ஆர்த்ரைட்டிஸ் முதல் திடீரென கீழே விழுந்து விடுவது வரை வெவ்வேறு நிலைகள் காலப்போக்கில் நம்முடைய இடுப்பை பாதிக்கலாம். இடுப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய சிகிச்சைகளாக மருத்துவர்கள் பொதுவாக மருந்துகள், பிசியோதெரபி அல்லது சிறந்த வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கின்றனர்.
எனினும் குறிப்பிடத்தக்க வலி காரணமாக தூங்க முடியாமல் அவதிப்படுவது, படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற அன்றாட பணிகளை செய்ய மிகுந்த சிரமம் எதிர்கொள்ளும் போது, ஹைக்கிங் அல்லது பைக்கிங் செய்ய முடியாமல் அவதிப்படுவது உள்ளிட்ட தீவிர இடுப்பு சிக்கல்களுக்கு டோட்டல் ஹிப் ஆர்த்ரோபிளாஸ்ட்டி (Total Hip Arthroplasty - THA) சிறந்த நிவாரணம் அளிக்க கூடும். இது எண்ட்-ஸ்டேஜ் டிஜெனரேட்டிவ் ஹிப் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பகமான பலன்களை வழங்குகிறது.
டோட்டல் ஹிப் ஆர்த்ரோபிளாஸ்ட்டி என்பது பரவலாக செய்யப்படும் மிகவும் வெற்றிகரமான அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன THA-விற்கு 1960-களின் முற்பகுதியில் UK-வில் இருக்கும் ரைட்டிங்டன் மருத்துவமனையில் பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர் சர் ஜான் சார்ன்லி என்பர் முன்னோடி ஆவார். அந்த காலக்கட்டத்தில் இருந்து பல ஆண்டுகளாக THA-வின் விளைவுகளை மேம்படுத்த தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மில்லினியத்தின் மூன்றாவது தசாப்தத்திற்கான புதிய ஹாட் டாபிக் THA-வில் ரோபாட்டிக்ஸ் பயன்பாடு ஆகும்.
Read More : உங்க குழந்தை அதிகமா டிவி, மொபைல் பாக்குறாங்களா..? ஆய்வு கூறும் பகீர் தகவல்.!
National Joint Registry UK-வின் டேட்டாக்களின்படி, டிஸ்லொக்கேஷன் என்பது ஹிப் சர்ஜரியின் ரிவிஷனுக்கு மிகவும் பொதுவான காரணமாகும். காம்போனென்ட்ஸ்களை சரியான இடத்தில் பிளேஸ் செய்ய முடியாமல் போவது பொதுவாக ஹிப் டிஸ்லொக்கேஷன் பிரச்சனைக்கு வழிவகுக்கும். இம்பிராப்பர் காம்போனென்ட் பொசிஷனிங் சிக்கல் இடுப்பு மற்றும் உள்வைப்புகளின் விரைவான தேய்மானம், பெரிப்ரோஸ்டெடிக் எலும்பு முறிவு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நிலைகள் ஏற்பட்டால் சில காலத்திற்கு பிறகு மீண்டும் மறுசீரமைப்பு இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால் ரோபோட்டிக் THA-வானது ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான காம்போனென்ட் பொசிஷனிங் மற்றும் ரீப்ரொடியூசிபிலிட்டியை 100% நிரூபித்துள்ளது. ரோபோடிக் அசிஸ்டெட் THA-வை கருத்தில் கொள்ள மற்றொரு முக்கிய காரணம் மேனுவல் THA உடன் ஒப்பிடும்போது இது திட்டமிடப்பட்ட அசிடபுலர் கப் பொசிஷனிங்கை (planned acetabular cup positioning) அடைவதில் துல்லியத்தை மேம்படுத்துவது மற்றும் தொடை எலும்பு இருப்புகளை பாதுகாப்பதன் மூலம் நிலைத்தன்மையை பராமரிப்பதாகும். எதிர்காலத்தில் இந்த நோயாளிகளுக்கு ரிவிஷன் ஹிப் சர்ஜரி தேவைப்படுமானால், முன்னர் செய்யப்பட்ட பிரைமரி சர்ஜரியின் போது அதிகரித்த bone stock காரணமாக, ரிவிஷன் சர்ஜரியில் ஏற்படும் சிக்கல் வெகுவாக குறையும்.
அதே போல THA-வின் போது ஒருவேளை implant placement சரியாக செய்யப்படாவிட்டால் அது நோயாளிகளுக்கு கால் நீள முரண்பாட்டை ஏற்படுத்தும். இது நோயாளிகளுக்கு கடும் அதிருப்தி மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ரோபோடிக் அசிஸ்ட் THA-வில் லெக் லென்த் குவாலிட்டியில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். THA அசிஸ்ட் ரோபோடிக் முறையானது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உடற்கூறியலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால் implant placement-ன் துல்லியத்தை மேம்படுத்துகிறது. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் ஜூனியர் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கவும் இந்த டூல் பயன்படுத்தப்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arthritis Pain, Bone health