முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி ரேட் : என்ன காரணம்..?

இந்தியாவில் குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி ரேட் : என்ன காரணம்..?

குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி

குறைந்து கொண்டே வரும் ஃபெர்டிலிட்டி

கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரு தம்பதிக்கு 2 குழந்தைகள் என்று குறைந்து, தற்போது பல குடும்பங்களில் 1 குழந்தை தான் உள்ளது. சமீபகாலமாக சில தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5இன் படி, இந்தியாவில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு இருக்கும் 2.1 குழந்தைகள் கருவுறும் விகிதத்தை விட தற்போதைய விகிதம் குறைவாக உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Total Fertility Rate எனப்படும் மொத்த கருவுறும் வீதம், 2015-16 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.2 இருந்துள்ளது. குடும்ப மற்றும் சுகாதார நல அமைச்சகம் எடுத்த சமீபத்திய கணக்கெடுப்பின் படி, 2019-21 ஆண்டுகளில், கருவுறும் வீதம் 2.0 ஆக குறைந்துள்ளது.

காலப்போக்கில், மொத்த கருவுறும் விகிதம் இந்தியாவில் கணிசமாக குறைந்துள்ளது. சராசரியாக, 1992-93 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி, 4 விகிதம் என்று இருந்த TFR, கடந்த ஆண்டில் 1.4 விகிதம் குறைந்து, தற்போதைய சராசரியாக 2.0 என்ற அளவில் உள்ளது.

கிராமப்புறங்களில் வாழும் பெண்களிடையே 1992-93 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி, 7 விகிதம் என்று இருந்த TFR, கடந்த ஆண்டில் 2.1 ஆகக் விகிதம் குறைந்துள்ளது. அதே போல, நகரத்தில் வசிக்கும் பெண்களிடையே, 1992-93 ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி, 7 விகிதம் என்று இருந்த TFR, கடந்த ஆண்டில் 1.6 ஆக குறைந்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு, 90களின் தொடக்கத்தில், ஒரு பெண் சராசரியாக 3 குழந்தைகள் பெற்றுள்ளார். அந்த காலகட்டத்துக்கு முன்பு வரை, குறைந்தது 3 குழந்தைகளாவது ஒரு குடும்பத்தில் இருப்பார்கள். அதற்கு பின்னர் வந்த ஆண்டுகளில், மூன்று குழந்தைகள் என்பது இரண்டாக குறைந்தது.

கடந்த பத்து ஆண்டுகளாக, ஒரு தம்பதிக்கு 2 குழந்தைகள் என்று குறைந்து, தற்போது பல குடும்பங்களில் 1 குழந்தை தான் உள்ளது. சமீபகாலமாக சில தம்பதிகள், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

எத்தனை குழந்தைகள் வேண்டும் என்ற தனிப்பட்ட முடிவைத் தவிர்த்து, உடல் ரீதியான பிரச்சனைகளும் TFR குறைவதற்குக் காரணமாக இருந்துள்ளன.

மாதவிடாய்க்கு முன்பு சோர்வாக உணர்கிறீர்களா ? இதுதான் காரணம்..!

இந்த TFR எப்படி கணக்கிடப்படுகிறது..?

ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அல்லது வருடங்கள் உள்ளடக்கிய காலத்தில், மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) என்பது, பெண்களின் இனப்பெருக்கக் காலத்தின் முடிவில், அவர்கள் குழந்தை பெறும் வயது வரை, பெண்கள் சராசரியாக பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அளவில் வரையறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆண்டுகள் மற்றும் நடைமுறையில் உள்ள வயதுக்கு ஏற்ற கருவுறுதல் விகிதங்களுடன் குழந்தைகள் கணக்கிடப்படுகின்றன என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

மறுபுறம், ரீப்ளேஸ்மெண்ட் லெவல் ஃபெர்டிலிட்டி என்பது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை பிறக்கும் போது, முதல் தலைமுறையில் உள்ள அதே எண்ணிக்கையிலான நபர்கள் அடுத்த தலைமுறையில் பிறப்பார்கள் என்ற அடிப்படையில் அமைந்த கருவுறுதல் நிலை ஆகும். இந்த அடிப்படையில் பெரும்பாலான நாடுகளில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் தேவை என்று எடுத்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Fertility, Fertility treatment, IVF Treatment