• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள்

புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள்

புரோஸ்டேட் புற்றுநோய்

புரோஸ்டேட் புற்றுநோய்

65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் புரோஸ்டேட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  • Share this:
இன்றைய சமூகத்தில் புற்றுநோய் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும் புற்றுநோய்களில் பல்வேறு வகை உள்ளன. அதிலும், உலகம் முழுவதும் உள்ள ஆண்களில் கண்டறியப்படும் நான்காவது பொதுவான வகை புரோஸ்டேட் புற்றுநோய் ஆகும். ஆணின் புரோஸ்டேட்டில் ஒரு சிறிய வால்நட் அளவுக்கு புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையும், இந்த சுரப்பி விந்தணு திரவத்தை உற்பத்தி செய்கிறது. இது சிறுநீர் கழிப்பதில் சிரமம், விந்து வெளியேறுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீரில் இரத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் நோய் உருவாக்கும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.

65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்த புரோஸ்டேட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியில் உணவு மற்றும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறை போன்ற மற்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது நோயால் பாதிக்கப்பட்ட பிறகு அதனை சரிசெய்ய ஒருவர் கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற நீண்ட செயல்முறை இருக்கிறது.

இருப்பினும் இந்த புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்க சில எளிய விஷயங்களை பின்பற்றினால் போதும். ​​இந்த புற்றுநோயின் ஆபத்தை குறைக்க ஆண்கள் செய்ய வேண்டிய சில உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து பின்வருமாறு பார்ப்போம்.

குறைந்த கொழுப்பு உணவினை சாப்பிட வேண்டும்:

கொழுப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்லது மற்றும் கெட்டது. நல்ல கொழுப்பு உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. அதே சமயம் கெட்ட கொழுப்பு அதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, உங்கள் உணவில் நட்ஸ், நெய், மீன் போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் வறுத்த பழங்கள் போன்ற கெட்ட கொழுப்பின் மூலங்களைக் குறைக்க வேண்டும்.

நீங்கள் நல்ல கொழுப்பை உட்கொள்வதில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமோ, அதேபோல அதனை அளவோடு சாப்பிடுவதும் அவசியம். ஏனெனில் அதிக கொழுப்பு உட்கொள்வது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் மெலிந்த இறைச்சி போன்ற குறைந்த அளவு நல்ல கொழுப்பை எடுத்துக் கொள்வது நல்லது.



அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்

காய்கறிகள் மற்றும் பழங்களில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருக்கின்றன மற்றும் உள் உறுப்புகள் நன்றாக செயல்பட உதவும். ஒவ்வொரு பழமும் மற்றும் காய்கறியும் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. எனவே, அவற்றின் அற்புதமான பலன்களைப் பெற, அவற்றை அவ்வப்போது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், உங்கள் உணவில் சோயாபீன்ஸ் மற்றும் கிரீன் டீயை அதிகம் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.

உங்கள் உடலில் ஹார்மோன் கட்டுப்பாடே இல்லாமல் ஏறினால் என்ன ஆகும் தெரியுமா..?

ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

அதிக எடை அல்லது பருமனாக இருப்பது புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பிற நாட்பட்ட சுகாதார சீர்கேடுகள் உருவாக காரணமாக அமையலாம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட BMI (பாடி மாஸ் இண்டெக்ஸ்) கொண்ட ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரியந்துள்ளது. முக்கியமாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடையை பராமரிப்பது அவசியம். ஏனெனில் இந்த வயதிற்குப் பிறகு வளர்சிதை மாற்றம் குறைகிறது. இது பொதுவாக எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், ஆரோக்கியமான உணவைப் பின்பற்றவும், உடற்பயிற்சி செய்யவும்.



தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்

உடற்பயிற்சி என்பது எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் அல்லது மெலிந்து போக முயற்சிப்பவர்களுக்கு மட்டுமே அவசியம் என்ற ஒரு கருத்து காலம்காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ உடற்பயிற்சி செய்வது அவசியம். இது அனைவருக்கும் பொருந்தும். புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற வகையான நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உடற்பயிற்சி உதவும். உங்கள் எடையை நிர்வகிக்கவும், உங்கள் கலோரி உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

புகைபிடிப்பதையும் குடிப்பதையும் நிறுத்துங்கள்

அதிகப்படியான புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, இந்தப் பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது. இவை இரண்டும் உங்கள் நோயெதிர்ப்புச் செயல்பாட்டைக் குறைக்கின்றன. இதனை தொடர்ந்து பின்பற்றுவது பல சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலுமாக விட முடியவில்லை என்றால் கூட, வாரத்திற்கு ஒரு கிளாஸ் மது அருந்தலாம். ஆனால் புகைபிடிப்பதை நீங்கள் உடனடியாக கைவிட வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: