ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பருவகால தொற்றுகளை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி..?

பருவகால தொற்றுகளை சமாளிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி..?

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில், பலவித நோய் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நமது உடல் மிக எளிதான ஒரு இறையாகிவிடும்.

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

கொரோனாவிற்கு பிறகு தொற்று நோய்களை பற்றிய பயம் மக்களிடையே அதிகரித்துள்ளது. முக்கியமாக எளிதில் பரவும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். நோய் தொற்றுகள் தொடுவதின் மூலமும், நீரின் மூலமும், காற்றின் வழியாகவும் அதிம் பரவுகின்றன.

முக்கியமாக நீரின் மூலம் பரவும் நோய்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது. எனவே இது போன்ற சூழ்நிலையில் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் தொற்று நோய்கள் தாக்காத வண்ணம் இருப்பதற்கு, உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கொள்வது என்று மருத்துவர்கள் சில குறிப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும் நோய்நொடியின்றி வாழ்வதற்கும் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகிறது. உடலில் ஏதாவது பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமிகள் நுழைந்துவிட்டால், முதலில் நமது உடலின் போர் வீரர்களான இந்த வெள்ளை அணுக்கள் விரைவாக செயல்பட்டு, கிருமிகளை அழித்து உடலை பாதுகாக்கின்றன.

ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில், பலவித நோய் தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நமது உடல் மிக எளிதான ஒரு இறையாகிவிடும். உதாரணத்திற்கு கடந்த கொரோனா பெருந்தொற்றின் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தவர்களில் பலர் கொரோனா காலகட்டத்தின் முதல் அலையிலேயே பலியாகிவிட்டனர்.

கொரோனா பெருந்தொற்றில் உயிரிழக்காமல் வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை நாம் கடந்துள்ளோம். இதற்கு முக்கிய காரணமாக நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திதான் இருந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி வலிமையுடன் இருப்பதற்கு அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகிறது. குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

இதைப் பற்றி பேசிய ஹெச்டி லைப் ஸ்டைல், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பௌலா கோயல் ”நீரின் மூலம் பரவும் நோய்கள் எளிதாக குழந்தைகளை தாக்குகின்றன. இதற்கு முக்கிய காரணம் குழந்தைகள் கண்ட கண்ட உணவுகளையும், மேலும் அவற்றை பலரோடு பகிர்ந்தும் உண்கின்றனர். முக்கியமாக மழைக்காலங்களில் நீரின் மூலம் பரவும் நோய்கள் மிக எளிதில் குழந்தைகளை தாக்குகின்றன. மேலும் சுகாதாரமற்ற குடிநீரும், சுத்தமில்லாத உணவு மற்றும் வெளியே கிடைக்கும் தின்பண்டங்கள் ஆகியவற்றை உண்பதால் மிக எளிதில் நோய்கள் குழந்தைகளை தாக்குகின்றன.

மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுதலினாலும் நோய் தொற்றுக்கள் மனிதர்களை தாக்குகின்றன. அவ்வாறு பரவும் நோய்க்கிருமிகள் மனிதர்களின் சருமம், காதுப்பகுதி, மற்றும் கண்கள் ஆகியவற்றில் தங்கி பிரச்சினையை ஏற்படுத்தலாம். நீரின் மூலம் பரவும் இந்த நோய் கிருமிகள் வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளாலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

Also Read : Air pollution : சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும் 5 வழிகள்..!

வயிற்றுப்போக்கு, காலரா, ஃபுட் பாய்சன். செரிமான கோளாறு, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவை பொதுவாக ஏற்படும் நோய் தொற்றுகள். குழந்தைகள் நீச்சல் குளத்திலோ அல்லது நீர்நிலைகளிலோ நீச்சல் அடிக்கும் போதும், சருமத்தில் தொற்றுகிருமிகள் ஒட்டிக்கொண்டு உடலில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோயான அஸ்காரியாசிஸ் போன்றவை குழந்தைகளை தாக்கலாம். மலேரியா, டெங்கு போன்றவை மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் மாசுபட்ட நீரினால் ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் உட்கொள்ளும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை, சுத்தமில்லாத நீரில் கழுவப்பட்டால் அதன் மூலமும் நோய் தொற்றுகள் பரவக்கூடும். முக்கியமாக முளைவிட்ட காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும். சந்தையில் அவை இருந்த சூழ்நிலை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் வளர்வதற்கு சாதகமாக இருக்கும்.

ரோட்டு கடைகளில் தின்பண்டங்கள் வாங்கி உண்பதையும், மழைக்காலங்களில் பலரோடு உணவை பகிர்ந்து உண்பதையும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மேற்கூறிய அனைத்துமே நோய் தொற்று பரவுவதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உடலில் தொற்று கிருமிகள் ஒட்டி இருப்பதற்கான சாத்தியம் கூறுகள் அதிகம். முக்கியமாக மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இந்த தொற்றுகள் மிக எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையை கொண்டுள்ளன.

நீரின் மூலம் பரவும் அதிகப்படியான நோய்கள் நீர்நிலைகளில் கலக்கும் வேதிப்பொருள்களினாலும், ஹெவி மெட்டல்ஸ் என அழைக்கப்படும் கன உலோகங்களினால் ஏற்படும் மாசினாலும் நீர்நிலைகள் தன்மை மாசுபட்டு, அவை மிக எளிதில் நோய் தொற்று பரவ வசதியான சூழ்நிலையை உண்டாக்கி விடுகின்றன. அந்த நீரை மனிதர்கள் பயன்படுத்தும் போதோ அல்லது அவற்றை பருகும் போதோ, மிக எளிதில் நோய் தொற்றுகள் பரவுகின்றன.

Also Read :  எவ்வளவு சளி இருந்தாலும் முறித்து எடுக்கும் மிளகு கஷாயம்... எப்படி போட வேண்டும்..?

நோய் தொற்று பாதித்துள்ளதற்கான அறிகுறிகள்:

 • குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வயிற்று உப்புசம், அடிவயிற்றில் வலி, அதிகமான தாகம், உடல் பலவீனம் ஆகியவை ஏற்படுதல்.
 • வாந்தி மயக்கம் அடிக்கடி உண்டாவதுடன், மிகக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீர் சத்து குறைபாடு ஆகியவை ஏற்படலாம். அடிக்கடி தலைவலி ஏற்படும்.
 • அடி வயிற்றில் தாங்க முடியாத வலியையும் உண்டாக்கும். மேலும் மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும். மலேரியா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் தாக்கி கடுமையான குளிர் ஜுரம் உண்டாகலாம். இவை டைபாயிட் நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம்.
 • வாந்தி, சோர்வு, காய்ச்சல், பசியின்மை, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
 • உடல் எடை குறைதலும் நோய் தொற்று பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
 • நோயின் அறிகுறிகள் மற்றும் ஆரம்ப கட்ட பாதிப்புகளை பொறுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நோய்தான் என கண்டு கொண்ட பின், அதற்கான சிகிச்சை அளிக்கப்படும் என்று விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

  இது மட்டும் இன்றி தற்போதைய சூழலில் டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகிய நோயினால் அதிக அளவு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இந்த கொரோனா பெருந்தொற்றினால் நீண்ட விடுமுறைக்குபின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு குழந்தைகளும், இளம்பருவத்தினரும் தங்கள் நண்பர்களோடு வெளியில் சுற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

  மனதிற்கும் மகிழ்வாக, உற்சாக மனநிலையில் இருக்கும் அவர்கள் ரோட்டோர கடைகளில் விற்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டும், சுகாதாரத்தை பற்றி சற்றும் கவலை இல்லாமல் இருப்பதும் நோய் தொற்று பரவுவதற்கு எளிதாக சூழ்நிலையை உண்டாக்கி விடுகிறது. டைபாய்டு, இரைப்பை குடல் அழர்ச்சி, ஃபுட் பாய்சனிங் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை சுகாதாரமற்ற உணவு வகைகளாலும், ஆசைப்பட்ட நீரை குடிப்பதாலும் அதிகமாக ஏற்படுகிறது.

  Also Read :  சுளுக்கு பிடிச்சா உடனே என்ன செய்ய வேண்டும்..? இந்த டிப்ஸை கவனிங்க..!

  இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தான் மட்டும் அவதியுருவது மட்டுமல்லாமல் பலருக்கும் இந்த நோயை பரவ செய்கின்றனர். முக்கியமாக குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நீர் தேங்கியிருந்து, அதில் பலவித கிருமிகள் உண்டாகி இருக்க கூடும். அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பலருக்கும் கிருமிகள் பரவி, பொது சுகாதார சீர்கேட்டை உண்டாக்குகிறது..

  டாக்டர் மணன் வோரா, என்ற விளையாட்டு மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கூறுகையில், நோய் எதிர்ப்பு சக்தி தான் மனித உடலை எந்த ஒரு கொடுமையான நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. மனித உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நுழைந்து தாக்காத வண்ணம், நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு ஒரு கவசம் போல நின்று பாதுகாக்கிறது.

  அவ்வாறு உடலை நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வேண்டியது நமது கடமை. நோய் எதிர்ப்பு மண்டலமானது கிருமிகளை அழிப்பதற்கு, தனக்கென்று சில வரைமுறைகளை வைத்துள்ளது. இவற்றை அவை செம்மையாக செய்வதற்கு நாம் நமது அன்றாட பழக்க வழக்கங்களை சரியாகவும், சுகாதாரமான முறையிலும் செய்து வர வேண்டும்.

  தினசரி உடற்பயிற்சி : அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் அறிக்கையின் படி, ஒரு வாரத்திற்கு குறைந்தது 2 ½ மணி நேரம் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல், என்டோர்பிண்கள் எனப்படும் மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியதும், மன அழுத்தத்தை குறைக்க கூடியதுமான வேதிப்பொருள் சுரக்கிறது. இவை நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக செயல்படுவதற்கும் உதவுகிறது. வாரத்திற்கு மூன்றில் இருந்து ஐந்து முறை வரை உடற்பயிற்சி செய்வதும், ஒரு நாளைக்கு 10,000 அடிகளுக்கு மேல் நடப்பதும் அவசியம்

  போதுமான அளவு தூக்கம் : நம் உடலுக்கு போதுமான அளவுக்கு தூக்கம் கண்டிப்பாக அவசியம். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக செயல்பட உதவுகிறது. ஒருவேளை போதுமான அளவு தூக்கம் இல்லையெனில் அவை நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. எனவே குறைந்தது 7 லிருந்து 8 மணி நேரம் ஒரு நாளைக்கு தூங்க வேண்டும்.

  புகைப்பிடித்தல் மற்றும் மது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் :

  அதிக அளவில் ஆல்கஹால் உட்கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதுடன் புதிதாக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. மேலும் புகை பிடிப்பதனால் உருவாகும் வேதிப்பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அடியோடு குறைத்து பல்வேறு வித பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகள் தாக்குவதற்கு ஏதுவாக நமது உடலை பாதுகாப்பின்றி மாற்றி விடுகிறது.

  ஆரோக்கியமான மனநிலை : மனநிலையை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு யோகாசனம், பயணம் அல்லது உங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபட்டு மனதை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளலாம்.

  ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்:

  நம்முடைய உணவில் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சரியான அளவில் நீரை தினசரி குடித்து வர வேண்டும். பழங்கள், காய்கறிகள், பால், முட்டை மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். முக்கிய வைட்டமின்களான A,C,E, B6, மற்றும் B12 ஆகியவை உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். ஒரு வேலை இந்த ஊட்டச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு இல்லையெனில் அதற்கு ஏற்ற சப்ளிமெண்ட் பயன்படுத்தலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Immunity boost, Viral infection