Home /News /lifestyle /

இந்த 2 வைட்டமின் குறைபாடு இருந்தால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுமாம்..!

இந்த 2 வைட்டமின் குறைபாடு இருந்தால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படுமாம்..!

கண்கள் ஆரோக்கியம்

கண்கள் ஆரோக்கியம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வைட்டமின் ஏ குறைபாடு, விழித்திரையை மிகவும் வறண்டு போக செய்து, விழித்திரை மற்றும் கார்னியாவை சேதப்படுத்துவதன் மூலம் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது.

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது முதல் நமது எலும்பு வலிமையை அதிகரிப்பது வரை இந்த ஊட்டசத்துக்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் நமது மூளை மற்றும் ஹார்மோன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை.

அந்த வகையில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் உடல் சரியாக வேலை செய்வதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மிகவும் தேவைப்படுகிறது. ஒருவேளை இந்த சத்துக்கள் குறைவாக இருந்தால் இவற்றை சமநிலைப்படுத்த சப்ளிமெண்ட்ஸ் போன்ற மாத்திரைகளாக எடுக்க வேண்டியிருக்கும். பொதுவாக உடலுக்கு 13 அத்தியாவசிய வைட்டமின்கள் தேவைப்படுகின்றன, அதை நீங்கள் வெவ்வேறு உணவு மூலங்களிலிருந்து பெறலாம். ஒவ்வொரு வைட்டமினுக்கும் வெவ்வேறு தன்மைகள் உள்ளன, அதனால்தான் வைட்டமின் குறைபாடுகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை உருவாக்குகின்றன.

பாதிப்புகள்

சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், எரிச்சல், எலும்பு அடர்த்தி இழப்பு, எளிதில் அல்லது அடிக்கடி தோல் சிராய்ப்பு, தோல் நிறம் மாறுதல் போன்ற பல அறிகுறிகளின் மூலம் இது வெளிப்படும். மேலும், சில வைட்டமின்கள் குறைவாக இருப்பதால், மனச்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் உண்டாகும். குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு கண்பார்வையை பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தொடர்ந்து வந்தால், பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.



 

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வைட்டமின் ஏ குறைபாடு, விழித்திரையை மிகவும் வறண்டு போக செய்து, விழித்திரை மற்றும் கார்னியாவை சேதப்படுத்துவதன் மூலம் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வைட்டமின் ஏ குறைபாட்டின் காரணமாக சுமார் 250000-500000 குழந்தைகள் பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள். மேலும் அவர்களில் பாதி பேர் கண் பார்வையை இழந்த 12 மாதங்களுக்குள் இறந்துவிடுகிறார்கள்" என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், வைட்டமின் பி12 குறைபாடும் பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

எச்சரிக்கை... 8 மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்த்தால் இதய நோய்க்கான அபாயம் அதிகம்..!

முக்கிய வைட்டமின்கள்

மூளை மற்றும் நரம்பு செல்களின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு வைட்டமின் பி12 இன்றியமையாத ஊட்டச்சத்து என்பதால், அதன் பற்றாக்குறை என்பது பார்வை நரம்பியல் நோய்க்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு பார்வை குறைபாடு சார்ந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை உடனடியாக பரிசோதித்து கொள்வது மிகவும் அவசியம். இதற்கான அறிகுறிகளை இனி பார்க்கலாம்.

அறிகுறிகள்

வைட்டமின் B12 குறைபாட்டை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். உங்கள் தோலில் வெளிர் மஞ்சள் நிறம் போன்று இருத்தல், நாக்கில் புண் அல்லது சிவந்து போதல், வாய் புண்கள், நீங்கள் நடக்கும் மற்றும் நகரும் விதத்தில் மாற்றங்கள், சீரற்ற பார்வை, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு, நீங்கள் நினைக்கும், உணரும் மற்றும் நடந்து கொள்ளும் விதத்தில் மாற்றங்கள்.. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.



உணவு

இந்த வைட்டமின் குறைபாட்டை உணவுகளின் மூலமும் சீராக பார்த்து கொள்ளலாம். குறிப்பாக சீஸ், முட்டை, மீன், பால், தயிர், கல்லீரல் ஆகியவை வைட்டமின் ஏ நிறைந்த சிறந்த உணவு பொருட்களாகும். மேலும், உங்கள் உணவில் பீட்டா கரோட்டின் உள்ள உணவுகளை சேர்ப்பதன் மூலமும் வைட்டமின் ஏ-வை பெறலாம். மேலும், மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகள், கீரை, கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சிவப்பு மிளகாய் மற்றும் மஞ்சள் நிற பழங்களான மாம்பழம், பப்பாளி, ஆப்ரிகாட் போன்றவை பீட்டா கரோட்டின் உள்ள உணவுகளாகும். எனவே இவற்றையும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

அடுத்து வைட்டமின் பி 12 ஐப் பொறுத்த வரையில், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி, ஆட்டு இறைச்சி, மீன், நண்டு, முட்டை, பால், சீஸ் மற்றும் தயிர் ஆகியவற்றின் மூலம் பெறலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Eye care, Vitamin Deficiancy

அடுத்த செய்தி