Home /News /lifestyle /

எவ்வளவு முயற்சி செய்தாலும் பெண்களுக்கு இந்த 3 டயட் பிளான்கள் மட்டும் பலன் அளிக்காதாம் - வல்லுநர்கள் தகவல்..!

எவ்வளவு முயற்சி செய்தாலும் பெண்களுக்கு இந்த 3 டயட் பிளான்கள் மட்டும் பலன் அளிக்காதாம் - வல்லுநர்கள் தகவல்..!

டயட் திட்டம்

டயட் திட்டம்

ஆண்களை விட பெண்களின் உடலில் 4 மடங்கு அதிகமாக இருக்கும் கொழுப்பு அவர்களுக்கு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படுவதில் இருந்து காக்கிறது.

அறிவியல் ரீதியாக ஆண் மற்றும் பெண் இருவரும் மிகவும் வேறுபட்டவர்கள். பெண்களின் உடல் இயக்கம், உள் உறுப்புகளின் செயல்பாடு என பல விஷயங்கள் மாறுபடுகின்றன. குறிப்பாக ஆண் மற்றும் பெண்கள் உடலில் கொழுப்பை சேகரித்து வைப்பது மற்றும் உடல் அதனை செலவழிக்கும் வழிமுறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உடலில் உள்ள அத்தியாவசிய கொழுப்பை பெறுத்தவரை, ஆண்களுக்கு 3 சதவீத கொழுப்பும், பெண்களுக்கு 12 சதவீத கொழுப்பும் உள்ளது.

இந்த கொழுப்பு நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது ஆகும், இது இல்லாமல் நமது உடல் இயங்காது. நோயெதிர்ப்பு மற்றும் நரம்பியல் அமைப்புகள் பாதிக்கப்படும். கொழுப்பு நமது உடலின் முக்கிய உறுப்புகளை பாதுகாக்கும் இன்சுலேஷன் போல் செயல்படுகிறது.

ஆண்களை விட பெண்களின் உடலில் 4 மடங்கு அதிகமாக இருக்கும் கொழுப்பு அவர்களுக்கு டைப் 2 நீரழிவு நோய் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படுவதில் இருந்து காக்கிறது. பெண்கள் தங்களது உடலில் இருந்து 15 முதல் 20 கிலோ வரை எடையை குறைக்க கீட்டோ டயட், இன்டர்மிடென்ட் பாஸ்டிங், ஜிஎம் டயட் ஆகியவற்றை பின்பற்றினால், இந்த மூன்றுமே இலக்கை அடைய பலனளிக்காது என்பது தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்று அறியலாம்....கீட்டோ டயட் :

கீட்டோஜெனிக் டயட் என்பது குறைந்த கார்ப், அதிக கொழுப்புள்ள உணவு என்பதாகும். கார்போஹைட்ரேட்டுகளை கட்டுப்படுத்துவது மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை அதிகரிப்பது கெட்டோசிஸுக்கு வழிவகுக்கும், இது ஒரு வளர்சிதை மாற்ற நிலை, இந்த டயட் மூலம் உங்கள் உடல் முதன்மையான ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக கொழுப்பை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

கீட்டோ டயட் முறையில் 50 கிராமுக்கும் குறைவான அளவே கார்ப்போஹைட்ரேட்டை உட்கொள்ள வேண்டியிருக்கும், இதனால் உடலின் ஆற்றலுக்கு கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெண்களின் மூளை மற்றும் வளர்சிதை மாற்றம் கொழுப்பு இழப்பை எதிர்க்கத் தொடங்குகிறது. இது ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் முழுமையான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது.

வாழ்க்கை முறையில் இந்த மாற்றங்களை செய்தாலே போதும்… வொர்க்அவுட் செய்யாமலேயே எடையை குறைக்கலாம்!

கீட்டோ வகை உணவுகள் பொதுவாக குறுகிய காலத்திற்கு மட்டுமே செயல்படும் மற்றும் தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, குமட்டல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், ஆரம்ப எடை இழப்பில் பெரும்பாலானவை உடலில் உள்ள வாட்டர் வெயிட்டாக தான் இருக்கும். இதனால் உடல் தசைகள் வலுவழந்து, சோர்வடைய வைக்கிறது.

குறிப்பாக PCOS, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருவுறாமை போன்ற ஏதேனும் அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கீட்டோ உணவு முறை அதிக தீங்காக அமைகிறது.இன்டர்மிடென்ட் பாஸ்டிங் :

இன்டர்மிடென்ட் பாஸ்டிங் செயல்முறையில் ஒருவர் 12 முதல் 18 மணி நேரம் வரை நீண்ட நேரத்திற்கு உண்ணாவிரதம் இருக்கலாம் அல்லது சில உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களிடையே இடைப்பட்ட உண்ணாவிரத முறைபிரபலமாகி வருகிறது. சமீப ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, இடைப்பட்ட உண்ணாவிரதம் அதிக எடை அல்லது பருமனான நபர்களுக்கு சாதகமான முடிவுகளைத் தந்தாலும், அதை முயற்சித்த பெண்கள் பின்வரும் எதிர்மறையான விளைவுகளை கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி தொப்பையை குறைக்க உதவுமா..? இப்படி நடந்தால் மட்டுமே சாத்தியம்..!

கடுமையான மூடு ஸ்விங், அதீத பசி, சோர்வு, உணவைப் பற்றிய வெறித்தனமான எண்ணங்கள், தடைசெய்யப்பட்ட கலோரிகள் இல்லாத நாட்களில் அதிகமாக சாப்பிடுவது, மனச்சோர்வு, கோபம் போன்றவை ஏற்பட காரணமாக அமைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த முறையில் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அது பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் சிக்கல்களை உண்டாக்க கூடும் என்றும் தெரியவந்துள்ளது.GM டயட் :

GM டயட் ஒவ்வொரு நாளும் ஒரு வாரத்திற்கு ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது சில உணவு வகைகளின் தொகுப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. GM உணவானது 7 நாள் உணவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது உணவுக் குழுவில் கவனம் செலுத்துகிறது.

ஃபிட்டாக மற்றும் ஆரோக்கியமாக இருக்க இந்த 3 உடற்பயிற்சி விதிகளை பின்பற்றுங்கள்..

இந்த டயட் முறையை சில வாரம் தொடர்ந்து பின்பற்றினால், நீரிழப்பு, தலைவலி, சோர்வு, தசை பலவீனம் மற்றும் கவனம் செலுத்த இயலாமை ஆகியவை பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளாகும். சீரான கலோரி உட்கொள்ளல் - கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகியன பெண்கள் கர்ப்பம் அடைவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாக உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் பெண்கள் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diet Plan, Weight loss, Women Health

அடுத்த செய்தி