முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆண்களே... எப்போதும் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க நினைக்கிறீர்களா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

ஆண்களே... எப்போதும் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க நினைக்கிறீர்களா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..!

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கக்கூடும். பொதுவாக ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால் உடற்பயிற்சிகள் மட்டும் நல்ல தீர்வை வழங்காது

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆண்கள் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சியுடன் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கக்கூடும். பொதுவாக ஆண்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால் உடற்பயிற்சிகள் மட்டும் நல்ல தீர்வை வழங்காது என்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். மேலும் பெண்களை விட ஆண்களின் தசை அடர்த்தி அதிகம் என்பதால் பெண்களை விட ஆண்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். எனவே இன்றைக்கு ஆண்கள் இளமையாகவும், ஃபிட்டாகவும் இருப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறைகளின் லிஸ்ட் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுதல்:

பிரஸ்ஸாக கிடைக்கும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களைச் சாப்பிடலாம். இதோடு சீசன் சமயங்களில் கிடைக்கும் பழங்களை பிரஸ்ஸாக சாப்பிடும் போதும் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இந்திய உணவு முறைகளை பயன்படுத்துதல்:

இந்திய உணவு முறைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முதல் பருப்பு வகைகள் அனைத்தையும் பயன்படுத்தப்படுகிறது. எனவே ஆண்கள் இந்த உணவு முறைகளைப் பின்பற்றலாம். இது உங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும் பருவ கால காய்கறிகளுடன் சேர்த்து கிச்சடி போன்றவற்றை சமைத்து உட்கொள்ளலாம். இவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைவதோடு உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது.

உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..! 

குறிப்பாக வயது வந்த ஆண்களில் சுமார் 33 சதவீதம் பேர் குறைந்த உடல் நிறை குறியீட்டு எண்ண்ணைக் (low body mass index (BMI) கொண்டுள்ளனர்.எனவே அவர்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டாலும், நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு எடை தூக்குதல், கார்யோடிக் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது உங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதோடு ஆண்கள் தங்களுடைய உணவு முறைகளில் பூண்டை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஆன்டி- ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் அதிகளவில் இருப்பதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பிட்டாக வைத்திருக்க உதவுகிறது. அடுத்தப்படியாக பாதாம்.. இது ஆண்களுக்கு நல்ல ஸ்நாக்ஸாக உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியமாக உள்ளது.

பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்..? 

இது போன்று இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்த சோயா பீன்ஸ், பொட்டாசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவியாக தக்காளி உள்ளது. எனவே ஆண்கள் அதிகளவில் தங்களுடைய உணவில் இதனை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக்குறைப்பதற்குத் தினமும் மாதுளை சாப்பிடுவது நல்ல பலனளிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே ஊட்டசத்து நிறைந்த உணவுப்பொருள்கள், பிரஷான காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்வதோடு உடலுக்கு தேவையான சின்ன சின்ன உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் எப்போதும் இளமையாகவும், பிட்டாகவும் இருக்க முடியுமாம்.. இனி கொஞ்சம் இத ஃடிரைப் பண்ணிப்பாருங்கள்.

First published:

Tags: Fitness, Men Health