ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு இந்த அறிகுறியும் முக்கிய காரணம்..!

இளம் வயதில் ஹார்ட் அட்டாக் வருவதற்கு இந்த அறிகுறியும் முக்கிய காரணம்..!

மாரடைப்பு

மாரடைப்பு

ப்ரீ-டையாபிட்டீஸ் நிலையில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு என்பது 2.15 சதவீதமாக இருந்தது. ஆனால், இது சாதாரண இரத்த சர்க்கரை அளவு கொண்ட இளைஞர்களுக்கு 0.3 சதவீதமாக இருந்தது. ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள பெரியவர்கள், ப்ரீ-டையாபிட்டீஸ் இல்லாதவர்களை விட அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைய கால கட்டத்தில் அதிகமான இளைஞர்கள், ப்ரீ-டையாபிட்டீஸ் என்கிற நிலையினால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருகி வரக்கூடும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ப்ரீ-டையாபிட்டீஸ் என்பது ஒருவரின் இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருப்பதை குறிக்கிறது.

அதாவது 100 முதல் 125 மி.கி/டி.எல் வரை இரத்த சர்க்கரை இருந்தால் அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோயாக இருக்க கூடும். ப்ரீ டையாபிட்டீஸ் பொதுவானது மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள இளம் வயதினர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 1.7 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதற்கு ப்ரீ-டையாபிட்டீஸ் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம். மேலும் இது ஒருவருக்கு இதய நோய்க்கான ஆபத்தையும் அதிகரிக்கும் என்று அமெரிக்காவில் உள்ள மெர்சி கத்தோலிக்க மருத்துவ மையத்தை சேர்ந்த மருத்துவர் அகில் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் சிலவற்றை அவர் கூறினார். "இளைஞர்களுக்கு மாரடைப்பு அதிகரித்து வருவதால், எங்கள் ஆய்வானது இந்த இளம் வயதினர் தொடர்பான ஆபத்து காரணிகளை வரையறுப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன்படி, எதிர்காலத்தில் இதய நோய் அபாயங்கள் உருவாக ஆரம்ப நிலை சர்க்கரை நோய் காரணியாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

18 முதல் 44 வயதுடைய இளைஞர்களிடையே மாரடைப்பு தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நலப் பதிவுகளை 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆய்வாளர்கள் மதிப்பாய்வு செய்து வந்தனர். மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7.8 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களில்

31,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவுகள் ப்ரீ-டையாபிட்டீஸ் உடன் தொடர்புள்ளதாக இந்த பகுப்பாய்வில் கண்டறிந்துள்ளனர்.

Also Read : உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியை கட்டுப்படுத்த.. தவிர்க்க வேண்டிய உணவுகள்!

அந்த வகையில், ப்ரீ-டையாபிட்டீஸ் நிலையில் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு என்பது 2.15 சதவீதமாக இருந்தது. ஆனால், இது சாதாரண இரத்த சர்க்கரை அளவு கொண்ட இளைஞர்களுக்கு 0.3 சதவீதமாக இருந்தது. ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள பெரியவர்கள், ப்ரீ-டையாபிட்டீஸ் இல்லாதவர்களை விட அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும், "மாரடைப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருந்தபோதிலும், ப்ரீ-டையாபிட்டீஸ் உள்ள இளைஞர்களுக்கு மோசமான இதய பிரச்சனைகள் அல்லது பக்கவாதம் போன்ற பிற இதய சார்ந்த பாதிப்புகள் இல்லை" என்று ஜெயின் கூறினார். ப்ரீ-டையாபிட்டீஸ் மற்றும் நீரிழிவு நோய் வகை 2 ஆகியவை பிற தீவிர உடல்நலச் சிக்கல்களுக்கு முன்னோடியாக இருந்தாலும், அதை சீரமைக்க முடியும். குறிப்பாக ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, புகைபிடிப்பதை நிறுத்துதல், மன அழுத்தத்தை குறைத்தல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல், எடையைக் குறைத்தல் போன்றவற்றை மேற்கொண்டு வரலாம்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diabetes, Diabetes symptoms, Heart attack