இருபதுகளில் பெரும்பாலானவர்களுக்கு ஆரோக்கியமான இதயம் மற்றும் நேர்த்தியான, ஃபிட்டான உடலமைப்பு இருக்கிறது. 30ஐ தொட்டவுடன், அல்லது 30களின் மத்தியில் பலருக்கும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இதய நோய்களால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். "எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்" என்ற பழமொழி, நமது இதய ஆரோக்கியத்திற்கும் பொருந்தும். உடல் ஆரோக்கியம் மற்றும் இதயத்தை கவனித்துக் கொண்டாள் தன இதய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே 30 வயதை அடைந்த பிறகு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கியமான 4 வழிகள் இங்கே:
தினசரி உடற்பயிற்சி :
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன், அதிக கொலஸ்டிரால் போன்றவைதான் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளாகும். இதற்கு, தினசரி உடற்பயிற்சி செய்வது, உடல் ஆரோக்கியமாக இருக்கவும், இதயத்தை பாதுகாப்பதற்கும் சிறந்த வழியாகும். உடற்பயிற்சி என்பது விளையாட்டு, நீச்சல், ஏரோபிக்ஸ், அல்லது தினசரி 40 நிமிடங்களுக்கு நடை பயிற்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். எளிமையாக, உடலை வியர்க்கச் செய்யும் எந்த வகை உடற்பயிற்சியும் செய்யலாம்.
குறைவான கொழுப்பு மற்றும் மாவுச்சத்து கொண்ட உணவுகள் :
அதிக புரதம் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு உள்ள உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உலர் பழங்கள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருக்கக் கூடாது
ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக சீரான இடைவெளியில் சிறிய அளவில் சாப்பிடலாம்.
புகைப்பிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் :
புகைப்பிடிப்பது, இதயத்துக்கு மிகப்பெரிய எதிரி மற்றும் இருதய நோய்கள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கின்றது. புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு புகைபிடிக்காதவர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், இதனால் இறக்கும் வாய்ப்பு 3-4 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு, ஒரே வருடத்திலேயே அதன் ஆபத்து பாதியாகக் குறைந்து விடும்.
எப்போதாவது புகைபிடிப்பதும் இதே போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, எந்த வயதினராக இருந்தாலும், குறிப்பாக 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
உடல் நல பரிசோதனைகள் :
"வரும்முன் காப்போம்" என்பதற்கு ஏற்ப, நீங்கள் 30 வயதை அடைந்தவுடன், வருடத்திற்கு ஒரு முறையாவது இதயம் மற்றும் உடல்நலப் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
புகைப்பிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், பருமனானவர்கள் ஆகியோருக்கு இதய நோய் அபாயம் அதிகம். ஏற்கனவே, குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள், இதய நோய் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
Also Read : இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு.. என்ன காரணம்..? தடுக்கும் வழிகள் என்னென்ன.?
மேலே குறிப்பிட்டுள்ள நான்கு விஷயங்களையும் ஒன்றாகப் பின்பற்ற வேண்டும். மேலும், நல்ல தூக்கம், ரிலாக்சாக இருப்பது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது போன்றவை 30களில் மட்டுமல்லாமல், அதற்குப் பிறகும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heart attack, Heart disease, Heart Failure, Heart health