ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டைப் 2 நீரிழிவு நோயால் மூளைக்கு ஆபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

டைப் 2 நீரிழிவு நோயால் மூளைக்கு ஆபத்து! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

காட்சி படம்

காட்சி படம்

டைப் 2 நீரிழிவு பாதித்தவர்களின் எண்ணிக்கை தான் மற்ற வகை நீரிழிவு பாதிப்புகளை விட அதிகமாக இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் டையபெட்டிக் கேபிட்டல், அதாவது நீரிழிவு நோய் பாதித்தவர்கள் அருகில் இருக்கும் நாட்டில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரையுமே நீரிழிவு நோய் பாதிக்கிறது.

நீரிழிவு நோயை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று ஒரு பக்கம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலுமே, நீரிழிவு நோயால் வேறு சில ஆபத்துகள் ஏற்படுகிறது. உதாரணமாக டைப் 2 நீரிழிவு நோயால் மூளையின் செயல்திறனை பாதிக்கும் டிமென்சியா மற்றும் அல்சைமர் ஆகிய நோய்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நீரிழிவுக்கும் மூளை நோய்களுக்கும் உள்ள தொடர்பு :

கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைந்தாலோ அல்லது இன்சுலின் சுரக்காமல் போனாலோ, ரத்தத்தின் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதுதான் நீரிழிவு என்று கூறப்படுகிறது. இன்சுலின் போதுமான அளவுக்கு சுரந்தால் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சரியாக நிர்வகிக்க முடியும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் போது அது மூளையை பாதிக்கும். இதன் மூலம் எந்த வயதில் இருந்தாலும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.

குறிப்பாக டைம் 2 நீரிழிவு உள்ள நோயாளிகளுக்கு டிமென்ஷியா ஏற்படக்கூடிய அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஏஜிங் தெரிவித்துள்ளது. இளம் வயதிலேயே நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்களை விட அதிக ஆபத்தில் இருக்கிறார்கள். டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வு தெரிவித்து உள்ளது.

also read : ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...

டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும் 65 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 24% நோய் டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

டைப் 2 நீரிழிவு பாதித்தவர்களின் எண்ணிக்கை தான் மற்ற வகை நீரிழிவு பாதிப்புகளை விட அதிகமாக இருக்கிறது. எனவே அனைவருமே டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்று தான கூற வேண்டும். ஆனால், நீரிழிவை கட்டுப்படுத்தும் முயற்சியோடு, வேறு சில வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொண்டால் மூளை குறைபாடுகளை தவிர்க்க முடியும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்
குடிப்பழக்கத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 – 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடற்பயிற்சி செய்யும் நேரம் தவிர்த்து இயன்ற போதெல்லாம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
4.தினமும் உங்களுக்கு தேவையான அளவு தூங்க வேண்டும், குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்
சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்
நார்சத்து மற்றும் நுண் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறினாலே, பல நோய்களின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Brain Health, Type 2 Diabetes