடுக்கும்போது சுவாசிப்பதில் சிரமம், கால்கள் வீக்கம், சோர்வு மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு ஆகியவை அடங்கும்.

    இதய நோய்த்தொற்று : எண்டோகார்டிடிஸ் என்பது இதயத்தின் சுற்றுப்பாதையை, இதய வால்வுகளின் உட்புறத்தை பாதிக்கும் ஒரு தொற்று நோய் ஆகும். காய்ச்சல், மூச்சுத் திணறல், சோர்வு அல்லது பலவீனம், கால்கள் மற்றும் வயிறு வீக்கம், படபடப்பு, வறட்டு இருமல் மற்றும் தோல் புண்கள் ஆகியவை இதய நோய்த்தொற்றின் பொதுவான அறிகுறிகளாகும்.

    பிறவி இதயக் குறைபாடுகள் : ஒரு சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே இதயத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. கருவில் வளரும் போதே இதயத்தில் குறைபாடு இருந்தால், அது பிறந்த பிறகு வெளிப்படத் தொடங்கும். வெளிர் சாம்பல் அல்லது நீல நிற தோல், கண்கள், கால்கள் மற்றும் வயிற்றின் கீழ்ப்பகுதிகளில் வீக்கம், தாய்ப்பால் அல்லது உணவளிக்கும் போது சுவாசிப்பதில் சிரமம் மற்றும் குழந்தைகளின் எடை இழப்பு ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். கோளாறு மிதமானதாக இருந்தால், சில அறிகுறிகள் குழந்தை வளரும் போது தோன்றும்.



    இதய நோயின் பொதுவான அறிகுறிகள்

    •  மார்பு வலி, மார்பு இறுக்கம், மார்பு அழுத்தம் மற்றும் மார்பு அசௌகரியம் (ஆஞ்சினா)
      · மூச்சு திணறல், சுவாசிப்பதில் சிரமம்

    • உங்கள் உடலின் இதயப் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்கள் சுருங்கினால் உங்கள் கால்கள் அல்லது கைகளில் வலி, உணர்வின்மை, பலவீனம் அல்லது குளிர்ச்சி ஏற்படும்

    • கழுத்து, தாடை, தொண்டை, மேல் வயிறு அல்லது முதுகில் வலி
      எந்த வகையான மாரடைப்பாக இருந்தாலும் தீவிரமானது மற்றும் உயிருக்கு ஆபத்தானது. எனவே, இது தொடர்பாக ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது அவசியம்.


    •  

       
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Heart disease

    அடுத்த செய்தி