"ட்ரிக்கர் பண்ணாதே… செம கோபம் வருது" என்பதை நம்மில் பலரும் அடிக்கடி கூறும் வார்த்தைகளில் ஒன்றாக உள்ளது. வீடு மற்றும் அலுவலகங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபம் அடைவது நம்மை பெரும் நோயாளியாக மாற்றுவதற்கு ஒரு வழி என்கின்றனர் மனநல மருத்துவர்கள். உதாரணமாக வேலை முடிந்து நாம் வீட்டிற்குள் வரும் போது, உங்களுடைய துணைவியார் எந்த வேலையையும் செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தால், அதை அப்படியே விட்டு விட மாட்டோம். அந்த விஷயம் தான் நமக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமையும். ஏன்? திட்டுகிறோம் என்பதைக் கூட சில நேரங்களில் யோசிப்பதற்கு நேரம் இருக்காது.
பொதுவாக கோபம் என்பது இயற்கையான மற்றும் இயல்பான ஒரு விஷயம் என்றாலும், சரியான முறையில் கையாளப்பட வேண்டும். இல்லையென்றால் பல எதிர்வினைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். பொதுவாக நாம் கோபப்படும் போது, நம் உடலில் அட்ரினலிகன் அதிகரிக்கிறது. இதனால் நம் தசைகள் இறுக்கமடைதல், அதிக வியர்வை, இதய துடிப்பு அதிகரித்தல், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது.
டாக்டர் நிக்கோல் லெபெராவின் கூற்றுப்படி, இதுபோன்ற கோபம் உங்களது மூளையின் தன்மையை அதிக ஆபத்திற்கு உள்ளாக்குகிறது. எனவே மூளையைப் பாதுகாப்பாக வைத்திருப்பது உங்களை கவலையடைய செய்யாமல் வைத்திருப்பது உங்களுடைய கடமை. இதோடு நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? என்பதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒருவர் மீது கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாத கதைகளை நீங்கள் உங்கள் மூளையில் ஏற்றிக்கொள்ளக்கூடாது. இதனால் பல பிரச்னைகளை நீங்கள் தவிர்க்க முடியும்.
மேலும் உங்களது நரம்பு மண்டலத்திற்குப் பாதுகாப்பான குறிப்புகளை அனுப்ப மற்றும் சிந்தனை முறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றால் வயிற்றில் இருந்து ஆழமான மற்றும் மெதுவாக சுவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அமையும். தேவையில்லாத அனுமானங்களை நீங்கள் உங்களது மூளையில் ஏற்றிக்கொள்ளாதீர்கள். எப்போதும் வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்வது உங்களின் வாழ்க்கைக்கு சிறந்து.
கோபத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகள்:
கிரவுண்டிங் பயிற்சிகள்: நீங்கள் அதிக கோபத்திற்கு உள்ளாக்கப்படுகிறீர்கள் என்று உணரும்போது, தூண்டப்பட்டதாக உணரும்போது, அமைதியாக இருக்கவும். மேலும் உங்களைத் திசை திருப்ப உதவும் கிரவுண்டிங் பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும், 5-4-3-2-1 என்ற அடிப்படையில் உங்களைச் சுற்றியுள்ள 5 பொருட்களைத் தொட்டு பார்க்கவும். அது டேபிள், சேர் போன்ற எதுவாகவும் இருக்கலாம். மேலும் உங்களுக்கு அருகில் கேட்கக்கூடிய விஷயங்கள் மற்றும் அருகில் உள்ளவர்களுடன் பேசுவது உங்களது மன அழுத்தத்தையும் கோபத்தைக் குறைக்கும்.
Also Read : Anger : கட்டுப்படுத்த முடியாத உங்கள் கோபத்தை தணிக்க சில வழிகள்..!
உங்களைப் பற்றி சோசியல் மீடியாவில் தேவையில்லாத பேச்சுகள் மற்றும் கருத்துக்கள் வரும்போது எதையும் நீங்கள் கண்டுகொள்ளக்கூடாது. இதனால் கோபம் வரும் என்று நினைத்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
தியானம் மேற்கொள்வது அவசியமான ஒன்று. இது உங்களது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தையும் போக்குவதால் தியானம் மிகவும் சிறந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anger, Mental Health, Mental Stress