ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இறுக்கமான ஆடைகள் கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? ஜீன்ஸ் பேண்ட் அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?

இறுக்கமான ஆடைகள் கர்ப்பம் தரித்தலை பாதிக்குமா..? ஜீன்ஸ் பேண்ட் அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 53 : ஆடைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது உடம்பில் பதியாத வண்ணம் இருப்பது நல்லது. சாதாரணமாக நாம் அணியும் ஆடைகள் 50 % குறைவாகவே தோலோடு ஒட்டி இருக்கின்றன. இறுக்கமான ஆடைகள் அணியும் போது , 90% வரை கூடுதலாக தோலோடு ஒட்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லலிதாவும் கல்யாணியும் மென்பொருள் துறை வல்லுனர்கள்.

லலிதாவிற்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஆகிறது. லலிதா தன்னுடைய குடும்பத்தை துவங்க குழந்தைக்காக திட்டமிடுகிறார். அவருடைய அலுவலகத்தில் அனைவருக்கும் சீருடை போல இருப்பது ஜீன்ஸ் துணி கால் சட்டைகள் தான். இதுபோன்று இறுக்கமாக அணியும் ,ஆடைகளால் தனக்கு கர்ப்பம் தரிப்பதற்கு தாமதம் ஆகுமா? என்ற சந்தேகம் லலிதாவிற்கு இருந்தது.

அறிவியல் உண்மை என்ன? மிகவும் இறுக்கமாக ஆடை அணிந்தால் என்னென்ன பிரச்சனை வரலாம்?

ஆடைகளை தேர்ந்தெடுக்கும் பொழுது உடம்பில் பதியாத வண்ணம் இருப்பது நல்லது. சாதாரணமாக நாம் அணியும் ஆடைகள் 50 % குறைவாகவே தோலோடு ஒட்டி இருக்கின்றன. இறுக்கமான ஆடைகள் அணியும் போது , 90% வரை கூடுதலாக தோலோடு ஒட்டும். தோலுக்கு செல்லக்கூடிய காற்றோட்டம் மற்றும் தோலிலிருந்து வரக்கூடிய வியர்வை மற்றும் சுரப்புகள் வெளியேறுவதிலும் தடை ஏற்படுகிறது .

பருத்தி (அ) காட்டன் போன்ற ஈரத்தை உறிஞ்சக்கூடிய துணியாக இருந்தால் ஓரளவு பாதிப்புகள் குறையும். ஆனால் அதுவே பாலியஸ்டர் ,நைலான், போன்ற வியர்வை உறிஞ்சாத துணி வகை எனில் , பல்வேறு தோல் நோய்களும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. மேலும் நீண்ட காலம் உபயோகித்தால் தோலினுடைய தன்மையும் மாறுலாம்.

எந்த ஒரு ஆடையும் உடலின் ரத்த ஓட்டத்தை பாதிப்பதாக இருக்கக் கூடாது. அதிக இறுக்கமான உடைகள் ரத்த ஓட்டத்தை தொடர்ந்து பாதிக்கும் போது உடலினுடைய வெப்பநிலை சீரமைப்பு, ரத்த உறைதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் மரத்து போதல் போன்ற உணர்வு மாறுதல்கள் ஏற்படுவதற்கு காரணமாகலாம்.

மேலும் மிகவும் இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கு குறிப்பாக பேண்ட் போன்றவைகளால், இடுப்புக்கு கீழே உள்ள பகுதியில் ரத்த ஓட்டம் குறைவாக செல்லலாம். இது இயல்பாக உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம். இதை எவ்வாறு அடையாளம் காண்பது ? நாம் உடுத்தும் ஆடைகள் உடலில் பதிந்து அடையாளம் ஏற்படுத்தினால் அது சரியான அளவு அல்ல.

Also Read : கணவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தை பெறுவதில் தாமதமாகுமா..?

இறுக்கமாக அணியும் ஆடைகள் வயிறு சம்பந்தப்பட்ட ஏராளமான பிரச்சனைகளுக்கு காரண கர்த்தாவாக இருக்கலாம். குறிப்பாக வயிற்றில் உள்ள குடல் எளிதாக இயல்பாக அசைவதற்கு இறுக்கமான ஆடைகள் அனுமதிக்காததால் நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் மற்றும் மலம் கட்டுதல் போன்றவை ஏற்படலாம்.

இறுக்கமாக அணியும் இடுப்பு ஆடைகள் இடுப்பு பகுதியில் உள்ள தசைகளின் உடைய சமநிலை அசைவை பாதிப்பதால் கடுமையான முதுகு வலியும் இடுப்பு வலியும் உண்டாகலாம் மேலும் வளரும் பெண்களுக்கு வளர்ச்சியிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இறுக்கமாக அணியும் ஆடைகளால் இருதயம் குடல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆட்டோனாமிக் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம். அதனால் பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

Also Read : மேக்கப் சாதனங்கள் கூட கர்ப்பம் தரிப்பதை பாதிக்குமா..? மருத்துவர் தரும் ஷாக் ரிப்போர்ட்...

இறுக்கமான ஆடைகள் நேரடியாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை பாதிக்காது. ஆனால் லலிதா போன்று அலுவலகத்தில், இறுக்கமான ஆடை அணிந்து பல மணி நேரம் வேலை செய்யும் போது வியர்வையாலும் காற்று போகாமல் இருப்பதாலும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

இது போன்ற தொற்றுகள் பிறப்பு பாதையை பாதிக்கும் போது அவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பினை மறைமுகமாக தாமதிக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள் மிகவும் இறுக்கமாக ஆடை அணிந்தால் , கர்ப்ப காலத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றங்களில், மாறுதல்கள் ஏற்பட்டு பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். எனவே கர்ப்ப காலத்தில் தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Infertility, Pregnancy Chances, பெண்குயின் கார்னர்