Home /News /lifestyle /

பள்ளிக் குழந்தைகளைக் குறி வைக்கும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள்! எச்சரித்த உலக சுகாதார நிறுவனம்

பள்ளிக் குழந்தைகளைக் குறி வைக்கும் சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள்! எச்சரித்த உலக சுகாதார நிறுவனம்

குழந்தைகள் மற்றும் சிகரெட்டுகள்.

குழந்தைகள் மற்றும் சிகரெட்டுகள்.

ஒவ்வொரு வருடமும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை பயன்பாட்டால் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனால் சிறுவர் சிறுமிகளை தங்களுடைய வாடிக்கையாளர்களாக மாற்ற சிகரெட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பள்ளி குழந்தைகளை எப்படிக் குறிவைத்து தன்னுடைய வியாபார உத்திகளை வகுக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன் படி தங்களுடைய வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவதற்குக் குழந்தைகளைக் குறிவைத்து சில விளம்பர உத்திகளை அவை கையாள்வது தெரியவந்துள்ளது.

    இந்தியாவிலும் பள்ளிச் சிறுவர்களைக் கவர்வதற்காக சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருட்கள் கிடைக்கும் கடைகளைப் பெரு நிறுவனங்கள் குறிவைத்துள்ளன. சிகரெட்டுகள் சம்பந்தமான விளம்பரங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளதால் சிகரெட்டுகள் கிடைக்கும் கடைகள் குறிவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    சிறார்களைக் கவர்வதற்காக நான்கு உத்திகளை அந்நிறுவனங்கள் கையாள்கின்றன.
    1. இனிப்பான பானங்கள் மற்றும் தின்பண்டங்களுக்கு அருகில் சிகரெட்டுகளை காட்சிப்படுத்துவது.
    2. குழந்தைகளின் கண் பார்வை அளவில் அவற்றை வைப்பது.
    3. பல்வேறு பிளேவர்களில் சிகரெட்டுகளை அறிமுகப்படுத்துவது.
    4. மெலிதான ஒற்றை சிகரெட்டுகளை விற்பது.

    முக்கியமாக இந்தியா மாதிரியான வளர்ந்துவரும் நாடுகளில் இந்த உத்திகள் மிகப் பெரிய அளவில் செயல்படுத்தப்படுவதாகவும், இது மிகச் சிறிய வயதிலேயே புகைப்பழக்கத்திற்குப் பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை அடிமையாக்குவதும் ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு வருடமும் நிக்கோட்டின் மற்றும் புகையிலை பயன்பாட்டால் 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதனால் சிறுவர் சிறுமிகளை தங்களுடைய வாடிக்கையாளர்களாக மாற்றிவிட்டால் நிக்கோட்டின் மற்றும் புகையிலை பயன்பாட்டால் இறப்பவர்கள் எண்ணிக்கையின் சராசரி குறையும் என்பதால் இந்த திட்டத்தை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் கையிலெடுத்துள்ளன.

    மற்றொரு மிகப் பெரிய சவால் என்னவென்றால் ஆன்லைனில் விளம்பரம் செய்வதையோ பார்வையில் படும்படியாக புகையிலை மற்றும் சிகரெட் படங்களைக் காட்சிப்படுத்துவதிலோ எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்பதால் ஆன்லைன் மூலமும் சிறார்கள் புகையிலை நிறுவனங்களுக்கு இலக்காகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Tobacco, WHO

    அடுத்த செய்தி