ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தைராய்டு கண்கள் என்றால் என்ன..? அதன் காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..

தைராய்டு கண்கள் என்றால் என்ன..? அதன் காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்..

தைராய்டு கண்கள்

தைராய்டு கண்கள்

நமது கழுத்தின் அடிப்பகுதியில் பட்டர்பிளை வடிவில் இருக்கும் சுரப்பி ஒன்று முறையாக செயல்படாமல் போவதால் ஏற்படக் கூடிய ஹார்மோன் குறைபாடு தான் தைராய்டு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நமது கழுத்தின் அடிப்பகுதியில் பட்டர்பிளை வடிவில் இருக்கும் சுரப்பி ஒன்று முறையாக செயல்படாமல் போவதால் ஏற்படக் கூடிய ஹார்மோன் குறைபாடு தான் தைராய்டு ஆகும். நம் உடலுக்குத் தேவையான அளவில் ஹார்மோன்களை அந்த உறுப்பு சுரக்கவில்லை என்றால், நமது உடலில் பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும். அதில் ஒன்றுதான் தைராய்டு கண்கள்.

ஏற்கனவே தீவிரமான தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கு, தைராய்டு கண்கள் பிரச்சினை ஏற்படக் கூடும். சில சமயம், உங்களுக்கு ஏற்படும் முதல் அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

தைராய்டு கண்கள் என்றால் என்ன..?

கண்களை சுற்றியுள்ள தசைகள் மற்றும் திசுக்கள் மீது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நடத்தும் தாக்குதல் தான் தைராய்டு கண்கள் ஆகும். இதனால், கண்களில் அடுத்தடுத்த பிரச்சினைகள் உருவாகக் கூடும். தைராய்டு கண்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றில் சில

தைராய்டு கண் நோய். இது சுருக்கமாக TED1 என அழைக்கப்படுகிறது.

கிரேவ்ஸ் ஆப்தமோபதி

தைராய்டு சார்ந்த ஆட்பிடோபதி

கிரேவ்ஸ் ஆர்பிடோபதி

இந்தப் பாதிப்புகளுக்கான அறிகுறிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். சிகிச்சை எடுப்பதால் பார்வைத் திறன் இழப்பு பிரச்சினையை தடுக்க முடியும். தைராய்டு கண்கள் என்னும் குறைபாடு தைராய்டு நோய் மட்டுமல்லாமல் க்ரேவ்ஸ் நொய் மற்றும் ஹிஷிமோடோ நோய் ஆகியவற்றையும் ஏற்படுத்தக் கூடும்.

Fish Oil மாத்திரை விட்டமின் டி குறைபாட்டை போக்க உதவுமா..? நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

தைராய்டு கண்களின் அறிகுறிகள்

கண் வீக்கமாக இருப்பதே பொதுவான அறிகுறி ஆகும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, கண்களில் உள்ள செல்களை தாக்கும்போது, பொதுவாக உங்கள் கண் விழிகள் இடம்பெற்றிருக்கும் எலும்பை சுற்றியிலும் ஒரு வளையம் போன்ற வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால், அப்பகுதியில் உள்ள தசைகள், கொழுப்பு மற்றும் இதர திசுக்கள் விரிவடையும்.

கண்கள் சிவந்து காணப்படுவது

கண் எரிச்சல்

வலி மற்றும் அழுத்தம்

காய்ந்த அல்லது நீர் நிறைந்த கண்கள்,

இரட்டை பார்வை

வெவ்வேறு திசைகளில் பார்க்கும்போது கண்களில் வலி

வெளிச்சத்தை பார்க்கும்போது கூச்சம்

பார்வை மங்கலாக தெரிவது

உங்களது நோய் பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது, நீங்கள் என்ன மாதிரியான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தைராய்டு கண்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 6 மாதங்கள் அல்லது ஓராண்டு வரை இந்த பிரச்சினை நீடிக்க கூடும் அல்லது அவ்வபோது வந்து தொடர்ச்சியாக நீடிக்கும்.

சிகிச்சை முறை

உங்களுக்கு தைராய்டு கண்கள் பிரச்சினை இருந்தால், நீங்கள் உடனடியாக ஆப்தமாலஜிஸ்ட் நிபுணரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். உங்கள் கண்களில் உள்ள வீக்கத்தை ஆராய்ந்து அவர் உங்களுக்கு சிகிச்சை அளிப்பார். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

First published:

Tags: Eye Problems, Thyroid Symptoms