• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா காலத்தில் காலை நடைப்பயிற்சிக்கு வெளியே செல்லலாமா? ஆராய்ச்சியாளர்கள் கூறுவதென்ன?

கொரோனா காலத்தில் காலை நடைப்பயிற்சிக்கு வெளியே செல்லலாமா? ஆராய்ச்சியாளர்கள் கூறுவதென்ன?

நடைப்பயிற்சி | Walking

நடைப்பயிற்சி | Walking

கொரோனா நோயின் தீவிரத்தை யாராவது குறைக்க விரும்பினால், அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

  • Share this:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியதில் இருந்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்க அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இதனால் ஒருவரின் உடல் செயல்பாடுகள் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

இதனால் பலர் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இன்னும் பலர் எந்த வித உடல் செயல்பாடுகளும் இல்லாமல் சோம்பல் உணர்வு கொண்டவர்களாக மாறியுள்ளனர். உண்மையில் ஒரு நபர் தனது உடலுக்கு பெரிய வேலையை கொடுக்காவிட்டால் அல்லது எந்தவொரு உடற்பயிற்சியையும் அல்லது எந்தவிதமான உடல் செயல்பாடுகளையும் செய்யாவிட்டால், கொரோனா வைரஸை பெற வாய்ப்புள்ளது என்று டெய்லிபியோனரில் வெளியான ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலங்களில் நீங்கள் நடைப்பயிற்சிக்கு செல்ல வேண்டுமா?

ஒருவர் தொடர்ந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும் அல்லது நடைபயிற்சி செய்வதன் மூலமும் கொரோனா வைரஸை வெல்ல முடியும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சமூக விலகல், முகக்கவசங்கள் என நீங்கள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றி, உங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு செல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் உள்ளிருந்து பிட்டாக இருக்கலாம். இதனால் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்து:

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் (British Journal of Sports Medicine) வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில், சீரற்ற முறையில் உடல் செயல்பாடுகளில் உள்ள நோயாளிகளுக்கு கடுமையான கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இது குறித்து அமெரிக்காவின் கைசர் பெர்மனெண்டே ஃபோண்டானா மருத்துவ மையத்தின் மருத்துவர் ராபர்ட் இ சாலிஸ் கூறியதாவது, "இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளின் முக்கியத்துவம் மற்றும் குறிப்பாக உடல் செயல்பாடுகளுக்கான விழிப்புணர்வு அழைப்பு" என்று கூறினார்.

எனவே கொரோனா நோயின் தீவிரத்தை யாராவது குறைக்க விரும்பினால், அவர்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தவறாமல் உடற்பயிற்சி செய்யும் நபர்கள் கொரோனா தாக்கத்தை வீழ்த்துவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளதாகவும், அதே நேரத்தில் அதிக உடல் செயல்பாடு இல்லாதவர்கள் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்க வாய்ப்பிருப்பதாகவும் என்று சல்லிஸ் மேலும் கூறினார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு இந்த எளிமையான பழக்கங்களே போதுமானது..!

ஜனவரி 1, 2020 முதல் அக்டோபர் 21, 2020 வரை சுமார் 50,000 இளம் வயதினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கையில் 6.4 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து உடல் செயல்பாடுகளை மேற்கொள்பவர்களாக கண்டறியப்பட்டனர். அதிலும் அவர்கள் விரைவில் குணமடைந்தனர். இதையடுத்து 14.4 சதவீதம் பேர் உடல் செயல்பாடுகள் செய்யாததன் காரணமாக நீண்ட நாட்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இதுதவிர 50,000 பேரில் 2.4 சதவீதம் பேர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள 1.6 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் எல்லோரும் எடுக்க வேண்டிய மருந்து உடற்பயிற்சி. தினமும் உங்கள் உடலுக்கு வேலை கொடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: