Home /News /lifestyle /

தாம்பத்திய உறவுக்கு பின் கரு உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..? எப்போது அறிகுறிகள் ஆரம்பமாகும்..?

தாம்பத்திய உறவுக்கு பின் கரு உருவாக எத்தனை நாட்கள் ஆகும்..? எப்போது அறிகுறிகள் ஆரம்பமாகும்..?

 பிரக்னன்சி

பிரக்னன்சி

பாலியல் உறவு வைத்துக் கொண்ட உடனேயே கர்ப்பமாக முடியாது. பொதுவாகவே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள், மாதவிடாய் தாமதமாவதன் மூலமாகவும், மசக்கை, காலையில் எழுந்தவுடன் குமட்டல் உணர்வு ஆகியவை மூலமாகவும் தான் தெரிய வரும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எல்லாவற்றுக்கும் நேரம் காலம் கூடி வர வேண்டும் என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ கருத்தரிப்பது என்று வரும்போதும் அதில் ‘டைமிங்’ மிகவும் ஒரு முக்கியமானது. திருமணம் ஆன உடனேயே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லா தம்பதிகளும் முடிவு செய்வதில்லை, சிலர் தள்ளிப் போடுகிறார்கள், சிலர், இயற்கையாகவே எப்போது கரு உருவாகிறதோ அப்படியே இருக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்கள். ஒரு சிலர் கருத்தரிப்பதில் திட்டமிடுகிறார்கள்.

குழந்தை பெற வேண்டும் என்ற முயற்சியில் நீண்ட காலமாக கருத்தரிக்க முடியாமல் போனால் உங்களுக்கு ஒவ்வொரு நொடியும், நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானதாக கருத வேண்டும். ஒரு சிலருக்கு இயற்கையாகவே பாலியல் உறவுக்குப் பின்பு 72 மணி நேரத்தில் கருத்தரித்து விடும். சிலருக்கு, அப்படி நடக்காது. பாலியல் உறவு வைத்துக்கொண்ட பின்னர், எத்தனை நாட்களுக்கு பிறகு கரு உருவாகும் என்பது பலருக்கும் இருக்கும் சந்தேகம் தான். அதைப் பற்றிய விளக்கங்களை இங்கே பார்க்கலாம்.

பாலியல் உறவும் கரு உருவாகுதலும்

பாலியல் உறவு வைத்துக் கொண்ட உடனேயே கர்ப்பமாக முடியாது. பொதுவாகவே ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள், மாதவிடாய் தாமதமாவதன் மூலமாகவும், மசக்கை, காலையில் எழுந்தவுடன் குமட்டல் உணர்வு ஆகியவை மூலமாகவும் தான் தெரிய வரும். எனவே இதற்கு, முந்தைய மாதவிடாய் நாளுடன் கணக்கிட்டுப் பார்க்கும் போது, குறைந்தது 30 – 45 நாட்களாவது ஆகும்.



நிபுணர்களின் கருத்துப்படி பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஆறு நாட்களுக்கு பிறகு பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்தணுவும் பெண்ணின் ஃபாலோபியன் டியூபில் ஒன்று சேரும். இதன் பெயர் தான் ஃபெர்டிலைசேஷன்.

இவ்வாறு பெண்ணின் கருமுட்டையுடன் ஆணின் விந்தணுவும் சேருவதற்கு, பெண் ஓவிலேஷன் நாட்களில் இருக்க வேண்டும். ஒவிலேஷன் என்பது ஒரு பெண் தன்னுடைய கருப்பையில் இருந்து கரு முட்டைகளை வெளியிடும் நேரம் ஆகும். மாதவிடாய் 28 முதல் 30 நாட்கள் என்று இயல்பாக இருக்கும் நாட்களில், மாதவிடாய் முடிந்த 12 நாட்கள் முதல் 17 நாட்கள் வரை, கருமுட்டை வெளியேறத் தயாராக இருக்கும். இந்த நாட்களில் பாலியல் உறவு வைத்துக் கொண்டு, கருமுட்டையுடன் விந்தணு இணைந்த பிறகு, இது கர்ப்பப்பையை நோக்கி செல்வதற்கு 3 முதல் 4 நாட்கள் ஆகும். பிறகு இந்த முட்டை கருப்பையின் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும். அதன் பிறகு உடல் கருமுட்டையை வளர்ப்பதற்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்து கர்ப்பம் உறுதியாகும்.

இந்த ஓவிலேஷன் நாட்கள் ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் காலத்துக்கு ஏற்றார் போல மாறும்.



கரு எப்போது உருவாகும் என்பது பற்றி நிபுணர்களின் கருத்து

யூகேவின் தேசிய உடல்நல சேவைகள் வெளியிட்ட அறிக்கையின்படி, 100 இல் 84 தம்பதிகள், இவர்கள் எந்த கருத்தடை முறையையும் பயன்படுத்தாமல், ரெகுலர் செக்ஸ் என்று வைத்துக் கொள்வதன் மூலம், ஒரு ஆண்டுக்குள் கருத்தரிக்க முடியும். மேலும் பெரும்பாலான தம்பதிகள் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் ஆறு மாதத்துக்குள் கருத்தரிக்க முடியும் என்பதையும் ஒருசில நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ஒரு ஆண்டுக்கு 1 ஆண்டு வரை இயல்பான, ஆரோக்கியமான பாலியல் உறவு வைத்துக் கொண்ட பிறகும் கருத்தரிக்க முடியவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சைகளை அல்லது பெற வேண்டும்.

கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் காரணங்கள் :

ஒவ்வொரு பெண்ணுக்கும் கருத்தரிப்பதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக பின்வரும் காரணங்கள் கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றன.

1. வயது
2. பொதுவான ஆரோக்கியமின்மை / உடல் நலக் கோளாறுகள்
3. இனப்பெருக்கம் சார்ந்த பிரச்சனைகள்
4. பாலியல் உறவில் சரியாக ஈடுபடாமல் இருப்பது / பாலியல் உறவில் ஈடுபடும் நாட்கள் மிகவும் குறைவு



கரு உண்டாகாமல் இருப்பதற்கான உடல் நலக் கோளாறுகள் :

ஒரு பெண்ணின் உடல் நலன் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் ஆகிய இரண்டுமே அவர் எந்த அளவுக்கு எவ்வளவு விரைவாக கருத்தரிக்க முடியும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

அதில் பின்வரும் நோய்கள் / கோளாறுகள் பெண்கள் கருத்தரிப்பதை தடுக்கிறது.

1. ஹார்மோன் குறைபாடுகள் – எண்டோக்ரைன் ஹார்மோன் குறைபாடு, கருப்பை நீர்க்கட்டி, தைராய்டு குறைபாடு, போன்றவை
2. உடல் ரீதியான பாதிப்புகள் – உடல் பருமன், அனீமியா, அனோரெக்சியா, அல்லது அதிகமாக உடற்பயிற்சி செய்வது
3. கருப்பை பலமின்மை, சீரற்ற மாதவிடாய், கருக்குழாய் அடைப்பு, கருப்பை சுவர்கள் பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு போன்றவை

பெண்கள் ஆரோக்கியமாக இருந்து, ஆண்களுக்கு இருக்கும் உடல் நலக் குறைபாட்டால், கரு உருவாகாமல் போகலாம். அவற்றில், பின்வருவன அடங்கும்

1. குறைவான விந்தணு எண்ணிக்கை
2. ஆரோக்கியமற்ற விந்தணு
3. விந்தணுக்கள் இல்லாமல் போகும் குறைபாடு



கருத்தரித்தலை எப்படி உறுதி செய்வது?

ஓவிலேஷன் தேதியின் அடிப்படையில், பாலியல் உறவு வைத்துக் கொண்ட பிறகு, அதிகபட்சம் 14 நாட்கள் வரை காத்திருக்கவும். பின்னர், வீட்டிலேயே ஹோம் பிரக்னன்ஸி கிட்களைப் பயன்படுத்தி, சிறுநீர் பரிசோதனை செய்தால், கரு உருவாகி உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Pregnancy Symptoms

அடுத்த செய்தி