உடலில் இருக்கும் திசுக்களுக்கு தேவையான சக்தி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மூலம் பெறப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பு மற்றும் கிளைகோஜென்னாகவும் சேமித்து வைக்க கணையத்தில் இருந்து உற்பத்தியாகும் இன்சுலின் உதவுகிறது. உட்கொள்ளும் உணவின் அளவுக்கு ஏற்றவாறு தானாகவே சுரக்கும் இன்சுலின் இந்த வேலையை செய்கிறது. ஆனால் சில காரணங்களால் இன்சுலினின் சுரக்கும் அளவு குறையும் போது, சாப்பிடும் உணவில் இருக்கும் சர்க்கரையானது திசுக்களுக்கு ஆற்றல் தரக்கூடிய சக்தியாக மாற்றப்படாமல் நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகிறது.
இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து ஒரு கட்டத்தில் சிறுநீரிலும் கூட சர்க்கரை வெளியாகிறது. இது நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் என்று குறிப்பிடப்படுகிறது. அதிக எடை, அதிக கொழுப்பு, இதய கோளாறுகள், ரத்த கொதிப்பு, மரபணு வழி, போதுமான உடல் உழைப்பு அல்லது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, கவலை மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த நோய் நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. முதல் வகை நீரிழிவு (Type 1 diabetes), இரண்டாம் வகை நீரழிவு (Type 2 diabetes).
இதில் டைப் 1 அரிதாக வர கூடியது தடுக்க முடியாதது. டைப் 2 தான் பெரும்பாலும் அனைவருக்கும் வருகிறது. இரண்டாம் வகை நீரிழிவு அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு வளர்சிதை மாற்ற கோளாறு. ஹைப்பர் கிளைசெமிக் என்றும் அழைக்கப்படும் இன்சுலின் சுரப்பு குறைவதால் ஏற்படும் இந்த வகை நோய், இந்தியாவில் சுமார் 77 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
யாருக்கு அதிக ஆபத்து?
ஆய்வுகளின் படி பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று குறிப்பிடப்படுகிறது. ஆண் பருவமடைதலில் டெஸ்டோஸ்டிரோன், ஆண்ட்ரோஜன் ஹார்மோன் இருப்பதால் தான் பெண்களை விட ஆண்கள் அதிகம் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. டெஸ்டோஸ்டிரோன் என்பது தசைகள் மற்றும் முடி வளர்ச்சி, குரல் மாற்றங்கள் மற்றும் ஆண்களின் பிறப்புறுப்பு வளர்ச்சியை உள்ளிட்டவற்றை தூண்டும் ஒன்றாகும்.
ஆண்களின் உடலில் நீண்ட காலமிருக்கும் டெஸ்டோஸ்டிரோன், அவர்களின் விந்தணு உற்பத்தி மற்றும் லிபிடோவை பராமரிக்க உதவுகிறது. ஆனால் இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் கொழுப்பு படிய குறிப்பாக உள்ளுறுப்பு கொழுப்பு (visceral fat) பாடிய முக்கிய காரணமாகிறது. தீங்கு விளைவிக்கும் இந்த கொழுப்பு பல வளர்சிதை மாற்ற கோளாறுகளுக்கும் காரணமாகிறது. ஆய்வுகளின் படி உள்ளுறுப்பு கொழுப்பானது டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு நேரடி காரணமாகிறது. ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்க குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு சில குறிப்பிட்ட அளவு டெஸ்டோஸ்டிரோன் பெண்களுக்கும் இருக்கிறது.
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் உள்ளது!
வேறுபட்ட அறிகுறிகள்:
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது நம் உடலை ஏராளமான வழிகளில் பாதிக்கிறது. தொடர்ச்சியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் எடை இழப்பு ஆகியவை இருபாலருக்கும் ஏற்படும் டைப் 2 நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறிகள். இவை தவிர ஆண்கள் தசை இழப்பு மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சல் உள்ளிட்டவற்றை அனுபவிக்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் பிறப்புறுப்பு ஈஸ்ட் நோய் தொற்றுகள், சிறுநீர் பாதை தொற்றுகள் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற சிக்கல்களை அனுபவிக்கின்றனர். சரியான நேரத்தில் டைப் 2 நீரிழிவு பாதிப்பை கண்டறியவிட்டால் ரெட்டினோபதி (retinopathy), இதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட கூடும்.
யாருக்கு கடும் சிக்கல்கள் ஏற்படும் :
ஆண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தாலும், பெண்களுக்கு தான் கடும் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகம். டைப் 2 நீரிழிவு காரணமாக இதய நோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் மனச்சோர்வு, பதற்றம் உள்ளிட்ட பல கோளாறுகள் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த சர்க்கரை மற்றும் நிர்வகிக்கப்படாத நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகமுள்ளது. பெண்களுடன் ஒப்பிடும் போது SARS-CoV-2 தொற்றால் பாதிக்கப்படும் மேம்பட்ட நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு இறப்பு ஆபத்து அதிகம் என்று ஒரு சிறிய ஆய்வு கூறி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Diabetics, Type 2 diabetic