ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி, தைராய்டு மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்வது போன்றவற்றை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு மேற்கொண்டால் தைராய்டு பிரச்சனையில் உள்ளவர்களும் விரைவில் உங்களது எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மனித உடலில் மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடலுக்கு கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளவும், கதகதப்புடன் வைத்து கொள்ளவும் தைராய்டு சுரப்பி உதவுகிறது. ஆனால் உடலுக்கு தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மருத்துவ ரீதியாக தைராய்டு ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என இரண்டு வகைகளில் உள்ளது. ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையாகும். இது வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு பெரும்பாலும் எடை மேலாண்மைக்கு வழிவகுக்கிறது.
அதே நேரத்தில் ஹைப்பர் தைராய்டிசத்தில் உடலுக்கு தேவையாக பசியிருந்து நல்ல உணவுகளை உட்கொண்டாலும் உடல் எடை குறைதல், கை- கால் நடுக்கம், மனநிலை மாறுவது, கொஞ்சம் வெயில் அடித்தாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் போவது, மூச்சுத்திணறல் , இதயத்துடிப்பு சீரற்று இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
குறிப்பாக ஹைப்போ தைராய்டிசத்தில் அபரீதமான உடல் எடை அதிகரிக்கும் என்பதால் எப்படி இதனைக்கட்டுக்குள் கொண்டு வருவது என்பது சவாலான விஷயம். எனவே இந்நேரத்தில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க என்னென்ன வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்து கொள்வோம்..
ஹைப்போ தைராய்டிசத்துடன் உடல் எடையைக் குறைக்கும் வழிமுறைகள்:
உடற்பயிற்சி மேற்கொள்வது:
ஹைப்போ தைராய்டிசத்தால் அபரீதமான உடல் எடை ஏற்படக்கூடும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதோடு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. எனவே தினமும் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒருபோதும் நீங்கள் நிறுத்தவிடக்கூடாது.
இந்த மசாலாப் பொருட்களை உங்கள் காபியில் சேர்த்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...
உணவுகளை முறையாக உட்கொள்வது:
ஒரு நாளைக்கு உங்களது உணவில் எவ்வளவு கலோரிகளை நீங்கள் உட்கொள்கிறீர்கள்? என்பதை கண்காணிப்பது அவசியமான ஒன்று. ஆரோக்கியமான உணவுகள், போதுமான அளவு புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகள் உங்களது தைராய்டு செயல்பாட்டிற்கு சிறந்தாக அமைகிறது.
தைராய்டு மருந்தை சரியாக எடுத்துக்கொள்வது:
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தைராய்டு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் உங்களுக்கான தைராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் அல்லது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தான் உங்களது காலை உணவை உட்கொள்ள வேண்டும். எத்தனைப் பணிகள் இருந்தாலும் இந்த நடைமுறையை நீங்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் உங்களை மீறி உங்களது உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
முடி உதிர்வு, அடிக்கடி தலைவலி... வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் இத்தனை பிரச்சனைகள் வருமாம்..!
மேற்கண்ட நடைமுறைகளை உங்களது வாழ்க்கையில் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நிச்சயம் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் நிச்சயம் மேற்கூறியுள்ள வாழ்வில் நடைமுறைகளை மேற்கொண்டாலே இவர்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் எவ்வித சவாலும் இருக்க வாய்ப்பில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thyroid, Weight loss