• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மகப்பேறுக்கு பிறகு முடி, தோலில் பிரச்சனையா? காரணங்களும்..சிகிச்சை முறைகளும்..!

மகப்பேறுக்கு பிறகு முடி, தோலில் பிரச்சனையா? காரணங்களும்..சிகிச்சை முறைகளும்..!

மாதிரி படம்

மாதிரி படம்

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முகப்பரு பிரச்சனையில் தொடங்கி முடி உதிர்தல், உடல் எடை கூடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் என புதிய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

  • Share this:
கர்ப்ப காலம் என்பது தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான காலமாக இருந்தாலும், பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்கும் காலமாகவும் பெண்களுக்கு இருக்கும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முகப்பரு பிரச்சனையில் தொடங்கி முடி உதிர்தல், உடல் எடை கூடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் என புதிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். மகப்பேறுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புத்துயிர் பெறும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் அதேநேரத்தில் அழகியலை மேம்படுத்துவதிலும் கூடுதல் அக்கறை கொள்வதை பார்க்க முடியும்.

பிரசவத்துக்குப் பிறகு தோல் மற்றும் முடி சார்ந்த பிரச்சனைகள் இருக்கும் பெண்கள், இயற்கை அல்லது மருத்துவ ரீதியில் நிவாரணம் பெறுகின்றனர். இந்த மாதிரியான சிக்கல்களை அனுபவிக்கும் பெண்களுக்கு டாக்டர் லாரா தேவ்கான் வழிகாட்டுகிறார்.

ஹைபர்பிக்மென்டேஷன் மற்றும் மெலாஸ்மா (மங்கு)

ஹைபர்பிக்மென்டேஷன் மற்றும் மெலாஸ்மா எனப்படும் மங்கு ஆகியவை கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள் ஆகும். ஹைபர்பிக்மென்டேஷன், தோலில் ஒர நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். ஹார்மோன்கள் மாற்றம், சுற்றுச்சூழல், சூரிய ஒளி, சூடு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனையில் இருப்பவர்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ சார்ந்த தோல் பொருட்களை கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் ஊட்டும் சமயத்திலும் தோல் மீது தடவிக்கொள்ளலாம்.



முகத்தில் ஓரிடத்தில் மச்சம்போல் தோன்றும் மங்கு பின்னர் முகம் முழுவதும் பரவிக்கொள்ளும். இது ஏற்படுவதற்கும் மேற்கூறிய காரணங்கள் பொருந்தும். இது ஒரு நோய் அல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மங்குவில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றால் சன்ஸ்கீரின் பயன்படுத்தலாம். ஸ்டீராய்டு மற்றும் ஹைட்ரோகுயினான் கிரீம்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். டி.சி.ஏ சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆழமான மங்கு ஏற்பட்டிருந்தால் 50 விழுக்காடு அளவுக்கு குணப்படுத்த முடியும். மங்கு வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு, முறையான சன்ஸ்கிரீன், 6 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவரை அணுகுதல் ஆகியவை சிறந்த வழிகளாகும்.

மந்தம் மற்றும் தோல் வறட்சி

கர்ப்ப காலத்தில் மந்தத்தன்மை மற்றும் தோல்வறட்சி, நெகிழ்வுத்தன்மை இல்லாமல் போதல் என்பது இயல்பான ஒரு பிரச்சனையாகும். நீர்ச்சத்து போதுமான அளவில் இருந்தால், இந்த பிரச்சனையில் இருந்து ஏறத்தாழ தப்பிக்கலாம். பொதுவாக தோல் வறட்சி மற்றும் நெகிழ்வு தன்மை இல்லாமல் இருப்பவர்கள் ஹைலூரோனிக் சீரம் (hyaluronic serum) எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர் தேவ்கன் பரிந்துரைக்கிறார். இந்த மருத்து தோல் வறட்சியை போக்குவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும் என்றும் கூறியுள்ளார். நிறமிழப்பு, தோல் நெகிழ்வு தன்மை ஆகியவற்றுக்கும் மருந்தாக உள்ளதாக தெரிவிக்கும் மருத்துவர் தேவ்கன், எர்பியம் லேசர் சிகிச்சையை எடுத்துக்கொண்டால் தோல் நிறமிழப்பு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம் எனக் கூறியுள்ளார்.



ஹார்மோன் முகப்பரு

கர்ப்ப காலத்தில் தோல் சுருக்கம் மற்றும் முகப்பரு பிரச்சனைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக கவலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பிரசவ காலத்தில் முகப்பருவை நீக்குவதற்கு பென்சாயில் பெராக்சைடு மற்றும் சாலிசிக் அமிலம் சார்ந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர் தேவ்கன் பரிந்துரைக்கிறார். மேலும், நாள்தோறும் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும், தலையணைகள் மாற்ற வேண்டும், நீண்ட நேரம் செல்போன் திரையின் ஒளி முகத்தில் படக்கூடாது என அவர் அறிவுறுத்துகிறார். மருத்துவர்கள் பரிந்துரைத்த வாய்வழி மாத்திரைகள் வழியாகவும் தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறலாம் எனவும் மருத்துவர் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

பீரியட்ஸ் கறைகளை எளிமையாக நீக்க இவற்றை செய்து பாருங்கள்..!

முடி உதிர்தல், மெலிந்துபோதல்

கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி அதிகமாக உதிர்தல் மற்றும் முடியின் தன்மை மெலிந்து காணப்படும். புரோஜெஸ்டிரோன் குறைவதாலும், ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் ஏற்ற இறங்களினாலும் இத்தகைய பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்ள நேரிடும். முடி உதிர்தல் பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் கூறபட்டாலும், வைட்டமின் பி மற்றும் ஃபோலெட் நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ளும்போது அதில் இருந்து நிவாரணம் பெறலாம் என மருத்துவர் தேவ்கன் கூறுகிறார். மினாக்ஸிடில் (minoxidil) போன்ற ஸ்பிரேக்களை முடிகளின் மீது அடிக்கும்போது, முடியின் மயிர்க்கால்கள் வலிமை பெறும் என தெரிவித்துள்ள தேவ்கன், ஸ்டெம் செல்களை அதிகரிக்க உதவும் பிளேட்லெட் ஊசியை உச்சந்தலையில் செலுத்திகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இது முடியின் தரத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் எனக் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: