கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

காட்சி படம்

கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்..

 • Share this:
  கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் உடலை கவனித்துக் கொள்வதில் முகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக எதையெல்லாம் சாப்பிடலாம் , சாப்பிடக்கூடாது என்ற விஷயத்தைக் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. அப்படி டைம்ஸ் நவ் பத்திரிக்கையில் மகப்பேறு மருத்துவர் ராதிகா ஷெத் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதிலிருந்து சில உங்களுக்காக...   நட்ஸ் வகைகள், அவகடோ, ஆலிவ் எண்ணெய் ஆகியவை நோய் அழற்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டவை எனவே அவற்றை சாப்பிடுவதால் கரு நிற்பதற்கு ஏதுவாக இருக்கும்.  கொழுப்பு நிறைந்த எண்ணெய் பொருட்களை தவிருங்கள். சிப்ஸ், ஃபிரெஞ்சு ஃபிரைஸ் போன்றவற்றை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும். இதனால் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தடையாக இருக்கும். கரு வளரவும் சிரமப்படும்.

  Published by:Tamilmalar Natarajan
  First published: