முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பெண்களுக்கு 30 வயதில் ஏற்படக்கூடிய பொதுவான மாதவிடாய் மாற்றங்கள்

பெண்களுக்கு 30 வயதில் ஏற்படக்கூடிய பொதுவான மாதவிடாய் மாற்றங்கள்

மாதவிடாய்

மாதவிடாய்

ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் தனித்துவமானது. இருப்பினும், பெண்கள் 30 வயதை எட்டும் நேரத்தில் சில பொதுவான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்., 

  • Last Updated :

ஒவ்வொரு மனிதர்களுக்கும் வயதாகும்போது உடலில் குறிப்பிடத்தக்க  மாற்றங்கள் ஏற்படுவது பொதுவானது. உதாரணமாக உங்கள் தலைமுடி நிறம் மாறுவது, தோல் சுருக்கங்கள், மற்றும் எலும்புகளின் அடர்த்தி குறைவது போன்றவை ஏற்படுகிறது. மேலும் பெண்களுக்கு குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும். இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பொறுத்து ஒவ்வொரு பெண்ணிற்கும் வேறுபடுகிறது. உண்மை என்னவென்றால், ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் தனித்துவமானது. இருப்பினும், பெண்கள் 30 வயதை எட்டும் நேரத்தில் சில பொதுவான மாற்றங்கள் ஏற்படுகிறது. அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்., 

அதிக உதிரப்போக்கு ஏற்படும் : 

உங்கள் 30 வயதுகளில் நிகழும் மற்றொரு பெரிய மாதவிடாய் மாற்றம், பிறப்புக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது. பல பெண்கள் ஹார்மோன் கருத்தடை மருந்துக்கள் சாப்பிட்டுவதால் சில பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். இதன் விளைவாக மாதவிடாய் காலத்தில் அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும். உங்கள் வழக்கமான இரத்த ஓட்டத்தை விட திடீரென அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும் என்பதால் உதிரப்போக்கும் அதிகரிக்கும். 

மாதவிடாய் ஏற்படாமல் போகலாம் : 

தற்போது ஏராளமான பெண்கள் குழந்தை பிறப்பை தாமதப்படுத்தி கொள்ள முடிவு செய்வதால், முதல் அல்லது இரண்டாவது குழந்தையை 30 வயதில் தான் பெற்றெடுக்கின்றனர். இதனால் பிரசவத்திற்கு பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் மாதவிடாய் சுழற்சி பாதிக்கிறது. அதாவது நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தால், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை உங்கள் மாதவிடாய் வழக்கமாக இருக்காது. ஆனால் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. சில மாதங்களுக்கு பிறகு மாதவிடாய் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

மோசமான வலி ஏற்படும் :

பல பெண்கள் 30 வயதை அடையும் போது எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் கருப்பை கட்டிகளால் பாதிக்கப்படுகிறார்கள். எண்டோ மெட்ரியோசிஸ் என்பது பொதுவாக பெண்களுக்கு 30 வயதில் வரக்கூடியவவை ஆகும். இது பெண்களின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கின்றன. மேலும் எண்டோமெட்ரியோசிஸ் இடுப்பு வலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மாதவிடாய் காலங்களில் மோசமான வலியை ஏற்படுத்துகிறது. தாங்கமுடியாத தொடர்ச்சியான வலியை அனுபவித்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் சுழற்சி நீண்டதாக மாறக்கூடும்:

பெண்கள் 30 வயதை அடையும் போது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சியானது நீண்ட நாளுக்கு ஒரு முறை அல்லது 5 முதல் 9 வரை கூட நீடிக்கலாம். சில பெண்கள் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கலாம், அதிகப்படியான முடி வளர்ச்சி அல்லது உச்சந்தலையில் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

PMS அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும்:

ஒரு பெண் தனது 30 வயதிற்குள் நுழைகையில் பிஎம்எஸ் அறிகுறிகள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. ஈஸ்ட்ரோஜன் நிலை ஏற்ற இறக்கத்தால் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருக்கும், அதிக இரத்தப்போக்கு இருக்கும் இல்லையென்றால் ஒவ்வொரு மாதவிடாய்க்கும் இடையில் லேசான இரத்தம் வெளியேறும். இதனால் சோர்வு, வீக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதிக ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் மற்றும் அதிக இரத்தப் போக்கு இவையெல்லாம் தைராய்டு பிரச்சினைகள், பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் அல்லது பல (சிகிச்சையளிக்கக்கூடிய) உடல்நல பிரச்சனைகளை உண்டாகுவதன் அடையாளமாக இருக்கலாம். எனவே அசவுகரியமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Periods