ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தைராய்டு குறைபாட்டால் மூளை சேதம் அதிகரிக்கும் ஆபத்து - புதிய ஆய்வு.!

தைராய்டு குறைபாட்டால் மூளை சேதம் அதிகரிக்கும் ஆபத்து - புதிய ஆய்வு.!

dementia

dementia

Thyroid and Dementia | சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று, ஹைபோஹைராய்டிசம் என்ற குறைவான தைராய்டு செயல்பாடு பாதிப்பு கொண்டவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்று வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டிமென்ஷியா (Dementia) என்பது மிகவும் தீவிரமான மூளை சேதத்தின் ஒரு வடிவமாகும். இது அறிவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த நோயினால் நினைவாற்றல் இழப்பு, சிந்திக்கும் திறனில் குறைபாடு அல்லது பகுத்தறிவுடன் நடந்து கொள்வது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த நிலை ஒரு பெரிய அளவிலான உணர்ச்சி ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும், நடத்தையில், மற்றவர்களுடன் உரையாடுவதில் மற்றும் தினசரி செயல்பாட்டையும் பாதிக்கும். டிமென்ஷியா ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்துள்ளன. சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று, ஹைபோஹைராய்டிசம் என்ற குறைவான தைராய்டு செயல்பாடு பாதிப்பு கொண்டவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது என்று வெளியிட்டுள்ளது.

ஹைப்போ தைராய்டிசம் என்றால் என்ன?

கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு கிளாண்டு தான் தைராய்டு கிளாண்டு. இந்த உறுப்பில் தைராய்டு என்ற ஹார்மோன் உற்பத்தியாகும். உடலிலுள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த ஹார்மோன் சரியான அளவில் உற்பத்தியாவது அவசியம். இதன் உற்பத்தி குறைந்தாலோ அல்லது இந்த ஹார்மோன் சுரக்கவில்லை என்றாலோ உடலின் சமநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு குறைப்பாடுகள் ஏற்படும். எடை அதிகரிப்பு, தீவிரமான உடல் சோர்வு, முடி உதிர்வு, உடலின் மெட்டபாலிசம் குறைவு உள்ளிட்ட பல அறிகுறிகள் தோன்றும். அதே போல, உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாக தைராய்டு சுரந்தால், அதன் பெயர் ஹைப்பர்-தைராய்டிசம் ஆகும்.

தைராய்டு குறைபாடு மற்றும் டிமென்ஷியாவுக்கு இடையே உள்ள தொடர்பு - ஆய்வு விவரங்கள் :

தைராய்டு குறைபாடு இருப்பவர்களுக்கு டிமென்ஷியா ஆபத்து இருக்கிறதே தவிர தைராய்டு பாதிப்பு இருந்தாலே அது டிமென்ஷியாவுக்கு காரணமாக அமைவது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பதை கண்டறிவதற்கு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் தாய்வானில் புதிதாக டிமென்ஷியா நோய் கண்டறியப்பட்ட 7,843 நபர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மற்றும் இதே எண்ணிக்கையிலான, டிமென்ஷியா இல்லாத நபர்களும் ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வில் கலந்து கொண்ட நபர்களின் சராசரி வயது 75 ஆகும்.

Also Read : சியா விதைகள் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துமா..? ஆய்வு தரும் பதில்

ஆய்வில் பங்கேற்ற நபர்களில் யாருக்கெல்லாம் தைராய்டு குறைபாடு இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அவர்களுடைய மெடிக்கல் ஹிஸ்டரியை வைத்து கண்டறிந்தனர். இதில் ஹைபோதைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்ற இரண்டு குறைபாடுகளுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவற்றில் 102 நபர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் 133 நபர்களுக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

ஆய்வின் முடிவு படி ஹைப்பர் தைராய்டிசம், அதாவது அதிக அளவு தைராய்டு சுரக்கும் குறைபாடு இருப்பவர்களுக்கும் டிமென்ஷியாவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர், ஆனால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 68 நபர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். மேலும், டிமென்ஷியா பாதிப்பு ஏற்படக்கூடிய மற்ற காரணங்களான வயது, பாலினம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகிய காரணங்களையும் ஒருங்கிணைத்து ஆய்வாளர்கள் கூடுதல் ஆய்வு மேற்கொண்ட பொழுது 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் ஹைப்போ தைராய்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், தைரைடு குறைபாடு இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, அவர்களுக்கு 80% டிமென்ஷியா நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று கூறினார்கள்.

Also Read : வெவ்வேறு வயதினருக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளை வெளிப்படுத்திய ஆய்வு!

65 வயதுக்கும் குறைவானவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான ஆபத்து அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மட்டும் இல்லாமல், டிமென்ஷியா வருவதற்கு தைராய்டு ஒரு முக்கியமான காரணமாக இருக்குமா என்பதை உறுதி செய்ய கூடுதலாக ஆய்வுகளும் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

First published:

Tags: Dementia Disease, Health, Thyroid