ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தைராய்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்... கேன்சரில் இருந்து மீண்டவரின் அனுபவம்!

தைராய்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்... கேன்சரில் இருந்து மீண்டவரின் அனுபவம்!

தைராய்டு புற்றுநோய்

தைராய்டு புற்றுநோய்

கழுத்தில் கட்டி இருப்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக தெரிவித்த கிறிஸ்டினா, அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவரின் சரியான டயக்நோசிஸ் மூலம் உரிய நேரத்தில் முழுமையாக குணமடைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தைராய்டு புற்றுநோய், சமீப காலமாக அதிகரித்து வரும் கேன்சர் வகைகளில் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் அல்லது உடலுக்கு தேவையானதை விட குறைவாக சுரக்கும் தைராய்டு ஹார்மோனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தைராய்டு கிளாண்டு ஆரோக்கியத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது அவசியமான நிலையாக மாறிவிட்டது. எனவே, கேன்சர் அறிகுறிகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

இந்த அறிகுறிகளை கவனிக்காமல், தைராய்டு கேன்சர் முற்றிய நிலையில் கண்டறியப்படும்போது சிகிச்சை பலனளிக்காமல் போகும் அபாயமும் இருக்கிறது. தைராய்டு புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறிகள் பற்றி தைராய்டு புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்ட இளம்பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

கிறிஸ்டினா மெக்நைட் என்ற 27 வயதான இளம்பெண் தைராய்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு இருக்கிறார். இவருடைய குடும்பத்தில் யாருக்குமே தைராய்டு கேன்சர் பாதிப்பு இதுவரை ஏற்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்டினாவும் இளமையான, ஆரோக்கியமான பெண்ணாகவே அறியப்பட்டிருக்கிறார். ஆனால், எச்சரிக்கை தைராய்டு புற்றுக்கான எச்சரிக்கை அறிகுறிகளை பல வாரங்களாக கண்டுகொள்ளாமல் விட்டதைப் பற்றி இவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்.

Also Read : ஃபுளூ வேக்சின் போட்டுக்கொள்வதால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாமா..? எய்ம்ஸ் புதிய ஆய்வு..!

ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையைப் பின்பற்றுபவர்களுக்குத்தான் பல விதமான நோய்கள் ஏற்படும் என்று பொதுவான கருத்து நிலவிவருகிறது. ஆனால், கிறிஸ்டினாவைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர், ஒரு ஃபிட்டான ஆரோக்கியமான பெண். மாரத்தான் ஓடியுள்ளார், மூன்று ஆண்டுகள் கிராஸ்ஃபிட் செய்துள்ளார் மற்றும் குடும்பத்தில் யாருக்கும் இந்த பிரச்சனை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தைராய்டு புற்றுநோய் பற்றிய 5 எச்சரிக்கை அறிகுறிகள்

தைராய்டு புற்றுநோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகளாக கிறிஸ்டினா, தீவிரமான உடல் சோர்வு, மனக்குழப்பம், வறட்சியான சருமம் மற்றும் முடி ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கிறிஸ்டினாவுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தது, அந்த விளைவு தான் அறிகுறிகள் என்று நினைத்துக்கொண்டிருந்தார்.

Also Read : இந்த உணவுகளை உட்கொண்டால் தலைவலி ஏற்படுமா..? நிபுணர்கள் விளக்கம்!

* பிரைன் ஃபாக் எனப்படும் மிகவும் மந்தமான, தெளிவற்ற, எதுவுமே புரியாத நிலை

* மனக்குழப்பம்

* உடல் சோர்வு

* முடி மிக மிக பலவீனமாகி உடைந்து போவது

* தீவிரமான சரும வறட்சி

பதவி உயர்வு காரணமாக அதிகப்படியான வேலை மற்றும் நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிக்க ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வேலை செய்வதால் தான் உடலும் மனமும் சோர்வாக இருக்கிறது, குழப்பமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்ததாக கிறிஸ்டினா தெரிவித்திருக்கிறார். கணவரின் வற்புறுத்தலின் பேரில், மருத்துவரை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்காக சென்றிருக்கிறார். ஸ்கேன் மற்றும் பயாப்சி மேற்கொண்ட போது இவருக்கு தைராய்டு கேன்சர் இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

தைராய்டு கிளாண்டை நீக்குமாறு மருத்துவர் ஆலோசனை தெரிவித்தார். தைராய்டு கிளாண்டு அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டு, பிறகு மற்றொரு மருத்துவரின் ஆலோசனையின் படி, கிளாண்டில் இருக்கும் கேன்சர் செல்களின் மிச்சத்தை ரேடியோ ஆக்டிவ் அயோடின் தெரபி சிகிச்சையை மேற்கொண்டார்.

கழுத்தில் கட்டி இருப்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக தெரிவித்த கிறிஸ்டினா, அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவரின் சரியான டயக்நோசிஸ் மூலம் உரிய நேரத்தில் முழுமையாக குணமடைந்துள்ளார். கிளாண்டு நீக்கினாலும், தைராய்டு ஹார்மோனை ஊசி மூலம் பெற்று வருகிறார்.

First published:

Tags: Cancer, Thyroid Symptoms