கொரோனா வைரஸ் பெருந்தொற்று எலும்பு தொடர்பான பிரச்சனைகளை அதிகரித்துள்ளதா?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று எலும்பு தொடர்பான பிரச்சனைகளை அதிகரித்துள்ளதா?

கோப்புப் படம்

நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நிறைய கால்சியத்தை உட்கொள்ள மருத்துவர்கள் எப்போதும் உங்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
எலும்புகள் நம் உடலுக்கு கட்டமைப்பை வழங்குகின்றன. முக்கியமாக இவை உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றன. மேலும் கால்சியத்தை சேமிக்கவும் உதவுகின்றன. உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்துவதில் கால்சியத்தின் பங்கு அதிகம். அதனால்தான் நீங்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நிறைய கால்சியத்தை உட்கொள்ள மருத்துவர்கள் எப்போதும் உங்களுக்கு பரிந்துரைக்கின்றனர். உங்கள் குழந்தை பருவத்திலும் இளமை பருவத்திலும் எலும்புகளை வலுவாக வைத்திருப்பது அவசியம்.

ஆனால் நீங்கள் வயது முதிர்வை எட்டும்போது உங்கள் எலும்புகளை கவனித்துக்கொள்வது இன்னும் முக்கியம். முதுமை உங்கள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. மேலும் அவை கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலைமைகள் உங்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். மேலும் இந்த பிரச்சனைகள் உங்கள் முழு எலும்பு அமைப்பையும் சேதப்படுத்தும். எலும்புகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள பழைய எலும்புகள் வயதுக்கு ஏற்ப புதிய எலும்புகளாக மாறுகின்றன. உங்கள் வயதுக்கேற்ப எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் பல நிலைமைகள் உள்ளன.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வகையில், கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலகளவில் பரவி அனைவரையும் வீட்டிற்குள்ளேயே அடைத்தது. இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகள் ஊரடங்கை அறிவித்தன. இதனால் இந்தியாவில் பள்ளிகள், கல்லூரி, அலுவலகங்கள் என அனைத்து துறைகளும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக மூடப்பட்டன. இதனால் வீட்டில் இருந்தபடியே படிப்பு, வேலைகள் ஆகியவற்றை கடைபிடித்து வருவதால் உடல்நலம் தொடர்பான நிறைய பிரச்சினைகளை மக்கள் சந்தித்தனர். அதில் பலர் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சந்தித்துள்ளனர். அதன்படி கொரோனா பெருந்தொற்று ஒருவரின் எலும்பு ஆரோக்கியத்தை எவ்வாறு பாதித்தது என்பதைப் பார்ப்போம்.

தொற்றுநோய்களின் போது எலும்பு பிரச்சினைகள் அதிகரித்ததற்கான காரணிகள்:

1. குறைவான உடல் செயல்பாடு: ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கமான உடற்பயிற்சிகளுக்காக அவர்களால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை. அதேபோல காலை அல்லது மாலை நடைப்பயணத்திற்கு வெளியே செல்ல முடியவில்லை. இது மக்கள் அனைவரையும் படுக்கை உருளைக்கிழங்காக மாற்றியது. வீட்டிலேயே இருந்ததால் உடல் இயக்கம் பெரும்பாலும் குறைக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலியை அனுபவிக்கத் தொடங்கினர்.

Also read... 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைப்பு - ஐசிஐசிஐ வங்கியின் புதிய அறிவிப்பு!

2. வைட்டமின் டி குறைபாடு: வைட்டமின் டி-யின் முக்கிய ஆதாரமாக இருப்பது சூரியன். ஊரடங்கு காலத்தில் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்பதால் மக்களிடம் வைட்டமின் டி குறைபாடு அதிகரித்தது. இந்த குறைபாட்டிலிருந்து விடுபட நீங்கள் குறைந்தது 30 நிமிடங்கள் சூரியனில் உட்கார வேண்டும். இதனால் உங்கள் உடல் அனைத்து வைட்டமின்டி சக்தியையும் எளிதில் உறிஞ்சிவிடும். வைட்டமின் டி குறைபாடு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல எலும்பு நோய்களை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை வந்தால் மிகவும் தொந்தரவாக இருக்கும்.

3. திடீர் எடை அதிகரிப்பு: தொற்றுநோய்க்கு முன்னர் ஒல்லியாக இருந்த மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரித்த பலர், உடற்பயிற்சியின்மை மற்றும் சமநிலையற்ற உணவு காரணமாக திடீரென்று எடை அதிகரித்ததாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த திடீர் எடை அதிகரிப்பு எலும்புகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அவற்றை பலவீனப்படுத்துகிறது. இது எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் எலும்பு முறிவு உள்ளிட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

கடந்த ஒரு வருடமானாக கொரோனா தொற்றுநோய் பல வழிகளில் நம்மை பாதித்துள்ளது. ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டிய மிகவும் அவசியம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: