ஆண்டு தோறும் ஜனவரி மாதம் தைராய்டு விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைராய்டு என்பது நமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி ஆகும். பட்டாம்பூச்சி வடிவ இந்த சுரப்பி நமது மெடபாலிச நடவடிக்கைகள் தொடர்பான ஹார்மோன்களின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
நம் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு இது பொறுப்பாகும். தைராய்டு சுரப்பி மிக குறைவாக அல்லது அதிகமாக ஹார்மோன்களை உற்பத்தி செய்தால் ஏற்படும் நிலையே தைராய்டு நோய். பொதுவாக தைராய்டு பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. தைராய்டு சிக்கல் பற்றி பிரபல நிபுணர் ஹிமானி இன்டிவார் கூறுகையில், ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு கோளாறு வருவதற்கான வாய்ப்பு 5 முதல் 8 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.
தைராய்டு பிரச்சனை எந்த வயதினரையும் பாதிக்கலாம் என்றாலும் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த அல்லது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். தைராய்டில் இரண்டு டைப் இருக்கின்றன. உடலில் தைராய்டு ஹார்மோன் குறைவாக இருக்கும் நிலை ஹைப்போ தைராய்டிசம் என்றும், உடலில் தைராய்டு ஹார்மோன் அதிகமாக இருக்கும் நிலை ஹைப்பர் தைராய்டிசம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அறியப்படாத காரணங்களால் உடலில் ஹார்மோன்களின் அதிகரிக்கும் போது அல்லது குறையும் போது இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன.
ஹைப்போதைராய்டிசம் (Hypothyroidism) இருப்பதற்கான அறிகுறிகள்:
தீவிர அறிகுறிகள் வெளிப்படும் வரை சில பிரச்சனைகளுக்கு தைராய்டு சுரப்பி காரணம் என்பதை நம்மால் அறிய முடியாமல் போகலாம். உதாரணமாக கரடுமுரடான மற்றும் வறண்ட சருமம் மற்றும் எளிதில் உடைய கூடிய நகங்கள் ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான அறிகுறிகளாக பட்டியலிடப்பட்டுள்ளன. ஹைப்போ தைராய்டிசம் இருப்பதற்கான மிக பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு.
- அடிக்கடி சோர்வாக இருப்பது
- காரணமேயின்றி டிப்ரஷனில் சிக்கி தவிப்பது
- உடல் எடை அதிகரிப்பு
- மலச்சிக்கல் மற்றும் திடீர் எடை அதிகரிப்பு
- வழக்கத்தை விட வியர்வை குறைவாக வெளியேறுவது, குளிருக்குக்கு சென்சிட்டிவாக இருப்பது, ஹார்ட் ரேட் குறைவது, சரும வறட்சி
- அதிகரித்த பிளட் கொலஸ்ட்ரால், நினைவாற்றல் பலவீனமடைவது, தசைகள் பலவீனமடைவது
- தசை விறைப்பு மற்றும் வலி
- வறண்ட முடி மற்றும் நன்கு அடர்த்தியாக இருந்த கூந்தல் திடீரென மெலிவது
- மூட்டுகளில் விறைப்பு மற்றும் வலி
Also Read : உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கா..? இதில் தினம் ஒன்று உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்..!
தைராய்டு பிரச்சனையை அனுபவித்து வரும் பெரும்பாலான மக்கள் அறிகுறிகளின் மெதுவான முன்னேற்றத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மேற்காணும் அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து தைராய்டு கோளாறு உள்ளதா என்பதை அறிய ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hypothyroidism, Thyroid, Thyroid Symptoms