Weight loss | உடல் எடையைக் குறைக்க தினமும் செய்யவேண்டிய மூன்று விதமான சிம்பிள் வொர்க் அவுட்ஸ்!

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 முதல் 300 நிமிடங்களுக்கு வலுவான இருதய செயல்பாட்டை வழங்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 முதல் 300 நிமிடங்களுக்கு வலுவான இருதய செயல்பாட்டை வழங்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

  • Share this:
உடல் எடையை திறம்பட குறைக்க, மருத்துவ நிபுணர்கள் ஒரு உடற்பயிற்சி வழக்கத்திலிருந்து இன்னொரு உடற்பயிற்சிக்கு செல்வதற்கு பதிலாக, மூன்று முக்கிய பாரம்பரிய உடற்பயிற்சிகளான ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சி, கார்டியோ பயிற்சி மற்றும் உடல் வலிமைக்கான பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது சிறந்தது என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஸ்ட்ரெட்ச் பயிற்சிகள்:

ஸ்ட்ரெட்ச்சிங் என்பது எந்தவொரு வொர்க் அவுட்டின் வழக்கமான ஒரு தவிர்க்க முடியாத பகுதியாகும். ஆரோக்கியமாக இருக்க முயற்சித்தாலும் அல்லது உடல் எடையைக் குறைத்தாலும், ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை தவறவிட முடியாது. ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள் உங்கள் எடையைக் குறைக்க நேரடியாக உதவாது, ஆனால் உங்களை காயப்படுத்தாமல் மிகவும் திறமையாக உடற்பயிற்சிகளை செய்ய இயக்கத்தை அதிகரிக்கும். ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளைச் செய்ய குறைந்த இடமே தேவை. ஃபெலெக்சிபிலான உடல், அதிக கலோரிகளை எரிக்கும் வாய்ப்புகளை ஸ்ரெட்ச்சிங் பயிற்சிகள் அதிகரிக்கும். பட்டாம்பூச்சி ஸ்ட்ரெட்ச்சிங், குளுட் பிரிட்ஜ் போன்ற அனைத்தும் உங்கள் வழக்கமான உடற்பயிற்சியில் சேர்க்க சிறந்த ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகள் ஆகும்.

Must Read | Explainer | சத்தமில்லாமல் பலவீனமாகும் நோய் எதிர்ப்பு மண்டலம்… அறிகுறிகள் என்னென்ன? ஓர் அலர்ட் பார்வை!

கார்டியோ பயிற்சி:

கார்டியோ அல்லது கார்டியோவாஸ்குலர் பயிற்சிகள் உங்கள் இதயத் துடிப்பை சீராக்கி நுரையீரலை பாதுகாத்து கடினமாக வேலை செய்ய உதவும். உயிரணுக்களுக்கு ஆற்றல் அளித்து மற்றும் கலோரிகளை எரிக்க அதிக ஆக்ஸிஜனை வழங்க அதிகரிக்கும் சுவாச விகிதம் உதவுகிறது. இந்த வகையான உடற்பயிற்சி, எடை குறைப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், இதய சகிப்புத்தன்மை மற்றும் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. கார்டியோ பயிற்சிகளைச் செய்வதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 முதல் 300 நிமிடங்களுக்கு வலுவான இருதய செயல்பாட்டை வழங்க உதவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் வலிமைக்கான பயிற்சி:

அதிக கலோரிகளை எரிக்க உதவாது என்பதால், உடல் வலிமைக்கான பயிற்சி எடையைக் குறைக்க ஒரு சிறந்த தேர்வு அல்ல என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், இதற்கு மாறாக, எடை தூக்குவது நாள் முழுவதும் உங்கள் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது என்பது தெரியுமா? தவிர, இது உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையையும் அதிகரிக்கிறது. மேலும்,  ஆரோக்கியமான தசை திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது. உடல் வலிமை பயிற்சி என்பது எடையை தூக்குவது மட்டுமல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிளாங்க், புஷ்-அப்கள், ஸ்குவாட்ஸ் மற்றும் க்ரஞ்சஸ் போன்ற உடல் எடை பயிற்சிகளும் கூட இந்த வகையின் கீழ் வருகின்றன. எனவே, நீங்கள் எந்த வகையான பயிற்சிகளைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பது முற்றிலும் உங்களுடைய விருப்பம்- எடை தூக்குதல் போன்றவை சிறந்தவை. நிபுணர்களின் கூற்றுப்படி, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட உடல் வலிமை பயிற்சிகள் செய்தால் போதும், நீங்கள் விரும்பிய உடல் எடையைப் பெற முடியும் என்கின்றனர்.
Published by:Archana R
First published: