உடலில் சிறுநீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கும் சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது.. நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களினால் சிறுநீரகத்தின் செயல்பாட்டில் ஏதேனும் கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே அதற்கான சிகிச்சைகளை சரியாக எடுத்து வருவதன் மூலம் சிறுநீரகம் பாதிப்பை நம்மால் தவிர்க்க முடியும். சில நோய்களின் அறிகுறிகள் அது முற்றும் வரை தெரியவே தெரியாது. அது போல சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளும் அது முற்றிய நிலையை அடையும் வரை தெரியவே தெரியாமல் இருக்கும். அவ்வாறு உங்கள் சிறுநீரகம் பாதிப்படைந்திருந்தால் அவற்றை உங்கள் உடல் சில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும்.
பொதுவான அறிகுறிகள்:
குரோனிக் கிட்னி டிசீஸ் எனப்படும் நாள்பட்ட சிறுநீரக கோளாறு பொதுவாக ஏற்படும் ஒரு சிறுநீரக கோளாறு ஆகும். அதே சமயத்தில் மிகவும் ஆபத்தான சிறுநீரக சம்பந்தப்பட்ட நோயும் கூட. உங்கள் சிறுநீரகம் முழுவதுமாக பாதிப்படைந்து உடலில் உள்ள நீர் கழிவுகளை வெளியேற்றும் திறனை இழக்கும் போது, இந்த நோய் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஃபேப்ரி டிசிஸ், சிஸ்டினோ சிஸ் டினோசிஸ், ஐ ஜி ஏ நிஃப்ரோபதி, லுபஸ் நெப்ரிடிஸ், பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் என்பது போன்ற நோய்களும் ஏற்படலாம்.
வாயில் ஏற்படும் அறிகுறிகள்:
டாக்டர் பௌலா ஒலிவெய்ரா என்ற மருத்துவர் கூறுகையில், வாயில் ஏற்படும் துர்நாற்றம் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இதற்கு காரணம் சிறுநீரகம் பாதிப்பால் உடலில் யூரியாவானது வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு அந்த கழிவுகள் உடலின் உள்ளேயே சேர்ந்து விடுகின்றன. இந்த யூரியா என்பது உடலில் உள்ள செல்களால் புரதங்கள் உடைக்கப்பட்டு, அதன் மூலம் வெளியேற்றப்படும் நைட்ரஜன் கலந்த கழிவு ஆகும். இவை சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. சிறுநீரகம் பாதிப்படையும் போது இந்த யூரியா வெளியேறுவது முற்றிலும் குறைகிறது. இவ்வாறு யூரியா உடலில் அதிகரிக்கும் போது அது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
அதிகப்படியான யூரியா சேருவதற்கு காரணம்:
மையோ கிளினிக் அறிக்கையின்படி, ரத்தத்தில் உள்ள BUN எனப்படும் யூரியா நைட்ரஜனின் அளவு அதிகரிக்கும் போது சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உடலில் யூரியா மற்றும் நைட்ரஜன் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எது எப்படியோ நீர்ச்சத்து குறைபாடு இருந்தால் கூட இந்த BUN நோய் ஏற்படலாம்.
யூரியா சேர்வதை எப்படி தடுப்பது:
உடலில் யூரியா அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அவர்கள் எடுத்துக் கொள்ளும் புரத உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டு உணவு பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
Also Read : உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...
மேலும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் உடலில் நைட்ரஜன் யூரியாவின் அளவை கட்டுப்படுத்தும். அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதனால் உடலில் உள்ள யூரியா மற்றும் கிரியேட்டிநின் ஆகியவை உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.
வேறு பல அறிகுறிகள்:
உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், தசை பிடிப்பு, பசியின்மை, பாதங்கள் மற்றும் மூட்டுகளில் வீக்கம், வறண்ட சருமம், அரிப்பு, மூச்சுப் பிரச்சனை, தூக்கமின்மை, சிறுநீர் கழித்தலில் பிரச்சனை ஆகியவை சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kidney, Kidney Disease, Kidney Failure