குளிர்காலம் என்றாலே காலை விடியல் என்பது பலருக்கும் பிடிக்காது. இன்னும் ஐந்து நிமிடங்கள் தூங்கலாமா என்றுதான் மனம் ஏங்கும். கதகதப்பான போர்வை குளிர்காலத்தில் சொர்கம் போல் இருக்கும். இருப்பினும் ஒரு சிலர் இரவு முழுவதும் தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டு காலையில் எழ முடியாமல் அரைகுறை தூக்கத்தில் அலுவலகம் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் சோர்வாகவும், களைப்பாகவும் உணர்கின்றனர். இதனால் வேலையில் கவனமின்மை அதிகரிக்கிறது. உற்பத்தி திறன் குறைகிறது.
எனவே இரவு நல்ல தூக்கம் என்பது உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தையில் நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு, தூக்கம் முக்கியம். அப்படி உங்களுக்கு இரவு தூங்குவதில் சிரமம் இருந்தால், இந்த யோகா ஆசனங்களை செய்து பாருங்கள். இவை தூக்கத்தை தூண்டும். ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை கொண்டு செல்லும்.
இன்ஸ்டாகிராமில் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் நித்திகா கோஹ்லி, சிறந்த தூக்கத்திற்காக ஐந்து வெவ்வேறு யோகா ஆசனங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் " படுக்கைக்கு முன் யோகா செய்வதால் உடல் தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொள்கிறது. படுக்கைக்கு முன் பயிற்சி செய்தால், மன அமைதியை தருகிறது. தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது” என்று கூறியுள்ளார். மேலும் 5 யோகாசனங்களையும் பகிர்ந்துள்ளார். அவை...
View this post on Instagram
பலாசனா: இந்த யோகா நிலையானது உங்கள் மனதை நிதானப்படுத்தவும் அமைதியாக்கவும் உதவுகிறது.
சலபாசனம்: இது உங்கள் தசைகளை தளர்த்தி உங்கள் தூக்கத்தை மேம்படுத்துகிறது.
ஜானு சிர்சாசனா: இந்த யோகாசனத்தை தினசரி செய்வதால் உங்கள் தூக்க முறைகள் மேம்படும்.
உத்தனாசனம்: இந்த ஆசனம் உங்கள் முழு உடலையும் தளர்த்தி தசைகளை இலகுவாக்குகிறது. இதை தொடர்ந்து செய்து வர உங்கள் தூக்கத்தில் வித்தியாசம் தெரியும்.
சவாசனா: இது உங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது மற்றும் உங்கள் சோர்வான தசைகள் மற்றும் தோள்கள் அனைத்தையும் தளர்த்த உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sleepless, Yoga, Yoga Health Benefits