Home /News /lifestyle /

ரொம்ப யோசிச்சா டயர்ட் ஆகுதா? ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்

ரொம்ப யோசிச்சா டயர்ட் ஆகுதா? ஆய்வு சொல்லும் காரணம் இதுதான்

மாதிரி புகைப்படம்

மாதிரி புகைப்படம்

Health | நல்ல ஓய்வு, தூக்கம் போன்றவை குளுட்டமேட் உற்பத்தியை குறைக்கும் என்றும், ப்ரீஃப்ரொன்டல் வளர்சிதை மாற்றங்களைக் கண்காணிப்பது கடுமையான மனச் சோர்வைக் கண்டறிய உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  நார்மலா புத்தகம், மெதுவாக நகரும் திரைப்படம் இதை எல்லாம் பார்க்கும் போது நமக்கே தெரியாமல் கண்கள் சொருகி தூக்கம் சொக்கும். ஆனால் ஒரு விஷயத்தை பற்றி ரொம்ப டீப்பாக யோசித்தால் மட்டும் தூக்கத்திற்கு பதிலாக சோர்வாக உணர்வது ஏன்? என என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?. ஆழ்ந்து சிந்திக்கும் போது மக்கள் மனரீதியாக சோர்வடைவதற்கான காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து புதிய விளக்கங்களை வெளியிட்டுள்ளன.

  கம்பியூட்டர் போன்ற இயந்திரங்கள் தொடர்ந்து செயல்படும் போது, மனிதனின் மூளை மட்டும் ஏன் சோர்வடைகிறது? என்ற கேள்வி எழுந்தது. பிரான்சின் பாரிஸில் உள்ளபிட்டி-சல்பெட்ரியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் பெசிக்லியோன் மற்றும் சக பணியாளரான அன்டோனியஸ் வீஹ்லர் ஆகியோர் அதிகமாக யோசிக்கும் போது சோர்வு ஏற்படக்காரணம் என்ன என்பதை கண்டறிய முடிவெடுத்தனர்.

  எனவே ஆய்வில் பங்கேற்றவர்களை இரண்டு குழுக்களாக பிரித்தனர். அதில் ஒரு குழுவிற்கு கடினமாக சிந்திக்கும் வேலையும், மற்றொரு குழுவுக்கு ஈஸியான வேலையும் கொடுக்கப்பட்டது. ஒரு பரபரப்பான வேலை நாளில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய காந்த அதிர்வு நிறமாலையை (எம்ஆர்எஸ்) பயன்படுத்தி ஆய்வு நடத்தினர்.

  Read More : 6 வாரங்களில் சுமார் 4 கிலோ எடையை குறைத்த நடிகை ஜெனிலியாவின் ஃபிட்னஸ் ஜர்னி - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ.!


  இந்த ஆய்வில் கடினமாக யோசிக்கும் குழுவினர் விரைவிலேயே சோர்வடைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அப்போது தான் தீவிரமாக யோசித்து பல மணி நேரம் வேலை செய்யும் நபர்களின் மூளையில் ப்ரீஃப்ரொன்டல் கார்டெக்ஸ் (Prefrontal Cortex) என்ற பகுதியில் நச்சுத்தன்மையுள்ள குளுட்டமேட் என்ற ரசாயனத்தை உருவாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.

  பிரான்சின் பாரிஸில் உள்ளபிட்டி-சல்பெட்ரியர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் பெசிக்லியோன் கூறுகையில், "சோர்வு என்பது மூளையால் உருவாக்கப்படும் மாயை என கோட்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் எங்கள் ஆராய்ச்சி முடிவுகள் தீவிரமாக சிந்திக்கும் போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், மூளை சோர்வடைவதையும், இது சிந்திப்பதை நிறுத்திவிட்டு வேறு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி நம்மை எச்சரிக்கை மூளை செய்யும் சமிக்ஞை” என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும் தீவிரமாக சிந்திக்கும் விஷயத்தில் இருந்து சோர்வு உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது. இதனால் அதிக வேலைப்பளு இல்லாத, குறைந்த செயல்திறன் கொண்ட வேலைகளை செய்ய ஆரம்பிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  நல்ல ஓய்வு, தூக்கம் போன்றவை குளுட்டமேட் உற்பத்தியை குறைக்கும் என்றும், ப்ரீஃப்ரொன்டல் வளர்சிதை மாற்றங்களைக் கண்காணிப்பது கடுமையான மனச் சோர்வைக் கண்டறிய உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனச்சோர்வை தடுக்க வேலைகளை திட்டமிடுவதும், சோர்வாக இருக்கும் போது முக்கியமான முடிவுகளை எடுப்பதை தடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

  ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் ஏன் குளுட்டமேட் குவிப்பு மற்றும் சோர்வுக்கு குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகிறது என்பதை அறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். மூளையில் உள்ள குளுட்டமேட்டை அளவைக் கொண்டு மனச்சோர்வு அல்லது புற்றுநோய் போன்ற சுகாதார நிலைகளிலிருந்து மீண்டு வருவதை கண்காணிக்க முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளனர்.
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Health, Lifestyle, Tired

  அடுத்த செய்தி