பல் துலக்குவதோடு நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம்..! ஏன் தெரியுமா..?

”பலரும் பற்களை சுத்தம் செய்வதில் காட்டும் அக்கறையை நாவுக்கும் காட்டுவதில்லை”

பல் துலக்குவதோடு நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம்..! ஏன் தெரியுமா..?
நாக்கு : பற்களின் சுத்தம் பற்றி அறிந்த நீங்கள் நாக்கை சுத்தம் செய்வது அவசியம் என தெரிந்துகொள்ளுங்கள். சுவையின் ராஜாவான நாக்கை பல் துலக்கும்போதெல்லாம் சுத்தம் செய்யுங்கள்.
  • Share this:
தினமும் பற்களை துலக்கி சுத்தம் செய்வதுபோல் நாக்கையும் சுத்தம் செய்தல் அடிப்படையான சுத்தம் என்கின்றனர் பல் மருத்துவர்கள். ஏன் தெரியுமா..?

பலரும் பற்களை சுத்தம் செய்வதில் காட்டும் அக்கறையை நாவுக்கும் காட்டுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் கிருமிகளை ஒழிக்க பல் துலக்கினால் போய்விடும் என நினைக்கிறோம். ஆனாலும் வாயில் கிருமிகள் இருக்கும். அவை நாக்கு போன்ற இடங்களில் தேங்கியிருக்கும். அவை நகர்ந்து மீண்டும் பற்களில் தேங்கி பற்களை சேதப்படுத்துவது, சொத்தைப் பற்களை உருவாக்குவது போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். எனவே பல் துலக்கும் போது நாக்கையும் சுத்தம் செய்தல் அவசியம்.


அதோடு நாக்கை சுத்தம் செய்யாமல் விடும்போது நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுகள், பாக்டீரியாக்கள் தேங்கி நாக்கின் தோற்றம் வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காட்சியளிக்கும்.அதுமட்டுமன்றி படிந்திருக்கும் இந்த அழுக்குகள் உணவின் சுவையை குறைத்துக்காட்டும். நாக்கை சுத்தம் செய்யும் பழக்கம் இருந்தால் எந்த சுவையையும் நாவில் வைக்கும்போது உடனே உணர முடியும்.படிக்க: BBQ சிக்கன் சாப்பிடுவது என்றால் ரொம்ப பிடிக்குமா..? அதற்கு முன் இதை படியுங்கள்

பல் துலக்குவதால் மட்டும் துர்நாற்றம் நீங்கிவிடாது. நாவை சுத்தம் செய்யவில்லை என்றாலும் துர்நாற்றம் வீசும். மேலும் அந்த துர்நாற்ற சுவாசம் உடல்நிலையை பாதிக்கலாம். குறிப்பாக உங்களின் செரிமாணத்தை பாதிக்கலாம். அதாவது உணவு சாப்பிடும்போது நாவில் தேங்கியிருக்கும் பாக்டீரியாக்களும் உணவோடு வயிற்றுக்குள் செல்லும்போது அவை செரிமாணத்தை பாதிக்கலாம். வேறுவிதமான உடல்நிலை ஆபத்துகளையும் அளிக்கலாம்.

எனவே பல் துலக்கும்போது நாக்கை சுத்தம் செய்வதையும் தினசரி பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading