எண்டோமெட்ரியாசிஸ் என்பது பெண்களின் கருப்பையை தாக்கக் கூடிய ஒரு டிஸ்ஆர்டர் ஆகும். கருப்பை சுவர்களில் கூடுதலான திசுக்கள் வளரும். இதனால் மாதவிடாய் கோளாறு, குழந்தையின்மை ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதுமட்டும் இல்லாமல் இது மிகவும் வலி நிறைந்த ஒரு நோயாகும். அதன் தீவிர பாதிப்பால் உருவாவதே தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் என்று கூறப்படுகிறது.
இது நுரையீரலை தாக்கக் கூடிய ஒரு நோய் . இது நுரையீரலைச் சுற்றி திசுக்கள் வளர்வதைக் குறிக்கின்றது. இந்த நோயால் மார்பக வலி, மூச்சு விடுவதில் சிரமம், மாதவிடாய் நாட்களில் தீவிரமான இருமல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். பெண்களை மட்டுமே பாதிக்ககூடிய எண்டோமெட்ரியோசிஸ், தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் மெட்ரோசிஸ் ஆகிய இரண்டுமே வெவ்வேறானவை. இந்த நோய் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் எதனால் ஏற்படுகிறது?
ஒரு குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படுகிறது என்று எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இருப்பினும் ஹெல்த்லைன் வெளியிட்ட அறிக்கையின்படி பலவித காரணங்களால் நுரையீரலைச் சுற்றி திசுக்கள் வளரலாம் என்று கூறப்படுகிறது. Retrograde menstruation என்று கூறப்படும், கருமுட்டை டியூபில் இருந்து உடலில் பல்வேறு பாகங்களுக்கு எண்டோமெட்ரியல் செல்கள் வளர்வதும் முக்கிய காரணமாக இருக்கலாம். கருப்பை சுவரில் இருக்கும் எண்டோமெட்ரியல் செல்கள் மற்றும் திசுக்கள் அங்கிருந்து விலகி, வேறு வேறு இடங்களில் ஒட்டிக் கொண்டு வளரத் துவங்கும்.
எனவே, கருப்பையில் இருந்து விலகிய திசுக்கள் நுரையீரலைச் சுற்றி வளர்வது தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் நோய் கண்டறிதல்
அவ்வளவு எளிதாக தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் இருப்பதை கண்டறிய முடியாது என்று ஹெல்ப்லைன் தெரிவித்து உள்ளது. இது மிகவும் அரிதான ஒரு குறைபாடு என்பதால் மருத்துவர்களால் உடனடியாக இந்த பாதிப்பு இருக்கிறதா என்பதை கூற முடியாது. அதுமட்டும் அல்லாமல், இருமல் என்பது பலவிதமான நோய்களுடன் தொடர்புடையது. எனவே ஒரு நபருக்கு தீவிரமான இருமல் இருந்தால் அவருக்கு இந்த குறைபாடு இருக்கிறது என்பதை டயாக்னோஸ் செய்ய முடியாது.
எனவே மார்பக எக்ஸ்ரே, சி டி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஆகிய பரிசோதனைகள் மூலம் தான் இந்த பாதிப்பு இருக்கிறதா என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். நுரையீரலை சுற்றி திசுக்கள் வளர்வதால் இது மூச்சு விடுவதில் மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தி உயிருக்கே கூட ஆபத்தாக விளையும்.
தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சைகள்
எப்படி பெல்விக் எண்டோமெட்ரியோசிஸ் குறைபாட்டுக்கு நிரந்தர தீர்வு இல்லையோ, அதே போல தொராசிக் எண்டோமெட்ரியோசிஸ்கும் தீர்வு இல்லை. ஆனால், உங்களுடைய அறிகுறிகளின் தன்மைக்கு ஏற்றவாறு நோய் தீவிரமாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் சிகிச்சையை முடிவு செய்வார்கள்.
Also Read : குளிர்காலத்தில் உங்கள் நுரையீரல் ஆரோக்கியம் கெடாமல் இருக்க சில ஆயுர்வேத முறைகள்!
அதிக ஹார்மோன்கள் காரணமாக எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகள் தீவிரமாகும். எனவே, மருத்துவர்கள் ஹார்மோன்கள் குறைய அல்லது கட்டுக்குள் இருப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். ஹார்மோன் கட்டுப்பாட்டு சிகிச்சையின் மூலம், எண்டோமெட்ரியல் திசுக்கள் வளர்ச்சி குறையும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Health tips, Lungs Cancer, Lungs health