ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காஸ்மெடிக்ஸ் மற்றும் அதன் பேக்கேஜிங்கில் உள்ள நச்சு ஃபைப்ராய்டுகட்டி ஆபத்தை அதிகரிக்கிறது.! அதிர்ச்சியூட்டும் தகவல்.!

காஸ்மெடிக்ஸ் மற்றும் அதன் பேக்கேஜிங்கில் உள்ள நச்சு ஃபைப்ராய்டுகட்டி ஆபத்தை அதிகரிக்கிறது.! அதிர்ச்சியூட்டும் தகவல்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

காரில் வைக்கும் பொருட்கள், ஷவரில் பயன்படுத்தக்கூடிய திரைச்சீலைகள், உணவு டப்பாக்கள், ஷூக்கள் என்று பல வயதினரும் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இவை உள்ளன. அது மட்டுமில்லாமல் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தக்கூடிய காஸ்மெட்டிக் மற்றும் பர்சனல் கேர் பொருட்களான, நெயில் பாலிஷ், ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரே ஆகியவற்றில் தாலேட்டுக்கள் அளவு அதிகமாக இருக்கின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆரோக்கியமான உணவுகள், வாழ்க்கை முறை, ஆர்கானிக் பொருட்கள் என்று எவ்வளவு தான் பார்த்து பார்த்து பயன்படுத்தினாலும், ரசாயனங்கள் மற்றும் நச்சுப் பொருட்களின் பயன்பாட்டை முழுவதுமாக நீக்க முடியவில்லை. ஒரு சில குறிப்பிட்ட ரசாயனங்களுக்கு நம் உடல் வெளிப்படும் பொழுது, அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதாவது, புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் பாதிக்கப்படுவது போல, அவருக்கு அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள்.

அதே போல, நச்சுத்தன்மை அல்லது ரசாயனம் நிறைந்த எந்த பொருட்களையும் நேரடியாக பயன்படுத்தவில்லை என்றால் கூட, நாம் வாங்கும் பொருட்களின் பேக்கேஜ், உணவு உணவுகள் வரும் பாக்கெட்கள், காஸ்மெடிக் பொருட்கள் வரும் டப்பாக்கள் ஆகியவை பெண்களுக்கு கருப்பை நார்த்திசுக்கட்டிகள் அபாயத்தை அதிகரித்துள்ளது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனங்கள் மற்றும் தாலேட்டுக்கள் ஆகியவற்றுக்கு பெண்கள் வெளிப்படும் பொழுது, கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே கட்டிகள் இருந்தால் அது விரைவாக வளர்ச்சி அடைவதற்கும் காரணமாக இருக்கின்றது என்பதை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

பெண்களுக்கு பரவலாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பையில் வளரக்கூடிய ஃபைப்ராய்டு கட்டிகள். அதாவது நார்த்திசுக்கட்டி என்று கூறப்படும். கிட்டத்தட்ட 80% பெண்கள் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் ஃபைப்ரைடு கட்டியால் அவஸ்தைப்படுகிறார்கள். இதில் கால்வாசியினருக்கு, எந்தவித அறிகுறியும் இருக்காது. ஆனால் ஒரு சிலர் இதனால் தீவிரமாக பாதிக்கப்படுவார்கள். ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் அதிகப்படியான பிளீடிங் அல்லது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தப் போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை, வயிற்றில் மிகப் பெரியான கட்டிகள் வளர்வது மற்றும் ரத்தசோகை ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் இந்த பிரச்சனை தீவிரமாக இருக்கும் பொழுது பெண்களுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்படும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ப்ரோசீடிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் என்ற ஜர்னலில் இந்த ஆய்வு விவரங்கள் வெளியானது. DEHP என்ற அதிக ஆபத்தை ஏற்படுத்தும் தாலேட்டுகள் உள்ள பொருட்களுக்கு அதிகம் எக்ஸ்போஸ் ஆகும் பெண்களுக்கு, தீவிர அறிகுறிகள் கொண்ட ஃபைப்ராய்டு கட்டிகள் வளர வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில், எவ்வாறு இந்த ரசாயனங்கள் ஆக்டிவேட் ஆகி கட்டிகள் வளர காரணமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் ஆய்வு இது தான்.

DEHP என்ற நச்சுத்தன்மை நிறைந்த ரசாயனத்துக்கு வெளிப்படும் போது, அது ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் சார்ந்த வழியை உருவாக்கும். பின்னர், AHR என்ற சுற்றுசூழலுக்கு ரெஸ்பான்சிவவான ஒரு ரிசப்டரை DNA உடன் பிணைத்து செயல்படுத்தும். இது, ஃபைப்ராய்டு கட்டிகள் வளர்ச்சியை தூண்டி விடும். தாலேட்டுகள் என்ற ரசாயனம், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பலவிதமான தயாரிப்புகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இதில் DEHP என்பது மிகவும் பரவலாக பயன்படுத்தக்கூடிய ஒரு தாலேட் ஆகும்.

Also Read : மேக்கப் போடப்போறீங்களா?... இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

காரில் வைக்கும் பொருட்கள், ஷவரில் பயன்படுத்தக்கூடிய திரைச்சீலைகள், உணவு டப்பாக்கள், ஷூக்கள் என்று பல வயதினரும் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இவை உள்ளன. அது மட்டுமில்லாமல் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தக்கூடிய காஸ்மெட்டிக் மற்றும் பர்சனல் கேர் பொருட்களான, நெயில் பாலிஷ், ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரே ஆகியவற்றில் தாலேட்டுக்கள் அளவு அதிகமாக இருக்கின்றன. மேலும், டயப்பர்கள், டயர்கள் மற்றும் சானிட்டரி பேடுங்களிலும் DEHP என்ற தாலேட் அதிக அளவில் இருக்கின்றது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் பெண்களின் கருவுறும் தன்மையை, இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Cosmetics, Health