Home /News /lifestyle /

பெண்களே உடல் நலத்தை பாதுகாக்க உதவும் இந்த 5 ஆப்ஸ் பற்றி தெரியுமா? 

பெண்களே உடல் நலத்தை பாதுகாக்க உதவும் இந்த 5 ஆப்ஸ் பற்றி தெரியுமா? 

பெண்கள் நலன்

பெண்கள் நலன்

தண்ணீர் குடிக்க நினைவூட்டுவது முதல் எந்த வேளை என்ன உணவு சாப்பிட வேண்டும் என நோட்டிபிகேஷன் வரை உடல் நலம் சார்ந்த பல ஆப்ஸ் வந்துவிட்டன

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  புத்தாண்டு பிறந்ததுமே “இந்த வருஷம் எப்படியாவது கஷ்டப்பட்டு வாக்கிங், ஜாக்கிங், யோகா எல்லாம் செஞ்சி உடம்ப குறைக்கிறேன் பாரு” என உறுதி எடுப்போம். அதற்காக முதல் ஒரு மாதத்திற்கு அதிகாலை 5 மணிக்கே எழுவது, ஜிம் செல்வது, வாக்கிங் போவது, சைக்கிளிங் என நமக்கு பிடித்த ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பிப்போம். ஆனால் இதெல்லாம் ஒரு இரண்டு மாதம் இல்லையேல்... மூணு மாதம் வரை தான் தாக்கு பிடிக்கும் அதன் பின்னர், சரியான வழிகாட்டுதல் மற்றும் வழிமுறைகள் இல்லாமல் பாதியில் நிறுத்திவிடுவோம்.

  குறிப்பாக பெண்களுக்கு வேலை, வீடு, குடும்பம், சமையல், குழந்தைகள் என பல பொறுப்புகள் இருப்பதால் அவர்களால் தங்களது உடல் நலத்தை பேணிக்காக சரியான நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. தற்போதைய ஸ்மார்ட் போன் உலகில் அனைத்துமே ஆப்ஸில் அடங்கி விடுகிறது. தண்ணீர் குடிக்க நினைவூட்டுவது முதல் எந்த வேளை என்ன உணவு சாப்பிட வேண்டும் என நோட்டிபிகேஷன் வரை உடல் நலம் சார்ந்த பல ஆப்ஸ் வந்துவிட்டன. இதில் பெண்களின் உடல் நலத்தை காக்க உதவும் முக்கியமாக 5 ஆப்-கள் பற்றி பார்க்கலாம்.  1. மாயா ஆப் (Maya APP) :

  மாயா ஆப் (Maya APP) பெண்களுக்கு மிகவும் முக்கியமான மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க உதவுகிறது. மாதவிடாய் சுழற்சி மற்றும் மனநிலை மாற்றங்கள், உடல் நலம், கர்ப்ப நிலை, ஆன்லைன் பரிசோதனை, ஆன்லைன் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் உள்ளிட்ட பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் கிடைக்கூடிய இந்த ஆப்-யை இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். மாயா ஆப், 2017 ஆம் ஆண்டிற்கான ஃபேஸ்புக்கின் எஃப்பி ஸ்டார்ட்ஆப்ஸ் ஆஃப் தி இயர் (FB Startup's Of the year) விருதை வென்றுள்ளது.

  2. ஹெல்த் சத்தி ஆப் (Health Sathi app):

  ஹெல்த் சத்தி ஆப், பெண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. உடல் நலம், குழந்தை பராமரிப்பு, உடல் எடைக்குறைப்பு, எடையை அதிகரிப்பது, பியூட்டி மற்றும் ஹேர் கேர், ஹோமியோபதி குறித்த பயனுள்ள டிப்ஸ்களை யூஸர்களுக்கு வழங்குகிறது.

  ஆயில் ஸ்கின் முகத்தை எப்போதும் டல்லாவே காட்டுதா..? பிரைட்டாக்கும் 3 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ...

  3. ஃப்ளோ ஆப் (Flo APP):

  குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப் ஆன இது, கருமுட்டை உருவாதல் முதல் கருத்தரித்தல் வரை பலவற்றையும் கண்காணிக்க உதவுகிறது. அண்டவிடுப்பு (கருப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவது), மாதவிடாய் சுழற்சி கருவுறுதலுக்கு ஏற்ற நாட்கள் ஆகியவற்றை கண்காணிக்க உதவுகிறது. மேலும் கருவுற்ற பெண்களின் கர்ப்ப காலத்தை கண்காணிக்கவும் இந்த ஆப் துணைபுரிகிறது. உலகெங்கிலும் உள்ள 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் ஃப்ளோ ஆப்பை டவுன்லோடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  4. ஆப்டிவ் ஆப் (Aaptiv app):

  வொர்க்அவுட்டில் புதுப்புது விஷயங்களை முயற்சித்து பார்க்க விரும்பும் ஃபிட்னஸ் பிரியைகளுக்கான ஆப். இதில் ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக கற்றுக்கொள்ளக்கூடிய பல உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த ஆப் மூலமாக உங்களுக்கான பிரத்யேக டிரெயினரையும் பெற முடியும். முதல் 7 நாட்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும் இந்த ஆப்பை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த நினைத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

  யோகாசனங்கள் பற்றி மக்களிடையே உள்ள பொய்யான கருத்துக்கள் என்னென்ன?

  5. மைபிட்னஸ்பால் ஆப் (MyFitnessPal app):

  ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, எடை இழப்பு மற்றும் நீர் தேவை போன்ற பல்வேறு விஷயங்களை மானிட்டர் செய்ய இந்த ஆப் பயன்படுகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்களது வெயிட் லாஸ், வொர்க் அவுட், கலோரி அளவு போன்றவற்றை ட்ராக் செய்ய உதவும். உங்கள் ஸ்மார்ட் போனில் ஆல்-இன்-ஒன் ஃபுட் ட்ராக்கர் போன்ற இந்த ஹெல்த் ஆப்பை வைத்திருப்பது, உங்களுடன் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் டயட்டீசியனை வைத்திருப்பது போன்றது. இந்த ஆப் மூலமாக உங்கள் உணவு பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற உதவுகிறது.

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Women Health

  அடுத்த செய்தி