தொண்டைப் பகுதியில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ கிளாண்டு தான் தைராய்ட் சுரப்பு. கடந்த சில ஆண்டுகளாக தைராய்டு சுரப்பி குறைபாட்டால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பெண்களை அதிகமாக பாதிக்கும் இந்த ஹார்மோன் குறைபாடு, தற்போது டீன் ஏஜ் பிள்ளைகள், வளரும் குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளையும் கூட பாதித்து வருகிறது. ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாமல், குறைவான அளவு தைராய்டு சுரப்பதைக் குறிக்கும் ஹார்மோன் கோளாறு.
தைராய்டு ஹார்மோன் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஹார்மோனாக இருப்பதால், குறைவான தைராய்டு சுரக்கும் போது, அன்றாட செயல்பாடுகள் பலவும் பாதிக்கும். அதேபோல ஹைப்போ தைராய்டு குறைபாடு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள பல்வேறு அறிகுறிகள் உள்ளன. ஒரு சில அறிகுறிகள் வேறு சிலர் நோய்களுடனும் தொடர்புடையதாக இருப்பதால், ஹைப்போதைராய்டு பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு தாமதமாக விடுகின்றது. இப்பொழுது உங்கள் நகங்களில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தே உங்களுக்கு ஹைப்போ தைராய்டு கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதை பற்றி நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்
நகங்களின் நிறம், ஆரோக்கியம் உள்ளிட்டவை நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டும். பொதுவாகவே நகங்களில் ஏற்படும் மாற்றங்கள், உடலில் உள்ள குறைபாடு அல்லது உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நேரடியாக சுட்டிக்காட்டிவிடும். அந்த வகையில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கிறது அல்லது ஹார்மோன் சுரக்கவில்லை என்பதை உங்கள் நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் எளிதாக கண்டறியலாம்.
நாம் ஏன் நகங்களை கடிக்கிறோம்..? இந்த பழக்கத்தை நிரந்தரமாக நிறுத்துவது எப்படி..?
தைராய்டு ஹார்மோன்கள் உடலின் செயல்பாடுகளைக் குறைக்கும். அதன் விளைவாக, நகங்கள் எளிதில் உடையத் தொடங்கும், வளர்ச்சி குறையும். அதே போல, நகங்கள் வளைவாகக் காட்சியளுக்கும், இரண்டாகப் பிரியும், நகங்களே இரண்டாக உரியும் அளவுக்கு பலவீனமாக இருக்கும். சிலருக்கு, நகங்களின் வேரிலிருந்தே பாதிப்பு ஏற்படும். கை விரல்களில் மட்டுமல்லாமல், கால் விரல்களிலும் பாதிப்புகள் தீவிரமாக இருக்கும். கால் விரல்கள் வறண்டு, மோசமாக காணக்கூடும்.
ஹைபோதைராய்டிசத்தின் மற்ற அறிகுறிகள்
தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கு எல்லாருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படாது ஆனால் இதற்கென்று பொதுவான ஒரு சில அறிகுறிகள் இருக்கும் அவை பின்வருமாறு:
- தீவிரமான சோர்வு
- எடை அதிகரிப்பு
- பசியின்மை
- முடி, சரும வறட்சி
- தீவிரமான முடி உதிர்வு
- ஆர்வமின்மை, மனச் சோர்வு, எரிச்சலான மனநிலை
- குளிரை தாங்க முடியாத நிலை
- ரத்த சோகை, பெண்களுக்கு மாதவிடாயில் கோளாறு
- முகம் வீக்கமாக இருப்பது
- மலச்சிக்கல்
- மூட்டுகளில், திசுக்களில் வீக்கம் மற்றும் வலி
பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த குறைபாட்டுக்கு நிரந்தர தேர்வு கிடையாது. மருந்து, உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மேற்கொள்வதன் மூலம், தைராய்டு குறைபாட்டை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.