• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எந்தெந்த யோகாசனங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுக்கும்? ஒரு கைட்லைன்

எந்தெந்த யோகாசனங்கள் குளிர்காலத்தில் ஏற்படும் மாரடைப்பை தடுக்கும்? ஒரு கைட்லைன்

குளிர் காலத்தில் வைரஸ் தொற்று மற்றும் சுவாச நோய்களை தவிர குறிப்பாக இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

  • Share this:
ஹார்ட் அட்டாக் அதாவது மாரடைப்பு என்பது இந்த காலத்தில் இறப்புக்கான பொதுவான காரணங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட ஹார்ட் அட்டாக், தற்போது 25 வயது இளைஞர்களுக்கு கூட வருவது அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட மற்றும் அதற்கான அபாயத்தை அதிகரிக்க பல ஆபத்து காரணிகள் இருந்தாலும், அறிகுறிகளை உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டு தாமதமாக கவனிப்பது, பருவகால மாற்றங்கள் உள்ளிட்டவையும் கூட ஒருவரது இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

பொதுவாக இதய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு, குளிர்காலம் கடினமான ஒன்றாக இருக்கும். குளிர் காலத்தில் வைரஸ் தொற்று மற்றும் சுவாச நோய்களை தவிர குறிப்பாக இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஹார்ட் அட்டாக், அரித்மியா மற்றும் ஹார்ட் ஃபெயிலியர் போன்ற இதய பாதிப்பு நிகழ்வுகள் குளிர் காலத்தில் கணிசமான அதிகரிப்பது இதற்கு சாட்சியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சரியான காரணம் இல்லாவிட்டாலும் கூட குளிர்காலத்தில் உடல் வெப்பநிலை குறையும் போது வெப்பத்தை கட்டுப்படுத்த நம் உடல் கடினமாக இயங்கும் போது இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே இதய நோயாளியாக இருப்பவர்கள் அல்லது குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருக்கும் மாரடைப்பு வரலாறு உள்ளவர்களுக்கு இதய ஆபத்து குளிர்காலத்தில் அதிகம். மேலும் குளிர்காலத்தில் உடலின் ஆக்ஸிஜன் தேவையும் அதிகரிக்கிறது. ரத்த நாளங்கள் சுருக்கம் அடையும் வாசோகன்ஸ்டிரிக்ஷன் ஏற்கனவே நிகழும் நிலையில், குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் இதயத்தை அடைகிறது. ரத்த நாளங்கள் சுருங்குவதால் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இது மாரடைப்புக்கான உடனடி ஆபத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் நிபுணர்கள். எனவே குளிர்காலத்தில் ஏற்படும் இத்தகைய ஆபத்துகளை தவிர்க்க ஆரோக்கியமான உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்க உதவும் யோகா இதய ஆரோக்கியத்தோடு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சில பிராணயாமா மற்றும் மெடிட்டேஷன் டெக்னிக்ஸ் இதய நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Must Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

இதய ஆரோக்கியத்திற்கு பிராணயாமா மற்றும் தியானம் (Meditation)

ஸ்வாஸ் தியான், ஆரம்ப் தியான் மற்றும் ஸ்திதி தயான் போன்ற தியான நுட்பங்களை (meditation techniques) பயிற்சி செய்வது மனதின் ஏற்ற இறக்கங்களை சரி செய்ய வழிவகுக்கும். இவை பீதி, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றை தடுக்கிறது. அமைதி, நிதானம் மற்றும் சமநிலையான நல்வாழ்வுக்காக தொடர்ச்சியான பயிற்சி மூலம் யோகாவின் நற்பலன்களை பெறலாம். உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நுட்பங்கள் மூலம் முழுமையான ஆரோக்கியத்தை பெறுவதற்கான அறிவியல் பாதைதான் யோகா. யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்வது மாரடைப்பு போன்ற பல வாழ்க்கை முறை நோய்களை தடுக்கும்.

குளிர்காலத்தில் இதய நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் யோகாசனங்கள்: மண்டூகாசனம், பத்மாசனம், பவன் முக்தாசனம், மலாசனம், நௌகாசனம்.

ஏற்கனவே இதய நோய்கள் கண்டறியப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய யோகாசனங்கள்: சக்ராசனம், ஹலாசனம், கர்ணபிராசனம், சர்வாங்காசனம், சிர்ஷாசனம், விபரீதகரணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: