கொரோனா செய்த நல்ல காரியம்... இங்கிலாந்தில் புகையிலை நுகர்வு கணிசமாக குறைவு!

COVID-19 தொற்றுநோய்களின் போது சுமார் 1 மில்லியன் மக்கள் புகைபிடிப்பதை விட்டுவிட்டதாக ஆக்சன் ஆன் ஸ்மோக்கிங் அண்ட் ஹெல்த் (Ash) சில புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது.

கொரோனா செய்த நல்ல காரியம்... இங்கிலாந்தில் புகையிலை நுகர்வு கணிசமாக குறைவு!
புகையிலை
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 5:33 PM IST
  • Share this:
உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச அளவில் புகையிலை நுகர்வுக்கு சாதகமான தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியுள்ளதா? யு.சி.எல் புகைப்பிடிக்கும் கருவித்தொகுப்பு ஆய்வின் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் சிலர் கேட்கும் கேள்வி இதுதான். இந்த வருடத்தில் மட்டும் இங்கிலாந்தில் புகைபிடிப்பதை நிறுத்துவதன் வெற்றி விகிதத்தில் வியத்தகு அதிகரிப்பை தரவுகள் காட்டியுள்ளன.

ஊரடங்கு காலத்தில் பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் புகையிலை பழக்கம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொற்றுநோய் காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என விரும்பியதால் குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று நோயின் விளைவுகள் காரணமாக இங்கிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, உலகளவில் பல தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புகையிலை நிறுத்த பிரச்சாரங்கள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்? மருத்துவர் என்ன சொல்கிறார்?

இந்த பிரச்சாரத்தை இங்கிலாந்தில் உள்ள "ஸ்டாப்டோபர்" மற்றும் பிரான்சில் உள்ள "புகையிலை இலவச மாதம்" உட்பட பல அமைப்புகள் நடத்த உள்ளன. கடந்த 2019ல் புகையிலை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்களின் விகிதம் 14.2% ஆக இருந்தது. அந்த விகிதம் தற்போது 2020 ஆகஸ்டில் 23.2% ஆக உயர்த்துள்ளது. கடந்த ஒரு சகாப்தத்திலேயே இது தான் மிக உயர்ந்த விகிதம் என கூறப்படுகிறது.

புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு புகைப்பிடிப்பதை தடுக்கும் பிரச்சாரங்கள் பங்களித்திருந்தாலும், சமீபத்திய மாதங்களில் காணப்பட்ட சரிவுகளுக்கு கொரோனா வைரஸ் முக்கிய பங்களிப்பு என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிலும், ஊரடங்கு மட்டும் காரணமல்ல, சமூக செயல்பாடு அதிகம் இல்லாததும் காரமாக இருக்கலாம் என்கின்றனர்.

இருப்பினும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த விருப்பமே பலர் புகையிலை பழக்கத்தை கைவிட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.உலகில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையில் தொற்றுநோய் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?என்பதைத் தீர்மானிக்க இந்த நேரத்தில் போதுமான பின்னடைவு இல்லை. தற்போது வெளிவந்துள்ள தரவுகள் இங்கிலாந்து நாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தாலும் மற்ற நாடுகளுக்கு இல்லை என்று சொல்லலாம்.

அமேரிக்காவில் இ-சிகரெட் பழக்கம் கொண்டவர்களின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வருடாந்த தேசிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பின்படி, 11 முதல் 18 வயதிற்குள் கிட்டத்தட்ட 2 மில்லியன் வாப்பர்களின் (இ-சிகரெட்) எண்ணிக்கை கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. ஆனால் இந்த தரவுகள் கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்னதாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தொற்றுநோய் இருக்கிறதோ, இல்லையோ புகையிலை பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் மிகவும் முனைப்புடன் செயல்பட உள்ளதாக ஆராய்ச்சி செய்த அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading